Saturday, 4 June 2016

ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன மந்திரம்
க்ருத யுகத்தில் உலகம் நன்முறையில் இயங்க மஹாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ கார்த்தவீர்யன் அரசராக அவதரித்தார் இவர் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் என்றும் அழைக்கப்படுகிறார்.இவர் முதலில் ஸ்ரீ அத்ரி முனிவரிடம் சகல வித்தைகளையும் கற்றார்.பின்னர் ஸ்ரீ அத்ரி முனிவரின் புதல்வரும் அவதூத சத்குருவுமான ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டு
1.விரும்பிய போதெல்லாம் ஆயிரம் கைகள் வரும் வரம்.
2.இவரது ராஜ்யத்தில் யாராவது அதர்மம் செய்ய நினைத்தால் அவர்கள் பயமடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடும் வரம்.
3.எல்லா உலகங்களையும் வென்று அரசாளும் வரம்.
4.இவரை யுத்தத்தில் எதிர்ப்பவர்களை விட இவரிடத்தில் அதிகமான சேனை வீரர்கள் உருவாகும் வரம்.
இந்த நான்கு வரங்களைப் பெற்று அவரது சீடர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.
ராவணனை விடப் பலம் பொருந்தியவர். ஒரு சமயம் ராவணணைக் கட்டி இழுத்துச் சிறைப் பிடித்தார் பின்னர் ராவணனின் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனை விடிதலை செய்தார்.
இவரை வழிபடுபவர்களுக்கும், இவர் சரிதத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாவருக்கும் பெரும் நன்மை உண்டாகும்.
இவரது மந்திரம் காணாமல் போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,இழந்த செல்வ நிலையைத் திரும்பப் பெற , அடகு வைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட,கடன் தீர போன்ற நன்மைகளை நிறைவாய் அருள வல்லது.
தொலைந்து போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம|
ராஜ சஹஸ்த்ரபாஹுகம் ||
யஸ்ய ஸ்மரண மாத்ரேன||
(........... )கதம் நஷ்டம் சலப்யதே ||
கதம் என்ற சொல்லின் முன்னால் காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து ஜெபிக்க வேண்டும்.
இழந்த செல்வ நிலையைத் திரும்பபெற,அடகுவைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட கீழ்க்கண்ட இரண்டு மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.:-
மந்திரம் 1.
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரநாத் தேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே ||
மந்திரம் 2.
க்ருத வீர்ய சுதோ ராஜா சஹஸ்ர புஜமண்டலஹ |
அவதாரோ ஹரே சாக்ஷாத் பாவயேத் சகலம் மம|
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரன மாத்ரேன நஷ்டத்ரவ்யம் ச லப்யதே ||
இதில் தேவையான மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நாளில் அரசு அல்லது ஊண் காலத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்து 1008 உரு குறைந்தது 7 நாட்கள் ஜெபிக்கவும்.
செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் இவரை வழிபடச் சிறப்பு
LikeShow more reactions
Comment
பொன்னும் பொருளும் சேர்ந்து கோடீஸ்வரராக ,குழந்தை பாக்கியம் பெறவும் பாம்பன் ஸ்ரீ குமரகுருபரர் அருளியுள்ள பதிகங்களைப் படித்துப் பயன்பெறுங்கள் .
LikeShow more reactions
Comment
பாதுகா பைரவ மந்திர சாதனை
கலியுகத்தில் மக்கள் எல்லா ஒழுக்க மற்றும் சாத்திர நியதிகளைக் கடைப்பிடிக்க மாட்டார்கள் அவர்களுக்கு இறையருள் பெற்று நல்வால்வு வாழ பகவான் ஸ்ரீ பைரவ மந்திர சாதனையும் வழிபாடும் மிக எளிதானதாக இருக்கும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
பைரவர் சிவனது மற்றொரு வடிவமே என்றும் சிவனின் அடியவர்களைச் சாதாரண மற்றும் மரணத்திற்கு ஒப்பான துன்பங்களில் இருந்து காத்தருள்வதே அவரது பிரதான இயல்பு எனச் சிவ புராணம் கூறுகிறது.
