Friday, 21 February 2014

குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாயிருக்கலாம் எனும் நம்பிக்கை பலரிடமுள்ளது. இது உண்மைதானா?

குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் கொடுக்காது. 

குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.

மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்
வயிற்றுப் பிரச்சனைகள் தீர அங்காயப் பொடி!

சின்னக் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட வாயை வயிற்றைக் கட்டுப்படுத்துவது மிகக் குறைவுதான். ஆசைப்பட்டதெல்லாம் சாப்பிட்டு விட வேண்டியது. பிறகு அவதிப்பட வேண்டியது.

வயதுக்கேற்ற தன்மையில் உணவு, உணவின் அளவு, உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருள் இவற்றில் கவனம் செலுத்தினால் வயிற்று உபாதைகளைக் கட்டுப்படுத்த முடியும் ஆனால் இதில் கவனம் பிசகுகிறபோது என்ன செய்யறது...?

ஒன்னும் கவலைப்படாதீங்க இதுக்காகவே இருக்கு அங்காயப் பொடி, அதென்ன அங்காயப்பொடி?

சுக்கு ஒரு துண்டு, மிளகு இருபது, சீரகம் கால் கரண்டி, வெந்தயம் கால் கரண்டி, வேப்பம்பூ அரைக் கரண்டி எடுத்துக்கணும்.

முதலில் இவைகளை மிதமாக வறுத்துப்பொடி செய்யணும். அத்துடன் நல்லெண்ணெயில் பொறித்த கருவேப்பிலைப் பொடி கால் பிடி எடுத்து மேலே சொன்னவற்றுடன் கலந்து பகல் உணவில் சாதத்துடன் உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் அல்லது மோருடன் கலந்து பருகலாம்.

இப்படியே மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து செய்யணும். வாந்தி, குமட்டல், உணவு செரிக்காமை போன்ற வயிற்று உபாதைகள் எல்லாமே கட்டுப்படும்.

பொதுவாக இதனை எல்லோரும் சாப்பிடலாம். பிரசவித்த தாய்மார்கள் பகல் உணவில் ஐந்து துளி நெய்யுடன் அங்காயப் பொடியை சோற்றில் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் கிருமித் தொற்றுகள் கட்டுபடும்.

அடிக்கடி பயணம் செய்யறவங்க, வெளியிடங்களில் சாப்பிடவேண்டிய கட்டாயம் இருக்கறவங்க அங்காயப் பொடியை சாப்பாட்டில் சேர்த்துகிட்டா நல்லது. வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம் இவைகளைக் கட்டுப்படுத்தும்.

இதுல வேப்பம்பூ இருக்கறதாலே 25 முதல் 40 வயது ஆண்கள் பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒரு நாள் இரண்டு நாள் எடுத்துக்கலாம். பிறகு விந்தணு குறைபாடு உள்ள ஆண்கள் இதனை சேர்த்துக் கொள்ளக் கூடாது

