Friday, 29 April 2016

வெற்றிலை ரகசியம்
வெற்றிலையின் காம்பை யார் தின்றாலும் அவர்களுக்கு ஞானம் வராது , மூதேவி என்னும் வறுமையே உண்டாகும், ஏனெனில் காம்பு பகுதி மூதேவிக்கு உரிய பாகமாகும், யாரிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொடுப்பார்கள் அல்லவா, எனவே வெற்றிலை உண்ண வேண்டுமாகின் காம்பை அடியோடு கிள்ளி எரிந்து விட்டு சாப்பிடவும், மேலும் முனை ஒடிந்த வெற்றிலை சாப்பிட்டாலும் பலன் இல்லை , காரணம் வெற்றிலை முனையில் ஸ்ரீதேவி குடிகொண்டிருப்பார், அவரை நீக்கி சாப்பிட்டால் செல்வ வளம் சேராது , பூஜைக்கு வெற்றிலை வைக்கும் போது முனை ஒடியாத அழகல் . சொத்தை இல்லாத ஓட்டை இல்லாத வெற்றிலையே படையலுக்கு சிறந்தது , வெற்றிலை கிழந்தோ. காய்ந்தோ இருந்தால் கூட படையலுக்கு உதவாது , வெற்றிலையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை வாழ்கிறார்கள், எனவே வெற்றிலையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த பாக தேவதை பாதிக்கப்படும், பின்பு அருள் கிடைக்காது, சாபம் தான் கிட்டும் கவனம்
LikeShow more reactions
Comment
வாசி சக்திக்கு சில பயிற்ச்சிகள்
அன்றாடமோ அல்லது வாய்ப்பு கிடைக்கும் போதோ மலை ஏற்றம் ஏறி இறங்குவது மலை அருகில் இல்லாதவர்கள் படிக்கட்டுகளை ஏறி இறங்குவது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது நலம், இவ்வாறு செய்யும் போது உயரமான இடத்தில் பயணிக்கும் போது அடிவயிறு அழுத்தமாக மடங்கும் அங்குள்ள காற்று வேகமாக வெளியேறுவதும் உள்ளிழுப்பதும் இயல்பாக செயல் நடக்கும், அப்போது வாசி கைகூடும் சுழிமுனை தன்னால் ஓடும், இப்பயிற்சி மந்திரம் இல்லாமல் உடல் சக்கராக்கள் இயங்க சிறந்த பயிற்சியாகும், இதை சிறந்த உடற்பயிற்சியாகவும் வைத்துக் கொள்ளலாம்,
அதே போல அருகில் கடற்கரை ஒரு மணல் பரப்பு போன்றவற்றில் நடை பயிற்சி செய்து பின்பு தியானம் செய்யலாம், இங்கு நடக்கும் போது அதிக சக்தி தேவைப்படும், மலை ஏற்றத்தின் போதும் அதுபோலவே அதிக சக்தி தேவைப்படும், இது போன்ற பயிற்சியின் போது உயிர் சக்தி விரையமாகாது பெருகும், உடல் அசுத்த நீர் வெளியேறும். நவதுவாரமும் சுத்தப்படும், வாசி தன்னால் வசம் பெறும், உடலில் இது போன்ற பயிற்சியின் போது ஏற்படும் அசதி விரதம் இருந்தால் கிடைக்கும் ஒரு வித மயக்க நிலை அசதி கிடைக்கும், ஞான உள்ளம் தோன்றும் வாய்ப்பு கிடைக்கும், எனவே வாய்ப்புள்ளவர்கள் மேற்கண்ட ஏதாவது ஒரு பயிற்சியை செய்தால் கூட போதும், அதன் பலனை செய்முறையின் போதே அனுபவிக்கலாம், நிம்மதியான உறக்கமும் இரவில் வரும்,
