Thursday, 5 May 2016

உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராக்ஷம்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள் நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்.ருத்ராக்ஷத்தை ஆங்கிலத்தில் Elaco Carpus Seed என்பர்.ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராக்ஷங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு. 
ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார். ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும். வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்! ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.
நட்சத்திரம் நட்சத்திராதிபதி கிரகம் அணிய வேண்டிய ருத்ராக்ஷம்
1)அஸ்வினி கேது நவ முகம்
2)பரணி சுக்ரன் ஷண் முகம்
3)கார்த்திகை சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதசமுகம்
4)ரோஹிணி சந்திரன் த்வி முகம்
5)மிருகசீரிஷம் செவ்வாய் த்ரி முகம்
6)திருவாதிரை ராகு அஷ்ட முகம்
7)புனர் பூசம் ப்ருஹஸ்பதி பஞ்ச முகம்
8)பூசம் சனி சப்த முகம்
9) ஆயில்யம் புதன் சதுர் முகம்
10) மகம் கேது நவ முகம்
11)பூரம் சுக்ரன் ஷண் முகம்
12)உத்தரம் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம்
13)ஹஸ்தம் சந்திரன் த்வி முகம்
14)சித்திரை செவ்வாய் த்ரி முகம்
15)ஸ்வாதி ராகு அஷ்ட முகம்
16)விசாகம் ப்ருஹஸ்பதி பஞ்சமுகம்
17)அனுஷம் சனி சப்த முகம்
18)கேட்டை புதன் சதுர் முகம்
19)மூலம் கேது நவ முகம்
20)பூராடம் சுக்ரன் ஷண் முகம்
21)உத்திராடம் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம்
22)திருவோணம் சந்திரன் த்வி முகம்
23)அவிட்டம் செவ்வாய் த்ரி முகம்
25)சதயம் ராகு அஷ்ட முகம்
25)பூரட்டாதி சனி பஞ்ச முகம்
26)உத்திரட்டாதி சனி சப்த முகம்
27)ரேவதி புதன் சதுர்முகம்
Like
Comment
ாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.
ருத்ராட்ச மாலையை அணியும் முறை
குடுமியில் அணிய வேண்டியது - 1
தலை உச்சியில் அணிய வேண்டியது - 13
தலையில் அணிய வேண்டியது - 36
காதில் அணிய வேண்டியது 1 அல்லது 6
கழுத்தில் அணிய வேண்டியது - 32
புஜத்தில் (கை 1க்கு) அணிய வேண்டியது - 16
ஒரு மணிக்கட்டில் அணிய வேண்டியது - 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்க வேண்டியது - 25
இம்மை மறுமை பலன்களை அடைய உதவும் ஜெபமாலையில் (கையில் வைத்துக் கொள்ள) கட்ட வேண்டியது 27,53 அல்லது 108.
ருத்ராட்ச வடிவங்கள்
ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன் கொடுக்கிறது. சிவ புராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு முகம் - சிவ வடிவம்
இரு முகம் - தேவி வடிவம்
மூன்று முகம் - அக்னி சொரூபம்
நான்கு முகம் - பிரம்ம வடிவம்
ஐந்து முகம் - ருத்ர வடிவம்
ஆறு முகம் - சண்முக வடிவம்
ஏழு முகம் - அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் - கணபதி வடிவம்
ஒன்பது முகம் - பைரவர் வடிவம்
பத்து முகம் - திருமால் வடிவம்
11 முகம் - ஏகாதச ருத்திர வடிவம்
12 முகம் - துவாதச ஆதித்ய வடிவம்
13 முகம் - முருகன் வடிவம்
14 முகம் - சிவ வடிவம்
ருத்ராட்சையின் பிற பெயர்கள்
ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன.
Like
Comment
ருத்ராக்ஷ மரம் , பூ, பழம், கொட்டை
Like
Comment
ருத்ராஷத்தின் வரலாறு
முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு நாரதா பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவனாகவும்,பிரம்மனிடம் வரம் பெற்றவனாகவும் இருந்தான்.அந்த கர்வத்தினால் சர்வ தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டினார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டோம்.
அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரேசக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் சிந்தனையில் ஆழ்ந்தார் அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராஷமரமாக உண்டானது. அந்த ருத்ராஷ மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார்.
ருத்ராஷத்தின் விவரம்
ருத்ராஷ மரம் இலையோ கார்பஸ் வகையைச் சேர்ந்தது. ஆசியா கண்டத்தின் கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் மலேஷியா, ஆஸ்திரேலியா, பசுபிக் தீவு மற்றும் உலகின் பல பகுதிகளில் இம்மரம் காணப்படுகிறது. நேபாளம், பீகார், பெங்கால், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், பம்பாய் போன்ற இடங்களிலும் காணப்படுகிறது. நேபாளம் ருத்ராஷத்திற்கு உலக புகழ் பெற்றது.

இந்த மரம் 60 அடி நீள உயரம் வளரும் இதன் பூ வெண்ணிறத்தில் இருக்கும். இலையை விட சிறிய அளவில் இருக்கும். இலையின் கீழ் பகுதியில் உள்ள காம்புகளில் பூ வளரும் பழத்தின் நிறம் சிகப்பும் நீளமும் கலந்திருக்கும் இந்த பழத்தில் உள்ள கொட்டைகளில் அதிகமாக ஐந்து முகமாக இருக்கும் இந்த பழம் ஒரு இன்ச்யை விட பெரியதாகவும் சிறியதாகவும் இருக்கும். சிறியதாக இருக்கிற ருத்ராஷத்திற்கு சக்தி குறைவு. ருத்ராஷ மரம் தை மாதம் பூ பூக்கும். வருட முழவதும் பூ பூக்கும் என்று கூற முடியாது. சில ஆண்டுகள் வரை பூ பூக்காமலும் இருக்கலாம். ஒரு முகம் ருத்ராஷம், இரண்டு முக ருத்ராஷம் இவை இரண்டும் கிடைப்பது மிக மிகக் குறைவு. எல்லா ருத்ராஷத்திற்கும் முகம் பல எண்ணிக்கையில் இருக்கும். 1 முகத்திலிருந்து 31 முகம் வரை கிடைக்கும். ஆனால் கிடைப்பது ரொம்ப குறைவு. நமக்கு கிடைப்பது 1 முகத்தில் இருந்து 14 முகம் வரைதான். 5 முகம் ருத்ராஷம் தான் இப்போது பரவளாக அதிக அளவில் கிடைக்கின்ளது. இதன் விலை மிகவும் குறைவு.
ருத்ராஷம் போல் இரண்டுவகை இருக்கின்றது. ஒன்று பத்ராஷம் மற்றொன்று ரவுத்ராஷம். இந்த இரண்டும் பார்ப்பதற்கு ருத்ராஷம் போல் இருக்கும். பலர் இந்த இரண்டையும் ருத்ராஷம் என்று எண்ணிக்கொண்டு தவறுதலாக அணிந்துக் கொள்கிறார்கள். ஓவ்வொறு ருத்ராஷமும் வேறுபடும். 21 ஒரு முகத்திற்கு இந்திரமாலை என்று பெயர். ஒவ்வொறு மாலைக்கும் தனித்தனி மந்திரம் இருக்கிறது.
மந்திரம் சொல்லாமல் இருந்தால் கூட உண்மையான ருத்ராஷம் அணிந்தால் மனது அமைதியாக இருக்கும். பாகவதம், சிவப்புராணம் ஆகிய இவை இரண்டிலும் ருத்ராஷத்தைப் பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது. ருத்ராஷம் அணிவதால் பாவங்கள் நீங்குவது மட்டும் இல்லாமல் மருந்துளால் குணம் ஆகாத வியாதியைக் கூட ருத்ராஷம் அணிந்தால் குணம் ஆகும்.