Tuesday, 18 February 2014

ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்!
தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், 'இது தப்பு’ என்று தெரிந்தும், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால்? நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய 'தவறுகள்’ என்னென்ன என்பது குறித்து, தமிழகத்தின் பல்வேறு டாக்டர்களிடம் கேட்டோம். சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராஜா, பல் மருத்துவர் ரவிவர்மா, புதுச்சேரியைச் சேர்ந்த பொது நல மருத்துவர் நாகராஜன், திருநெல்வேலியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கவிதா, சாத்தூரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அறம் ஆகியோரின் பரிந்துரைப்படி முக்கியமான 10 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
புகைபிடித்தல்  மது அருந்துதல்
சந்தோஷம், சோகம், டென்ஷன்... என, எந்த ஓர் உணர்ச்சிக்கும் உடனே புகைபிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் பலருக்கும் உள்ளது. ஒரு சிகரெட்டைப் பற்றவைக்காமல், இவர்களால் கொண்டாட்டத்தைத் தொடங்க முடியாது. புகைபிடிப்பது புகைப்பவர் உடலுக்கு மட்டுமல்ல; அந்தப் புகையை சுவாசிப்பவர்களின் உடல்நலத்துக்கும் கேடு. புகை பிடிக்கும்போது ரத்தத்தில் ஆக்சிஜன் குறைந்து கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகரிப்பதால், கடைக்கோடி திசுக்களுக்கும் போதிய ஆக்சிஜன் கிடைக்காது. இதுபோல ஆயிரக்கணக்கான பிரச்னைகள் ஒரு சிகரெட் பிடிப்பதால் ஏற்படுகின்றன. அதேபோல், தினசரிக் கட்டுப்பாடு இன்றி மது அருந்துவதால், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மது அருந்துவதைக் கைவிடுவது நல்லது.
பல் துலக்காமல் தூங்குதல்
காலை, மாலை இருவேளையும் பல் துலக்குவது அவசியம் என்று எவ்வளவுதான் கூறினாலும், ஒருசிலர்தான் இதைப் பின்பற்றுகின்றனர். பல் துலக்கும் நுட்பம் தெரிந்தவர்களால்கூட, 90 சதவிகிதம் அளவுக்குத்தான் கிருமிகளை அகற்ற முடியும். மீதம் உள்ள 10 சதவிகிதம் கிருமி மேலும் பெருக 12 மணி நேரம் போதும். இதைத் தவிர்க்க, இரவு தூங்குவதற்கு முன்பும் பல் துலக்க வேண்டும். ஆனால், தூங்கும் அவசரத்தில், இது என்ன பெரிய விஷயமா என்று நாம் ஒதுக்கித் தள்ளுவதால் ஈறு, சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை நம்மால் தவிர்க்க முடியும்.
வேகமாக உண்ணுதல்
சூடான உணவுகளை, சுவைக்க விரும்புபவர்களும் சரி... பசியில் துடிப்பவர்களும் சரி, சாப்பிடும்போது அவர்களை அறியாமல் வேகமாகச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நேரத்துக்கு அது திருப்தியளித்தாலும், அது ஏற்படுத்தும் விளைவுகள் அதிகம். நம் வாயில் உள்ள சுரப்பிகள் நாம் உட்கொள்ளும் உணவை நன்கு அரைத்துச் செரிமானம் செய்வதற்கு எளிதாக 'களி’ போன்று ஆக்கி இரைப்பைக்கு அனுப்புகிறது. ஆனால் ஒருவர் வேகமாக உண்ணும்போது வாயில் மெல்வது தடைபட்டு, நேரடியாக உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இதனால் உணவை, செரிமானம் செய்வதில் வயிற்றுக்குப் பிரச்னை ஏற்படுகிறது. உணவுக் குழாய்க்குப் பதில் மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இது மூச்சுத் திணறலுக்கு வழிவகுத்துவிடும். உணவை மெதுவாக மென்று விழுங்க வேண்டும்.
காலை உணவைத் தவிர்ப்பது
அனைவரும் செய்யும் மிகப் பெரிய தவறு, காலை உணவைத் தவிர்ப்பது. காலையில் வெறும் வயிற்றுடனோ அல்லது ஒரு கப் காபி, பால் குடித்துவிட்டு வேலைக்குச் செல்பவராக இருந்தால், உங்கள் எதிர்கால ஆரோக்கியம் கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணரவேண்டும். இந்தப் பழக்கம், உங்கள் செரிமான மண்டலத்தின் பணியைப் பாதிக்கும். காலையில் சாப்பிடாதபோது, உடல் பலவீனம் அடையலாம்.
உடற்பயிற்சியைத் தவிர்ப்பது
நாள் ஒன்றுக்கு குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு உடலை வலுவாக்கும் பயிற்சிகள் செய்வது அவசியம். பயிற்சிக்கு இடையில் இடைவெளி இருக்கலாம். ஆனால், பயிற்சி செய்வதற்கு நீண்ட இடைவெளி கூடாது. மிக அவசியமான காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த ஒரு காரணத்துக்காகவும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கக் கூடாது. அலுவலகத்தில் காலார நடக்கப் பழகுங்கள். பேருந்தில் பயணிப்பவர்கள், இறங்குவதற்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பியுங்கள்.
நேரம்கெட்ட நேரத்தில் தூங்குவது
மாணவப் பருவத்தில், தேர்வுக்கு முந்தைய நாள் மட்டும் விடிய விடியப் படிப்போம். மற்றபடி இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவது, காலையில் அவசர அவசரமாக எழுந்திருப்பது என்பது வழக்கமாகிவிட்டது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும், உடலின் செயல்பாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, சாதாரணக் கிருமித் தொற்றைக்கூட, உடலால் எதிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். போதுமான தூக்கமின்மையால் கண் எரிச்சல், பணியில் ஈடுபாடின்மை போன்றவையும் ஏற்படும்.
டிவியில் மூழ்குவது
மணிக்கணக்கில் கம்ப்யூட்டர், டிவி முன்பு மூழ்கியிருந்தால், இதயம், கண், செரிமான மண்டலம் எனப் பலவற்றையும் பாதிக்கும். மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமனுக்கான வாய்ப்பை அதிகரிக்கச்செய்யும். டி.வி. பார்க்கும்«பாது, நம்மை அறியாமல் அதிகக் கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்கிறோம். உடல் உழைப்பு குறைகிறது. இதனால் கலோரி அதிகரித்து, கொழுப்பு படிந்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைக்கு வழிவகுத்துவிடுகிறது. எனவே, குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி என்று சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஆரோக்கியம் காக்கலாம்.
கலர்ஃபுல் ஜங்க் ஃபுட்
இன்றைய குழந்தைகளுக்கு, பாரம்பரிய இட்லி, தோசை பிடிப்பது இல்லை. கலர்ஃபுல்லான ஜங்க் ஃபுட்ஸ் அவர்களை ஈர்க்கின்றன. அவை பெரும்பாலும் மைதா மாவில் செய்யப்படுவதால், உடலுக்குக் கேடு. இந்த வகை உணவில், 'நார்ச் சத்து’ கொஞ்சமும் இல்லை. இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.  சில ஜங்க் ஃபுட்களில் இருக்கின்ற மெழுகு போன்ற பொருள் உடலினுள் சென்று குடலின் மேல் படிந்து, கேடு விளைவிக்கின்றன. இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், சின்ன வயதிலேயே பெப்டிக் அல்சர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அவர்களை ஈர்ப்பது உணவிலுள்ள அந்த நிறங்கள்தான் என்பதால், வீட்டிலேயே குழந்தைகளுக்கு, கலர்ஃபுல் 'ஃப்ரூட் சாலட்’ செய்து தரலாம்.
ஆறு வேளையும் அரிசிக்கு அடிமை
உணவு விரும்பிகள் இன்று ஏராளம். உணவு, அதன் தரத்தையும் சரிபார்த்த பின்னர் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் உண்ணும் அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் போக மீதம் உள்ளவை கொழுப்பாக மாற்றம் அடையும். இதனால் உடல் பருமன், ரத்தக் குழாயில் கொலஸ்ட்ரால் படிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உணவுகளின் கலோரியை அறிந்துகொண்டு, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து ஒரு நாளைக்கு ஆறு வேளைகளாகச் சாப்பிடலாம். பருப்பில் புரதச் சத்து, சாதத்தில் கார்போஹைட்ரேட், எண்ணெயில் கொழுப்புச் சத்து இருக்கிறது. காய்கறி, பழங்களில் நார்ச் சத்து, வைட்டமின், மினரல்கள் உள்ளன. எனவே, இவற்றைச் சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவைத் தெரிந்து உட்கொண்டால், ஆரோக்கியம் நம் கையில்.
டீ, காபி தவிர்க்கலாமே!
டீ, காபி போன்ற பானங்களுக்கு அடிப்படையிலேயே மூளையைத் தூண்டிவிடும் சக்தியுள்ளது. ஒரு நாளுக்கு நான்கு முறைக்கும் மேல் டீ, காபி அருந்துபவர்களுக்கு அந்தத் 'தூண்டுதல்’ அதிகமாகி மூளையைத் 'தொந்தரவு’ செய்யும் நிலைமைக்குப் போய்விடுகிறது. இதன் விளைவாக மூளை மந்தமடையலாம். மேலும் சர்க்கரை, பாலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கும். கலோரிகள் அதிகரிக்கும். காபி, தேநீருக்குப் பதில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த கிரீன் டீ அருந்துவது ஆரோக்கியமானது. கிரீன் டீயில் சர்க்கரை, தேன் எதையும் சேர்க்காமல் அப்படியே அருந்துவது முக்கியம்.