சித்தர்கள் மலை ஏறியது மூலிகை எடுக்க மட்டுமன்று. தவம் செய்வதற்காக மட்டும் மலை ஏறவில்லை, மேற்கண்ட பயிற்சிக்குத்தான் முக்கியத்துவம் என அவர்கள் ஏடுகளில் கூறியுள்ளார்கள், குறிப்பாக அமாவாசை. பௌர்ணமி நாளில் இது போன்ற பயிற்சி செய்தால் அதிக சக்தி உண்டாகும், சித்தர்கள் மறைவிற்காக காட்டில் வசித்தாலும். அவர்களின் விரத காரணங்களால் உடற்பயிற்சி செய்யும் அளவிற்கு சக்தி உடலில் இருக்கவில்லை, எனவே மலை ஏற்றம். மணலில் நடைபயிற்சி . நீச்சல் அடிப்பது . மரம் ஏறுவது . தலைகீழாய் தொங்குவது . மிருகங்கள் மேல் சவாரி செய்வது போன்ற உடற்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்கள், உடல் அசைவு உந்து தலை உண்டாக்கி நாசி சுத்தப்படவும் இது போன்ற பயிற்சியை செய்தார்கள், எனவே இந்த பயிற்சிகளின் மகத்துவம் செய்து பார்த்த பின்புதான் உங்களுக்கு புரியும் எனவே அவசியம் வாய்ப்பு கிடைத்தால் கடைபிடியுங்கள், வெகு விரைவில் ஞான சித்தி பெறுங்கள், மந்திரம் மட்டுமே ஞானத்தை கொடுத்து விடாது , உடலில் ஏற்படக்கூடிய மாற்றமும் மனதில் ஏற்படக்கூடிய மாற்றமும் கூட ஞானத்தை கொடுக்கும், சித்தர்கள் கண்ட ரகசியங்கள் இவை, சித்தர்கள் மலை உச்சியில் ஜபம் செய்து பிறகு மலையில் இருந்து இறங்கி வருவார்கள், அன்றாடம் இதுபோல் செய்வார்கள், இதற்கு காரணம் மேற்சொன்ன பயிற்சிக்கே, சுழிமுனை ஓடும்போது ஜபம் செய்தால் விரைவில் ஞானம் சித்தியாகும், மலை ஏறும் போது கிடைக்கும் பயிற்சியின் பலன் இறங்கும்போது கிடைக்காது, அதனால் தான் சித்தர்கள் மலைஏறி அங்கு ஜபம் செய்து விட்டு பூஜை முடித்து பின்பு இறங்கி விடுவார்கள் இதை ஏன் உங்களுக்கு கூறுகிறேன் என்றால் ஆரம்ப பயிற்சிக்கு மிக முக்கியமானவை இவை, எளிதில் ஞான பயிற்சியால் வெற்றி கிட்டவும் உதவும், தொடர்ந்து செய்தால் பல அறிய சித்துக்கள் கைவரப்பெரும் என ஞான நூல் கூறுகிறது , இங்கு ஒரு அறிய தகவலை அறிந்து கொள்ளுங்கள், மலையில் மட்டும் தான் சித்தர்கள் இருப்பார்கள் என நம்பிக் கொண்டிருக்க வேண்டாம், அவர்கள் எங்கும் இருப்பார்கள், குறிப்பாக சித்தர்கள் அமாவாசை. பௌர்ணமி நாளில் மலை உச்சியில் இரவு தியானம் முழு நேரம் செய்வார்கள், இதை அறிந்த அந்தக்கால மக்கள் அவர்கள் ஜபத்தைக் கெடுக்காமல் ஆசீர்வாதம் பெற மலை ஏறாமல் மலையை வலம் வரும் வழக்கம் நல்ல உள்ளங்கள் கொண்டிருந்தார்கள், ஆனால் இன்று மேற்கண்ட இரு நாட்களிலும் மக்கள் அறியாமல் சித்தர்கள் நிம்மதியை கெடுக்கிறோம் என்பதை உணராமல் மலையிலேயே இரவு முழுவதும் தங்கி வீண் பேச்சுக்களை பேசி இரைச்சல் போடுகிறார்கள், இது தவறான செயலாகும், எனினும் அவ்வாறு மலை ஏறி வந்தால் நினைத்த காரியம் நடக்கிறது என பலரும் கூறுவார்கள், இதற்கு ஒரே காரணம் சுழிமுனை மலைஏறும் போது தன்னால் அனைவருக்கும் ஓடும் அப்போது மனஒரு நிலைப்படுத்தியோ அல்லது மனதில் உள்ள வேண்டுதலோ நடக்கும், நடக்க வேண்டும் என பிராத்தித்தால் முதல் பிராத்தனையோ அல்லது கடைசி பிராத்தனையோ நடந்துவிடும், நினைப்பது நிறைவேறும், இதுவே உண்மை,