பாதுகா பைரவ சாதனையின் பலன்கள் :-
1.எல்லாவிதமான துன்பங்கள்,தடைகள்,மரணகண்டங்கள் இவற்றில் இருந்து தீர்வு
2.குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி மன அமைதி பெற
3.வருடத்திற்கு ஒருமுறை இந்த மந்திர ஜப சாதனை செய்து வந்தால் எதிர்காலத்தில் நமது கர்ம வினையால் நிகழவிருக்கும் பல துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
4.வழக்குகளில் வெற்றி பெற ,எதிரிகளால் பாதிப்பு வராமல் இருக்க
5.ஒருவரின் வாழ்வும் செல்வங்களும் பாதுகாக்கப் பெற
ஜப ( பூஜை )முறை :-
ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று குளித்து முடித்து சுத்தமான ஆடை அணிந்து ஒரு மரப்பலகை வைத்து அதில் கருப்பு எள் மூன்று கைப்பிடி எடுத்து குவித்து வைக்கவும்.அதன் மேல் பாதுகா பைரவ யந்திரத்தை வைக்கவும்.நெய்விளக்கேற்றி விளக்கையும் யந்திரத்தையும் குங்குமத்தால் அர்ச்சித்து இந்த சாதனையில் சித்தி அருள வேண்டவும்.
த்யான ஸ்லோகம்:-
பக்த்யாம் நமாமி பாதுகாம் தருணம் த்ரிநேத்ரம்|
காம பிரதான வர கபால திரிசூல தண்டான் |
பக்தார்த்தி நாசகரணே ததாதம் கரேஷு |
தம் கோஸ்துபா பரான் பூஷித திவ்ய தேஹம் ||
இந்த த்யான ஸ்லோகத்தை ஜெபித்து பின்னர் வலது கையில் சிறிது அட்சதை எடுத்து எந்த பிரச்சனை நீங்க வேண்டுமோ அதை உரக்கச் சொல்லி அட்சதையை வலது கையில் வைத்தபடி தலையைச் சுற்றவும்.பின்னர் அதை எல்லாத் திசைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் தூவி விடவும்.இதன் பின்னர் ருத்ராக்ஷ மாலையை ஏந்தி மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.
மூல மந்திரம்:-
ஓம் ஹ்ரீம் |
பாதுகாய ஆபதுத்தாரனாய |
குரு குரு பாதுகாய |
ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா ||
இந்த மந்திரத்தைத் தினம் 700 தடவை வீதம் தொடர்ந்து 7 நாட்களுக்கு ஜெபிக்கவும்.7 நாட்கள் கழித்து அந்த யந்திரத்தையும் ருத்ராக்ஷ மாலையையும் ஆற்றிலோ குளத்திலோ போட்டு விடவும்.விரைவில் நல்ல மாற்றங்களைக் காணத் தொடங்குவீர்கள்
Like
Comment
காரிய சித்திக்கான ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்
1.ஆரோக்யமான வலிமையான உடலைப் பெற
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | வஜ்ர தேஹாய |வஜ்ர நகாய |வஜ்ர முஹாய| வஜ்ர ரோம்னே |வஜ்ர நேத்ராய|வஜ்ர தந்தாய |வஜ்ர கராய| வஜ்ர பக்தாய|ராம தூதாய ஸ்வாஹா||
2.எதிரிகள் நோய்கள் தீர
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ சத்ரு சம்ஹரணாய| சர்வ ரோகஹராய |சர்வ வசீகரணாய| ராம தூதாய ஸ்வாஹா||
3.மந்திர மாந்திரீகம் ,எதிரிகள்,த்ருஷ்டி,வியாதி ,பயம் நீங்க ,காரியன் சித்திக்க
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ யந்த்ர மந்த்ர தந்த்ர த்ராடக நாசகாய | சர்வ ஜ்வரச் சேதகாய|சர்வ வ்யாதி நிக்ருந்தகாய |சர்வ பய ப்ரசமனாய |சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய|சர்வ கார்ய சித்திப்ரதாய | ராம தூதாய ஸ்வாஹா||
4. துர்தேவதைகளின் உபத்ரவம் நீங்க
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ| பூத பிரேத பிசாச |டாகினி சாகினி துஷ்ட க்ரஹ பந்தனாய | ராம தூதாய ஸ்வாஹா||
இந்த மந்திரத்தைச் செவ்வாய்க்கிழமை அன்று 1008 தடவை ஜெபித்து அந்த நீரை வீட்டில் தெற்குத் திசை தொடங்கி கடிகாரச் சுற்றில்,தென்மேற்கு,மேற்கு , ,வடமேற்கு ,வடக்கு,வடகிழக்கு,கிழக்கு ,தென்கிழக்கு என 8 திசைகளிலும் தெளித்து பின்னர் வீட்டின் தலை வாயிலிலும் தெளித்து அதன் பின்னர் வீட்டில் உள்ளோர் யாவரின் மீதும் தெளித்துக் கொள்ள துஷ்ட சக்திகளின் உபத்ரவம்நீங்கும்.
செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று வெற்றிலை, பாக்கு, கொய்யாப்பழம்,பழங்கள் ,வைத்துத் தேவையான மந்திரத்தை 108 வீதம் வேண்டிய காரியம் நிறைவேறும் வரை ஜெபித்து வரவும்.