இமயமலையில் ருத்ராஷம் பரவலாகக் காணப்படுகிறது. 108 கொட்டை கொண்ட ருத்ராஷ மாலை அணிந்தால் அஸ்வமேத யாக பலன் கிடைக்கும். அல்லது 54 கொட்டை கொண்ட ருத்ராஷமாலை அணியலாம். இந்த மாலையின் நடுவில் மேடு என்றப் பெயரில் பெரிய ருத்ராஷம் இருக்க வேண்டும். ஜெபம் செய்யும் போது இந்த மேரு என்ற இடம் வந்தவுடன் பின்பக்கம் திருப்பி ஜெபம் பண்ண வேண்டும். ருத்ராஷ மாலையில் ஜெபம் செய்தால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேரும்.
ஜெபம் செய்யும்போது:
காலையில் ஜெபமாலை நாபிக்கு சமமாக இருக்க வேண்டும்
நடுபகல் மார்புக்கு சமமாக இருக்க வேண்டும்.
மாலையில் நாசிக்கு நேராக இருக்க வேண்டும்.
எல்லா ஜீவன்களிலும்
உயர்ந்த ஜீவன் மனிதன்
கிரகத்தில் ரவி
நதிகளில் கங்கை
முனிவர்களில் கஸ்யபுடு
தேவர்களில் சிவன்
தேவிகளில் கௌரி
ஆகியோர்கள் உயர்ந்தவர்கள். சர்வதானம் செய்தால் கிடைக்கும் பலனை விட ருத்ராஷமாலை அணிந்தால் அதிகமாக பலன் கிடைக்கும் காசியில் உயர்ந்த ருத்ராஷம் கிடைக்கும். அந்த ருத்ராஷத்தை சுத்தி செய்ய வேண்டும். முதலில் சந்தன நீரில் கழுவி, பிறகு நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு ஜெபம் செய்யலாம்.
ருத்ராஷம் என்று எப்படி தெரிந்து கொள்வது
இது ருத்ராஷம் உருண்டை வடிவம் கொண்டது. சிவனின் கண்ணில் இருந்து வந்தது. பிரம்ம படைப்பு. இதன் விலை குறைவு. சந்தேகப்பட வேண்டாம். இது சோப்புக்காய் அளவில் கிடைக்கும்.
பத்ராஷம் நீண்டு தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. இது விஸ்வாமித்ர படைப்பு. ஒரு முகத்தில் இருந்து எட்டு முகம் வரை கிடைக்கும். இரட்டை வாழைப்பழம் போல இரண்டு பத்ராஷம் இணைந்து இருந்தால் அதற்கு கௌரி சங்கர் என்று பெயர். மூன்றாக இணைந்து இருந்தால் பிரம்ம விஷ்ணு மகேஸ்வரன் என்று பெயர். இதேபோல் ருத்ராஷம் கூட இருக்கும்.
பிரம்ம புராணத்தில் புளசிய பிரம்மன் யாகம் செய்தபோது வெளிவந்தது தான் சத்ராட்சம் கிடைப்பது மிக மிக அரிது. குடும்ப அமைதிக்கும் மன சாந்திக்கும் இது மிகவும் உகந்தது. காலப்போக்கில் இது அழிந்துவிட்டது ஏதாவது காட்டில் அல்லது யாராவது மகானிடம் இருக்கலாம்.
ஒரு நாள் ஜமதக்கினி மகரிஷியின் வயலில் ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. அவர் ஒரு நெற்கதிர் எடுத்து விரட்டினார். அந்தப்பசு இறந்துவிட்டது. இதனால் பாவம் செய்து விட்டோம் என்று கருதி அவர் சுகமகரிஷியிடம் சென்று தன் துன்பத்தை கூறினார். உடனே அவர், ஜமதக்கினி நீ காசிக்கு சென்றால் 1ஒரு முகம் ருத்ராஷம் கிடைக்கும். அதை நீ அணிந்துக் கொண்டால் உன்னுடைய கோஹத்திய தோஷம் நீங்கும் என்று கூறினார். ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு தேவதை அதிபதியாக இருப்பார்கள். அவரவர் அந்தந்த பாவங்களை அழித்து விடுவார்கள். இந்த ருத்ராஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் பாவத்தை அழிக்கும் என்று சொன்னாராம்.
ஒரு முகம் கொண்ட ருத்திராட்சம் பிரம்ம ஹத்திய தோஷம் அழிக்கும். இது சிவனின் மற்றொரு உருவம் என்று கருதப்படுகிறது.