சித்தர்களை ஜீவ சமாதியால் மட்டும் அமைதியாக சென்று வழிபடுங்கள், அமாவாசை. பௌர்ணமி நாளில் கிரிவலம் வாருங்கள், ஆனால் மலை ஏற்றத்தை தவிர்த்து விடுங்கள், நல்ல எண்ணமும். தர்மமும். நம்மிடம் நிறைந்து இருந்தாலே போதும் இறையருள் பெற்றவர்கள் நமக்கு அருள்புரிய தயங்கமாட்டார்கள், தாங்கள் ஞான பயிற்சிமேற்கொள்வதாக இருந்தால் தாராளமாக எந்நாளிலும் மலை ஏறி தியானிக்கலாம், ஆனால் மௌன விரதத்தோடு மலை ஏற வேண்டும், இறங்க வேண்டும், வீண் பேச்சு கூடாது, ( எப்பயிற்சி செய்தாலும் வாய்திறந்து பயிற்சி செய்வது கூடாது என்பதை அறிக) ஆக ஞான திறவு கோல் இப்பயிற்சி மூலமும் கிட்டும் என்பதை அறிக, வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இல்லாதவர்கள் வாய்ப்பை தேடிச் செல்லுங்கள்
LikeShow more reactions
Comment
தலைமுடிச்சு ரகசியம்
மாந்திரீகத்தில் ஈடுபடக்கூடியவர்கள் தலைமுடியில் சிறிய முடிச்சு போட்டு வைக்கலாம், அல்லது முடி வளர்த்து கொண்டையும் போட்டுக் கொள்ளலாம், இவ்வாறு செய்தால் பில்லி. சூன்யம். செய்வினை கோளாறுகள். பேய் பிசாசு இவைகளின் சக்தி நம்மிடம் செயலிழந்து விடும், இதனால் நம் மந்திரமும் செயலிழந்து போகாது , எதிரி நமக்கு செய்யும் தீங்கு நம்மை ஒன்றும் செய்யாது, தெரியாமல் செய்த பாவம் நம்மை அண்டாது , நம் உடலுக்கு கட்டு கட்டினார் போல் நம்மை பாதுகாக்கும், பிராமினர். நம்பூதிரிகள். சாஸ்த்திர விற்ப்பன்னர்கள் மொட்டையே அடித்தாலும் பின் தலையில் சிறிது முடிவிட்டு அதில் ஒரு முடிச்சு போட்டு வைத்து மீத எல்லா முடியும் மொட்டை அடித்து கொள்வார்கள், சுத்தமாக மொட்டை அடிக்க மாட்டார்கள், இவர்கள் ஏன் முடிவளர்த்து கொண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால் இதற்குத்தான், புண்ணிய சக்தி தன்னை விட்டு போகாமல் இருக்கவும். பாவசக்தி தாக்காமல் இருக்கவும் தலையில் காப்பாக எண்ணி முடிச்சு போட்டு கொள்வார்கள்,
கிராம புறங்களில் பேய் பிடித்த பெண்ணுக்கு தலையில் ஒருமுடிச்சு போட்டு பின்பு பேய் விரட்டுவார்கள், அதுவும் ஒரு பாதுகாப்பான கட்டு ஆகும், தீட்டுபடக்கூடிய பெண்கள் முடிவளர்த்து கொண்டு கொண்டை போட்டுக் கொள்வதும் இதற்குத்தான், தீட்டினால் தீயசக்தி அண்டால் தலை கொண்டை காக்கும், முடியில் போடும் முடிச்சுக்கு அவ்வளவு சக்தி உண்டு, தன்னால் தலைமுடியில் சடை பின்னிக்கொண்டால் அதை தெய்வ சடை என்பார்கள், அக்காலம் முதற்கொண்டே விஷயம் அறிந்த ஒரு சில பிரிவினரே இதை முறையாக கடைபிடித்தனர், ராஜாக்கள் காலத்தில் கூட ஆண்கள் தலைமுடி வளர்ப்பதை கௌரவமாக கொண்டார்கள், தலைமுடியை கிரிடமாக அலங்கரிப்பதும் உண்டு, தலைமுடியில் கொண்டை இல்லாமல் இருப்பது அழிவை குறிப்பதாகும், அது நல்ல சகுனமாகவும் இன்று வரை