LikeShow more reactions
Comment
செல்வ விருத்தி தரும் ஸ்ரீ தனாகர்ஷண லக்ஷ்மி மந்திரம்
செல்வ விருத்திக்குக் கீழ்க்கண்ட லக்ஷ்மி மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன் கிழமை அன்று தொடங்கி தொடர்ந்து 90 நாட்கள் தினமும் பிரம்ம முஹுர்த்தத்தில் நெய் விளக்கேற்றி 108 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறைவான செல்வம் கிடைக்கும்.
கேரளா மற்றும் கல்கத்தாவில் உள்ள பிராமணர்களால் இம்முறை பின்பற்றப்படுகிறது.
மேலும் விளக்கேற்றும் நேரத்தில் ஊதுபத்தி ஏற்றி அதை வாசல் வரை கொண்டு வந்து கணபதி முதலான அனைத்து சுப தெய்வங்களும் என் இல்லத்தில் எழுந்தருளவேண்டும் என வேண்டியபடி பின்னோக்கி நடந்து வந்து பின்னர் '' கணபதி முதலான அனைத்து சுப தெய்வங்களும் இத்தீபத்தில் எழுந்தருளவேண்டும்'' என வேண்டியபடியே விளக்கு ஏற்ற வேண்டும்.இப்படி ஏற்றி வர காரியத்தடை,பணம் இருப்பின்றி விரயமாதல் இவை நீங்கி ஐஸ்வர்யமான நல்வாழ்வு அமையும் என்று தந்திர சாஸ்திரம் சொல்கிறது.
மந்திரம்:-
ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷினி லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||
வெண்ணிறப் பூக்களால் அர்ச்சித்தாலும் ,ஏலக்காய் வெல்லம் போட்டுக் காய்ச்சிய பால் நைவேத்யம் செய்தாலும் சிறப்பான பலன் கிடைக்கும்.
லக்ஷ்மி யந்திரம் வாங்கி அதைப் பால்,பன்னீர்,துளசி இலை கலந்த நீர் , இவற்றால் கழுவிப் பின்னர் அந்த யந்திரத்தை விளக்கின் முன்புறம் வைத்து பூஜை முடிந்தபின் விளக்கின் கருக்கை யந்திரத்தின் மையத்தில் வைத்து வர யந்திரத்திற்கு சக்தி உண்டாகும்.90 நாட்கள் கழிந்தபின் யந்திரத்தை பணப்பெட்டி அல்லது பீரோவில் வைக்க குறையாத செல்வம் கிடைக்கும்.யந்திரத்தைப் பணப்பெட்டி அல்லது பீரோவில் வைக்கும் போது ஏதேனும் மஞ்சள் பட்டுத் துணியில் சிறிது பன்னீர் தெளித்து அதில் வைக்கவும்
LikeShow more reactions
Comment
நண்பர்களே என்னை யாரும் inbox மற்றும் messanger call செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் எனக்கு யாரையும் சந்திக்க விருப்பமில்லை இந்த பொல்லாத உலகிலிருந்து விலகி தனிமையில் இருக்க விரும்புகிறேன் உங்களுக்கு தேவையானவை என்னுடைய பதிவுகளில் வந்து கொண்டே இருக்கும் இதை நம்பாமல் என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்வதால் எந்த பயனுமில்லை நான் நிறைய பொல்லா மனிதர்களால் பாதிக்கபட்டிருப்பதால் என்னை வெளிபடுத்த விரும்பவில்லை இதனால்தான் என்னுடைய பழைய Facebook ID அழித்து விட்டு புது ID இல் உங்களுடன் உள்ளேன் Facbook Comment and like பகுதியில் மட்டும் நம் நட்பு தொடரட்டும் புரிஞ்சுக்கங்க Please இல்லையென்றால் பதிவுகள் நிறுத்தபடும் account Delete செய்யப்படும்
LikeShow more reactions
Comment
திருவருட்பாவிலிருந்து சில mp3 பாடல்கள்
பிரபல சங்கீத வித்வான் பாலமுரளிகிருஷ்னா அவர்கள் பாடியது
பாடல்களை download பண்ண UC browser அல்லது advanced download manager install பண்ணுங்க உங்களுக்கு சுலபமாக இருக்கும்
mp3 download link
நாவினால் உன்னை
http://goo.gl/DHrhKh
பொழுது விடிந்ததேன்
http://goo.gl/FlQkMd
பண்ணிரு கண்
http://goo.gl/asBZbh
காயெல்லாம்
http://goo.gl/v1eg3f
நின் இரு தாள்
http://goo.gl/UJDc3y
LikeShow more reactions
Comment