சிவனைப் பூஜை செய்த பலன் கிடைக்கும்.
இரண்டு முக ருத்ராஷம் அர்த்த நாரிஸ்வர சொரூபம். அனைத்து பாவங்களையும் அழிக்கும். இதை அணிந்தால் சிவனையும், சக்தியையும், பூஜை செய்த பலன் கிடைக்கும்.
மூன்று முகம் ருத்ராஷத்திற்கு அக்னிதேவன் அதிபதி. இந்த ருத்ராஷம் ஸ்ரீ ஹத்தியா தோஷத்தை நீக்கும். (ஒரு பெண்ணை கொன்றால் வரும் பாவம்). மும்மூர்த்திகளையும் பூஜை செய்த பலன் கிடைக்கும் மூன்று முக ருத்ராஷம் மணமானப் பெண்கள் அவர்களின் தாலிக்கொடியில் அணிந்தால் பூவும், பொட்டும் நிலைத்து மகிழ்ச்சியை அளிக்கும்.
நான்கு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி பிரம்மன். ஞாபசக்தியை பெருக்கும் சர்வஹத்தியா தோஷம் நீங்கும்.
ஐந்து முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி காலாக்கினி ருத்திரன். இது அனைத்து பாவங்களையும் அழிக்கும். மனதிற்கு சாந்தி தரும். இரத்த அழுத்தத்தை நீக்கும். அஜீரணத்தைப் போக்கும் மார்பு வலியை நீக்கும். தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்கள் ஒரு ருத்ராஷக்கொட்டை எடுத்து அதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை எடுத்து கண்ணின் இமையின் மீது தடவினால் நல்ல உறக்கம் வரும். விஷ பூச்சிகள் தீண்டினால் உடனே ஒரு ருத்ராஷக் கொட்டை எடுத்து எலுமிச்சைப் பழச்சாரில் குழைத்து அந்த சாந்தை எடுத்து தீண்டிய இடத்தில் தடவினால் வலி குறைந்து குணமாகும். காய்ச்சிய நீர் அல்லது காய்ச்சியை பாலில் இரண்டு ருத்ராஷக் கொட்டைப் போட்டு உடன் எடுத்து விட வேண்டும். அப்பழ எடுத்த நீர் அல்லது பாலை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 1 அருகில் நெருங்காது. 32 கொட்டை கொண்ட மாலையையாவது அணிந்தால் விரோதி கூட மரியாதை செலுத்துவான்.
ஆறு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி கார்த்திகேயன் பனிரெண்டு ருத்ராஷ கொட்டை கையில் (மணிக்கட்டில்) அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஹிஸ்டீரியா போன்ற வியாதிகளை வராமல் காக்கும். மாணவர்கள் அணிந்தால் ஞாபசக்தி பெருகும் கண்திருஷ்டியைப் போக்கும்.
ஏழு முகம் ருத்ராஷத்திற்கு இதற்கு அணங்கம் என்று பெயர். இதற்கு அதிபதி காமதேவன். ஜாதகம் சரி இல்லாதவர்கள் இதை அணியலாம். இதை அணிந்தால் அகால மரணம் வருவதைத் தடுக்கும்.
எட்டு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி விக்னேஷ்வரன். பஞ்ச மகா பாதகத்தை அழிக்கும். மன தைரியம் உண்டாக்கும். கணேஷனை பூஜை செய்த பலன் கிடைக்கும். காய்ச்சியப் பாலில் இதைப்போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் பக்கவாதம் மூன்று மாதங்களில் குணமாகும்.
ஒன்பது முக ருத்ராஷத்திற்கு அதிபதி பைரவன். இதற்குள் ஒன்பது சக்தி இருக்கிறது. ஒரு கொட்டை அணிவதாக இருந்தால் வலது கையில் அணியலாம். துர்கை பூஜை செய்பவர்களும் இதை அணியலாம். மனிதன் கிரக சாந்திக்காக நவரத்தினங்களை மோதிரமாக அணிகின்றான். நவரத்தின மாலை அணிகின்றான். நவகிரக பூஜையும் செய்கிறான். இவையாவும்; ஒரு ஒன்பது முக ருத்ராஷக் கொட்டை அணிந்தால் கிடைக்கும்.