மக்கள் ஏற்பதில்லை , மகாபாரதத்தில் பாஞ்சாலி தலைமுடியை விரித்து அழிப்பதற்காக சபதம் செய்தார், மதுரையை எரித்த கண்ணகியும் கூந்தலை விரித்து சபதம் செய்து பின்னர் மதுரையை அழித்ததாகவும் வரலாறு கூறுகிறது , ஆக தலைமுடியில் முடிச்சு இல்லாத போது அழிவு குணம் நமக்கே தூண்டுதலாகும் , கோபம். காமம். அடக்காது இது சத்தியமான உண்மை, இதன் பெருமை அறிந்தவர்கள் ரகசியம் என காத்துக் கொண்டார்கள்,
மேலும் நம் தலைமுடி தானம் இறைவனுக்கு ஏற்றதாகும், நம் தலைமுடி கிரஹ சக்தியை நம் எண்ணத்திற்கு ஏற்றவாறு இழக்கவும். இழுக்கவும் அதற்கு சக்தி உண்டு, அதில் போடும் முடிச்சு என்பது காப்பு , அழகுக்காக என்று சாதாரணமாக நினைத்து விடவேண்டாம், முடி வெட்டும் சாதனங்கள் வந்த பின்பு கூட ரகசியம் அறிந்தவர்கள் முடியை நீக்குவதில்லை, முடி வளர்த்து கொண்டை இடுவது ஆன்மிகத்தின் அடையாளம் என்று கூறி விஷயத்தை வெளிகொணர விரும்பாமல் மழுப்பி விட்டார்கள், விஷயம் அறியாதவர்கள் அதை கிண்டல் பேசி காலத்தை கடத்திவிட்டார்கள், ஆன்மிக சிந்தனை கொண்ட தாங்கள் உண்மையை நீங்களே அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள், அவரவர் விதிப்படி உண்மை புலப்படும், இன்னும் பல விஷயங்கள் இந்த முடியில் அடங்கியுள்ளதை அறிவீர்கள், அத்தனையும் சித்தர்கள் தலைகொண்டையில் முடித்த தெய்வ ரகசியங்களாகும்
LikeShow more reactions
Comment
கண்பார்வை பலம் ஏன்?
மாந்திரீகத்தில் ஈடுபடக்கூடியவருக்கு நன்றாக கண் பார்வை வேண்டும் என்பார்கள், இதை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் அது ஏன் என்று தான் பலருக்கும் தெரியாது , இதை இரு விதத்தில் சித்தர்கள் கூறினார்கள், ஒன்று ஞானக்கண் என்னும் நெற்றிக்கண்ணை கூறினார்கள், இந்த ஞானக்கண் உருவாக்கும் சக்தி இருந்தால் தான் உண்மை மாந்திரீகனாக உருவாக முடியும் என்ற பொருளிலும். மற்றொன்று நமக்கு இயற்கையாக இறைவன் அளித்த இரு கண்கள் உண்டு அல்லவா அதற்கும் சக்தி வேண்டும் என்றும் கூறினார்கள், ( இவ்விரு கண்களும் அகக்கண், புறக்கண் எனப்படும் ),
கண்களுக்கு பார்வை சக்தி .காந்த வசிய சக்தி மட்டும் இருந்தால் போதும் என்ற நோக்கில் கூறவில்லை , கண்களுக்கு சாதாரணமாகவே கண் பார்வை பலம் வேண்டும் என்றும் கூறினார்கள், ஏன் எதற்காக என்று கேள்வி உங்களுக்குள் எழும் அல்லவா அதையும் அறிவீராக, அமாவாசை இருட்டில் மூலிகை மேல் எதனுடைய நிழலும் விழாது எவ்வித ஒளியும் படாது அன்று மூலிகைகள் சாபம் அகன்று உயிர்ப்புடன் இருக்கும், அந்த நேரத்தில் நாமும் எவ்வித விளக்கு ஒளியும் இல்லாமல் மூலிகையை தேடிச் சென்று எவ்வித சாப நிவர்த்தி மந்திரமும் செபிக்காமல் அப்படியே மூலிகையை கொண்டு வந்து பயன்படுத்தலாம், இதுதான் சித்தர்களின் பார்வை வேண்டுமென்றதின் சூழ்ச்சும ரகசியம் .