Saturday, 15 February 2014

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை, இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது...

1) பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

2) சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு, அபாயகரமான அல்லது
வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

3) சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

4) ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

5) ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

6) ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

7) கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

9) வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

10) கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

11) நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் அப்சர்வ் செய்கிறது, விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

12) நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் மொபைலின் கீ லாக் செய்யப்பட்ட நிலையிலும், ஏன் சிம்கார்டு இல்லாத நிலையிலும் கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம், மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,
விலகி ஓடும் பி.பி., சுகர்...!

சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் ஷேர் செய்யுங்கள்...

"காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது" என்று கேள்விப்பட்டிருப்போம்.

இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..!

இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக்கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்...

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம்.

இதே போல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்..!

ஒன்று நிச்சயம்...

இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ...

நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே....!

Saturday, 8 February 2014

வெந்தயக்கீரையின் பயன்கள் :- 

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிர் சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது.
ஆரைக் கீரையின் பயன்கள்:-

நீர் நிறைந்த வயல்கள், நீரோடையின் கரைகள், ஏரிக்கரைகளில் வளரும் இக்கீரைக்கு பூவோ காயோ எதுவும் இல்லை. நான்கு இலைகளுடன் காணப்படும் இக்கீரையை ஆவாரை, சதுப்பன்னி,நீராரை என்றும் அழைக்கிறார்கள். ஆரைக்கீரை இனிப்புச் சுவை உடையது.

இக்கீரையை சமைத்து உண்டுவந்தால் மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.

நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆரைக்கீரை சூப்

ஆரைக் கீரை - 1 கைப்பிடி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 5

பூண்டுப்பல் - 3

மிளகு - 5

சீரகம் - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

இஞ்சி - 1 சிறு துண்டு

உப்பு - தேவையான அளவு

இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும். மலச்சிக்கல் தீரும். அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது. பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும்.

வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.