பத்துமுக ருத்ராஷத்திற்கு ஜனார்த்தனம் என்று பெயர். இதற்கு அதிபதி ஸ்ரீ மகா விஷ்ணு அனைத்து கஷ்டத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு. பாம்பு மற்றும் விஷபூச்சிகளில் இருந்து நம்மை காக்கும் சக்தி இதற்கு உண்டு. காய்ச்சியப் பாலில் இந்த ருத்ராஷக் கொட்டையைப் போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் கக்குவான் வராமல் தடுக்கும். ஒரு முக ருத்ராஷம் எப்படி சிவசொரூபமோ, அதேபோல் தஸமுகி ருத்ராஷம் சம்பூர்ண விஷ்ணு சொரூபம். இது மிகமிக குறைவாக கிடைக்கிறது.
பதினொன்று முக ருத்ராஷம் ஏகாதஸ ருத்ர சொரூபம். இதை அணிந்தால் அசுவமேத யாகப்பலன் கிடைக்கும். முனிவர்களின் பத்தினிகள் கூட இதை அணிந்து கொண்டார்களாம். இதைப் பெண்கள் அணிவதால் இரக்கக்குணம் உண்டாகும்.
பனிரெண்டு முகம் ருத்ராஷம் ஆதித்தியம் ஆகும். இதற்கு அதிபதி சூரிய பகவான். இதை காதில் அணிந்தால் சூரியனின் கருணை நமக்கு கிடைக்கும்.
பதிமூன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் கார்த்திகேயன், காமதேவன், இதை அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
பதினான்கு முக ருத்ராஷம் பரமசிவனுக்கு நிகரானது.
பதினைந்து முக ருத்ராஷம் கடவுளின் மேல் பக்தியை உண்டாக்கும் சக்தி இதற்கு உள்ளது.
பதினாறு முக ருத்ராஷம் தந்திரம் செய்பவர்களுக்கு இந்த ருத்ராஷம் பயன் தரும்.
பதினேழு முக ருத்ராஷத்திற்கு அதிபதி விஸ்வகர்மா. இதை அணிந்தால் சகல வசதி கிடைக்கும்.
பதினெட்டு முக ருத்ராஷத்திற்கு அதிபதி பூதேவி.
பத்தொன்பது முக ருத்ராஷம் அணிந்தால், ஞானம் பெருகும். சாந்திக் கிடைக்கும்.
இருபது முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் பிரம்ம தேவன். சரஸ்வதி இதை அணிந்தால் ஞானம் பெருகும். மனதிற்கு சாந்தி தரும்.
இருபத்தி ஒன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதி குபேரன். சொத்து சுகம் கிடைக்கும். எல்லா பாவத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு.
ருத்திராஷம் கொட்டையின் உட்பகுதியில் வெற்றிடம் உள்ளது. இதனால் புதிய ருத்திராஷம் தண்ணிரில் மிதக்கும். பயன்படுத்த பயன்படுத்த ருத்திராஷத்திற்கு எடை கூடும். இதனால் ருத்திராஷம் நிரில் முழ்கும். ருத்ராஷக் கொட்டை அணிவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது நாம் எந்த நிலையிலும் ருத்திராஷத்தை பயன்படுத்தலாம். இதனால் எவ்விதத்திலும் ருத்திராஷத்திற்கு சக்தி குறையாது. ஆனால் மனதிற்கு தவறு என்று நினைத்தால் ருத்திராஷத்தை அணிய வேண்டாம்.