( எந்த நிழல் பட்டாலும் குறிப்பாக மனிதன் நிழல் பட்டால் மூலிகை சாபத்துடன் இருக்கும் ), இதை உணர்ந்த பெரியவர்கள் அனுபவத்தில் ஆராய்ந்து பூனைக்கண். ரத்தக்கண் உள்ளவர்களுக்கும் பார்வை நன்கு தெரியும் என்று அறிந்திருந்தனர், இந்தக்கண் உள்ளவர்கள் ஆன்மீகத்தில் பல சித்துக்களை வெற்றியுடன் கற்கலாம் என்றும். இரவில் ஆவிகளின் உருவத்தைக்கூட பார்க்க முடியும் என கூறினார்கள், ஆக பார்வை பலம் ஆன்மீகத்தில் முக்கிய பங்குண்டு, வெளிச்சத்தை அதிகம் பார்க்காமல் இருட்டை உற்று நோக்கி கொண்டு சில நாள் பயிற்சி செய்தாலே இரவில் நன்றாக கண் தெரியும், இது அனுபவ உண்மை .
மாந்திரீகத்திற்கு பார்வை பயிற்சி மிக முக்கியம் என்பது இதனால்தான், இரவில்தான் பல நிகழ்வுகள் செய்ய வேண்டிய நிலை ஆன்மீகத்தில் உண்டு, அந்த காலத்தில் லைட் இல்லை என்ற காரணத்தால் கண் பார்வை சிறப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள் என்று சிலர் அனுபவமில்லாமல் கூறுவதுண்டு, இதில் சிறிதளவும் உண்மையில்லை, இரவிலே மலை ஏறுவதும். காட்டிலே வசிக்கவும். அதிகாலை எழுந்து கருக்கல் வேலையிலேயே நித்திய பூஜையை செய்யவும் பார்வை பலம் சிறப்புற வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள், அடுத்து மூலிகை எடுக்க எளிமையான யுக்தியான மேற்கண்ட முறையை கையாளவும் கண்பார்வை சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள்
LikeShow more reactions
Comment
உங்கள் பிறந்த நட்சத்திரப்படி நீங்கள் வளர்க்க வேண்டிய மரம் அதுவே விருட்ச சாஸ்த்திரம்
நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை, பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.. உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும்.
சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில் , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.
இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:
உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:
அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு
பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை
கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை
ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்
மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு
திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு
புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி
பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி
ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா
மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி
பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி
சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி
சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை
விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி
அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு
கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு
மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா
பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை
உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை
திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு
அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்
சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்
பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை
உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா
தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..
சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய -பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.
மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.. திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்.. உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு ... உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் ..
எந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம்.
LikeShow more reactions
Comment
நல்லன தரும் தெய்வ விருட்சங்கள்
இறைவனிடம் நெருங்குவதற்கு பல விருட்சங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.
மகிழமரம்: இதை ஞானமரம் என்று புகழ்வார்கள். இதற்கு திருவண்ணாமலை மரம் என்ற வேறொரு பெயரும் உண்டு. வியாழக்கிழமை இந்த மரத்தைக் குருவாக எண்ணி பூஜை செய்து வருவோர்க்கு அறிவு தெளிவாக கிடைக்கும்.
கொன்றை மரம்: இதைப் பிரணவ மரம் என்று சொல்வார்கள். இதை முருகனை நினைத்து செவ்வாய், சஷ்டி காலங்களில் பூஜை செய்திட துஷ்ட சக்திகள் நம்மிடம் நெருங்காது. இந்த மரம் திருவெண்காடு பகுதியில் அதிகம் காணப்படுகிறது.
குறுந்த மரம்: இதை மாணிக்கவாசகர் மரம் என்று சொல்வதுண்டு. வாஸ்து பரிகார மரமாகிய இம்மரத்தை வாஸ்துக்குறையுள்ள வீட்டின் தோட்டத்தில் வளர்க்க வேண்டும்.
வெள்ளை மன்தாரை: குருவாயூர் கோவில் மரம் என்றும் அழைக்கலாம். இதை வீட்டுத் தோட்டத்தில் வைத்து பூஜை செய்து வந்தால் நினைத்ததைக் கொடுக்கும் தன்மை கொண்டது. மந்தாரையில் மஞ்சள் வகையும் உள்ளது. இதை முறையோடு பூஜை செய்தல் வேண்டும்.
சம்தானக மரம்: நந்தி விருட்சம் என்று அழைக்கப்படும் இம்மரத்தை வீட்டில் உரிய திக்கில் வளர்த்து பூஜித்தால் பிள்ளைகள் நல்லவர்களாக வளர்ந்து உயர்நிலையைப் பெறுவார்கள்.
பாரிஜாத மரம்: அனுமன் மரம் என்ற பெயருடைய இம்மரத்தை வீட்டில் சனிக்கிழமை, வியாழக்கிழமைகளில் பூஜை செய்துவர நாம் நீண்ட ஆயுளுடன் சிரஞ்சீவியாய் வாழ்ந்து வரலாம்.
பும்சிக மரம்: சந்தான பாக்கியத்தைத் தரக்கூடிய இந்த விசேட தெய்வ விருட்சத்தைப் பூஜை செய்தால் மலடியும் குழந்தை பெறுவாள் என்று கூறப்படுகிறது. பும்சிகம் தமிழகப் பகுதிகளில் சில இடங்களில்தான் உண்டு. இதை ஆராதனைகள் செய்து இதன்கீழ் யாகம் நடத்தி வழிபட வாரிசு ஒன்றை நிச்சயம் பெறலாம்.
அரிசந்தன மரம்: இந்த விருட்சத்தை தோட்டத்தில் வளர்ப்போ ருக்கு தீமைகள் நெருங்கி வந்தாலும், அருகில் வந்தபின் மறைந்துவிடும்.
பன்னீர்பூ மரம்: இந்த மரத்தை வீட்டில் வணங்குவோருக்கு வாகன விபத்துக்கள் தவிர்க்கப்படும். இதை திருச்செந்தூர் கோவில் மரம் என்றும் அழைப்பார்கள்.
பெருந்தும்பை: தனலட்சுமி செடி என்ற பெயர் இதற்கு உண்டு. இதை வணங்குவதால் பிறரால் நமக்கு வரும் எதிர்ப்புகள் தீயசெயல்கள் அகலும்.
ஜலம்தரா மரம்: தொட்டால் சிணுங்கி செடிக்கு இப்பெயர் உண்டு. இதையும் தனலட்சுமி செடி என்பர். இச்செடி வளரும் இடத்தில் நிலம் வாங்கி வீடு கட்ட அந்த இடம் வளம்பெற்று திகழும்.
குடும்பநலச்செடி: வீட்டுத் துளசி மாடத்தரு கில் துளசிச் செடியும், ஜலந்தரா என்ற தொட்டால் சிணுங்கி செடியையும் ஒரே அளவில் வைத்துத் தனித் தொட்டியில் வளர்க்க வேண்டும். இதனால் கணவன் மனைவி உறவு பலப்படும்.