ஏழுமுக ருத்திராட்சம் ஜாதகம் சரியில்லாதவர்கள் இந்த ருத்திராட்சத்தை அணியலாம் மற்றும் லஷ்மி கடாட்சம் எற்படும். ருத்திராட்சம் அணிவதால் நம்முடைய கோபத்தை நீக்கும் மனதை சாந்த படுத்தும் நம்முடை வாக்கு பலிக்கும். ருத்திராட்சத்தில் நாம் துலையிட்டால் அதனுடைய பலன் பாதியாக குறைந்து விடும்.பொதுவாக எல்லா ருத்திராஷத்திலும் துவாரம் இருக்கும். சிறியதாக உள்ள ருத்திராட்சத்திற்கு குறைந்த அளவே பயன் இருக்கும். பெரிய அளவு ருத்திராஷத்திற்கு சக்தி அதிகம்.
இந்த ருத்திராட்சம் நீண்ட காலம் நிலைத்து இருக்கும். ஆனால் இந்த ருத்திராட்சம் நமக்குக் கிடைக்காது. காரணம் விலை அதிகமாக இருப்பது. காசி, அரித்துவார், ரிஷிகேஷ், நேப்பாள் போன்ற புண்ணிய தலங்களில் உள்ள பெரிய வியாபாரிகளிடம் கிடைக்கலாம். நாம் எவ்வளவு பெரிய ருத்திராட்சம் அணிகிறோமோ அவ்வளவு பயன் கிடைக்கும்.
ஒரு ருத்திராட்சக் கொட்டையை அணிந்தால் பயனில்லை 108 அல்லது 54 கொட்டை மாலையின் நடுவில் ஒரு பெரிய ருத்திராட்சம் போடவேண்டும். அப்பொழுது தான் முழுமையான பலன் கிடைக்கும். உண்மையான ருத்திராட்சத்திற்கு புஜத்துவாரம் தட்டையாகத்தான் இருக்கும். போலி ருத்திராட்சம் புஜத்துவாரம் உருண்டையாக இருக்கம். இதை வைத்தது போலியைக் கண்டுபிடித்து விடலாம்.
நாக ருத்திராட்சம்
இந்த ருத்திராட்சம் மிகவும் அரிதான ஒன்று எவருக்கும் எளிதில் கிடைக்காது. அதிலும் உண்மையான நாக ருத்திராட்சமாக இருக்க வேண்டும் மற்றும் பயன்படுத்தும் முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது ஒருமுக ருத்திராட்சத்துடன் பாம்பு படம் எடுப்பது போல் ஒட்டியிருக்கும். இது மிகவும் குறைந்த அளவே கிடைக்கும். இதனை பயன்பாடு அறிந்து அணிவது நலம். ஒரு ருத்திராட்ச மரத்தில் நாகம் ஏறினால் அந்த மரத்தில் ஒரு ருத்திராட்ச கொட்டையில் மட்டும் நாகம் இருப்பது போல் உருவாகும். பின்பு அம்மரத்தில் ருத்திராட்ச கொட்டை உருவாகாது மற்றும் அம்மரத்தை வெட்டி விடுவார்கள்
LikeShow more reactions
Comment
ருத்ராட்சம் அணிவதுபற்றி சிவபுராணம்
பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.
ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான்.
ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான்.
எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.
ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;
ருத்ராட்சங்களைக் கைகளிலும்,தோள்களிலும் அணிந்தவன் எவ்வித உயிரினங்களாலும் கொல்லப்படமாட்டான்.அவன் இவ்வுலகில் ருத்ரனைப் போல வலம் வருகிறான்.
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை
Like
Comment
ருத்ராக்ஷ குணங்கள்
ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.
ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும். விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வகையில் உடைந்து விடுவதை எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
தியான நிலையில் இருப்பவர்களுக்கு சூட்சும முறையில் ஆற்றலை கடத்துதல், அவர்களின் ஆன்மாவுடன் உரையாடுதல் என ருத்ராக்ஷம் ஒர் உயிராகவே செயல்படும். 108 மணிகள் கொண்ட ருத்ராக்ஷ மாலை அணிந்து வலம் வருபவர் ஒரு கூட்டமாக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உலா வருவதற்கு சமமான செயலை செய்கிறார் என்பதை உணரவேண்டும்.
ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. ஆண்/பெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று.
தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது.