அகண்ட வில்வம்: காளஹஸ்தி கோவில் மரம் என்ற பெயர் உள்ள இதற்கு அதிர்ஷ்ட மரம் என்றும் பெயர் உண்டு. இம்மரத்தைச் செடி பருவத்தில் திங்களன்று பூஜை செய்துவந்தால் வீடு அதிர்ஷ்டகரமாக விளங்கும். சகல சௌகர்யங்களும் கிடைக்கும். பூஜை ஆகமவிதியோடு செய்தால் பலன் கிட்டும்.
விடாத்ழை மரம்:- ஆரோக்யமாக வாழவும், நோய்கள் விலகி நிம்மதி பிறக்கவும் இம்மரத்தை பூஜை செய்து வரவேண்டும். இதற்குச் சனீஸ்வர மரம் என்ற பெயரும் இருக்கிறது. சனீஸ்வரனின் 7 1/2 பிடி அர்த்தாட்டம சனி காலத்தில் இவ்விருட்ச பூஜை பலன்தரும்.
திருமண மரம்: பின்னை மரம்தான் திருமணப் பேற்றைத் தரும் தெய்வ விருட்சமாக விளங்குகிறது. திருமணம் தடைபடும் ஆண்- பெண்கள் இம்மரத்திற்கு சுபநாளில் பூஜை செய்து அதன்கீழ் மங்கள பூஜைகள் செய்தால் உடனே திருமணக்காலம் வரும்.
கதம்ப மரம்: மதுரை மீனாட்சியம்மன் கோவில் மரம் என்றழைக்கப் படும் இந்த விருட்சம் தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டது. வெள்ளிக் கிழமைகளில் இந்த மரம் பூஜிக்கத் தகுந்தது.
செல்வ மரம்: கருநெல்லி மரத்தைத்தான் செல்வமரம் என்பார்கள்.
இதை லட்சுமி மரம், (ப்ராஸ் பொடி) என்றும் சொல்வது வழக்கத்தில் உள்ளது. இம்மரத்தை இல்லத்தில் வளர்த்து வணங்கி வர செல்வ வளம் பெருகும்.
சௌபாக்ய மரம்: சண்பக மரத்தைத்தான் சௌபாக்ய விருட்சம் என்று அழைக்கிறோம். வெள்ளிக்கிழமை, அஷ்டமி தினங்களில் சௌபாக்ய அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டு பிரார்த்திக்க குடும்பத்தில் சௌபாக்கிய நிலை உண்டாகும்.
பிராய் மரம்: மின்னலைத்தடுக்கும் மரம் என்று இதை அழைப்பார்கள். இந்த வகை மரங்கள் திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் முன்பு இருந்ததால் ஊரின் பெயர் அப்படி வந்தது
LikeShow more reactions
Comment
விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்
துளசி
துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில்கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது.துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களைகுணமாக்கும்.
சந்தன மரம்
சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும்பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மனஅமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.
அத்திமரம்
அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்துவெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியைகொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.
மாமரம்
மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள்பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்கவிடப்படுகிறது.
அரசமரம்
அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.
ஆலமரம்
ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின்விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.
மருதாணிமரம்
மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால்கேட்ட கனவுகள் வராது.
ருத்ராஷ மரம்
ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்தஅழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.
ஷர்ப்பகந்தி
இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள்தீண்டாது.
நெல்லி மரம்
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகலபாவங்களும் நீங்கும்.
வில்வமரம்
வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும்நீங்கும்.
வேப்பமரம்
வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்துவணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.
கருவேல மரம்
கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களைமந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின்மீதுதான் குடியிருக்கும்.
காட்டுமரம்
காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம்சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும்.
அசோக மரம்
அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.
புளிய மரம்
புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளியமரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.
மாதுளம் மரம்
மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையேஅன்னியோன்யம் ஏற்படும்
LikeShow more reactions
Comment