எனக்கு தெரிந்த ஓர் சினிமா நடிகர் ருத்ராக்ஷத்தை தவறாக ஃஷேன் ஷோவில் பயன்படித்தினார். அதுவரை சிறப்பாக இருந்த அவரின் வெற்றிகள் தடம்மாற துவங்கின. அதனால் ருத்ராக்ஷம் பயன்படுத்தும் பொழுது கவனம் தேவை.
குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்ரு முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.
மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிர வேறு தன்மையில் ருத்ராக்ஷம் அணிந்தால் அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது. வேரு விசேஷம் அதில் இல்லை.
ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. கெமிக்கல் பொருட்கள், சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும்.
பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும். பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும். பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும். பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம். இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும்.
ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம். உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும். இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும், உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.
ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு. ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷ மணிகள் கிடைக்கிறது. முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள். உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவது, செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது.நவரத்தின கல் போல இதனையும் வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம்.
ருத்ரக்ஷத்தை தங்கம், தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும். ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும், சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம்.
1. ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்) குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.
2. ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம் சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம்.
3. நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலை நயம், சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும். குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க வாய்ப்பு உண்டு.
4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும்.
5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.
தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விட மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமது பஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட 108 மணிகள் கொண்ட ஐந்துமுக ருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம்.
ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு. ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.
ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும். ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள் உண்டு. இதை" பத்ராட்சம் " என அழைப்பார்கள். இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.
ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம் பயன்படுமா என்றால் முடியும் என்றே கூறலாம். ஒருமுக ருத்ராக்ஷம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம்
LikeShow more reactions
Comment
ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்
எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும்,எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன்மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான்.
ருத்ராட்சத்தை அணிபவனும்,வழிபடுபவனும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு,தொடரவிருக்கும் அனேக கோடி பிறப்புகளிலிருந்தும் விடுபடுகிறான்.
ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும்,உடையும் தருபவனும்,ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவனும் அனைத்துப்பாவங்களிலிருந்தும் விடுபட்டு,சிவலோகத்தை அடைகிறான்.
நம்பிக்கையோடும்,நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்துகொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான்.
ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.
அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன் மூலமும்,விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை,ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.
ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில்,அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள்.
சண்டாளனாகப் பிறந்தவனும்,ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வானாயின் அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடிவிடும்.
கள் உண்பவனும்,மாமிசம் உண்பவனுமாகிய பாவியின் தலையில் ருத்ராட்சம் படுமேயானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும்.
ருத்ராட்சமாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும், நான்கு வேதங்களையும்,சாஸ்திரங்களையும்,உபநிடதங்களையும் கற்றறிந்தவனைவிட சிறப்பு பெறுவான்.அனைத்துக் கல்வி வேள்விகளும் அவன் வசமாகின்றன.பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக் கொண்டிருப்பானாகில்,அவன் இறந்தபின் ருத்ர லோகத்தை அடைகிறான்.
பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாளனோ அல்லது மிலேச்சனோ; உண்ணக்கூடாததை உண்பவனோ யாராகிலும் அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில் அவன் ருத்ரனுக்கு இணையாகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான்.காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கழுத்தில் அணிபவன் நூறுகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்; இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.
ருத்ராட்சத்தை அணிந்தவாறு , வேத நியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில் அவன் பெறும் பலன்களை அளவிட முடியாது;
கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத்தளைகளிலிருந்து விடுபடுகிறான்.
ருத்ராட்சத்தை உடலில் அணியாவிட்டாலும்,அதைப் பூஜிப்பவனும் கூட சிவலோகம் சென்றடைந்து சிவனைப் போலவே வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெருமானைப் போலவே முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடுவான் எனில்,ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் அவன் உடலைத் தீண்டுமாயின்,அது கங்கையில் நீராடியதைவிட அதிகப்புண்ணியப்பலன்களைத் தரும்.
மனிதன் மட்டுமல்ல;ஓரறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால்,அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும்.பல்வேறு யுகங்களில் நாயும்,கழுதையும்,கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.மறு ஜன்மத்தில் சிறந்த சிவ பக்தர்களாகப் பிறந்தன
Like
Comment