Monday, 30 May 2016

சித்தர்களின் மூல மந்திரம்
நந்தீசர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
அகத்தியர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்...
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
போகர் மூல மந்திரம்...
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
கோரக்கர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
தேரையர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
புலிப்பாணி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
காக புசண்டர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
இடைக்காடர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
சட்டைமுனி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
கொங்கணவர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
சிவவாக்கியர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
உரோமரிஷி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
கருவூரார் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"
இந்த மந்திரங்களை எவ்வாறு பயன் படுத்துவது?
ஆத்ம சுத்தியுடன், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாது குருவருளை நாடுவோர் மட்டுமே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கபட எண்ணங்களை முன்வைத்து செய்யப்படும் முயற்சிகள் தோல்வியில் முடியும். சித்தர்கள் என்பவர்கள் ஆசாபாசங்களை கடந்தவர்கள். வழிபாடுகள் என்கிற பெயரிலான ஆராதனைகளை அவர்கள் விரும்புவதும் இல்லை, ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆனால் இன்றைக்கு பலர் ஆயிரத்தெட்டு போற்றிகளை கொண்ட பூசை முறைகளை சித்தர்களுக்கானது என கூறிவருகின்றனர்.
இனி வணங்கும் முறையினை பார்ப்போம்....
அமைதி நிறைந்த தூய்மையான, வெளிச்சம் மிகுந்த அறையொன்றில், கிழக்கு முகமாய் நாம் வணங்க விரும்பும் சித்தரின் படம் ஒன்றினை வைத்து, அதன் முன்னால் ஒரு திரியினைக் கொண்ட விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்திட வேண்டும். சுத்தமான குவளை ஒன்றில் நீர் நிரப்பி வைக்க வேண்டும்.ஒரு அங்குலம் விட்டமும் மூன்று மில்லிமீட்டர் தடிப்பான ஒரு செப்பு நாணயம் ஒன்றை சித்தர் படத்தின் முன்னர் வைத்திட வேண்டும்.
இப்போது சித்தரின் படத்திற்கு முன்னால் ஒரு துணி விரித்து அதில் பத்மாசனத்தில் அமர வேண்டும். பத்மாசனத்தில் அமர சிரமப் படுவோர் சாதாரணமாக அமர்ந்து கொள்ளலாம். மூச்சினை சீராக்கி, உடம்பை தளர்த்தி அமைதி நிலைக்கு வர வேண்டும். இந்த தருணத்தில் முந்தைய பதிவில் நாம் குறிப்பிட்ட மூல மந்திரத்தினை (நாம் வைத்த படத்திலுள்ள சித்தருக்குரிய) நூற்றியெட்டு முறை மனதில் மட்டுமே ஜெபிக்க வேண்டும். இந்த முறையில் தினமும் சூரிய உதயத்தின் போதும், அஸ்மனத்தின் போதும் தொடர்ந்து தினசரி இரண்டு முறை செய்திட வேண்டும்.
இந்த பூசை முறையில் சிலவற்றை ஒழுங்குடன் செய்தல் வேண்டும். ஒவ்வொரு முறையும் குரு வணக்கத்திற்கு முன்னர் குவளையில் புதிய நீர் நிரப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மலர்களையோ, பழங்கள் அல்லது உணவு பொருட்களை படையல் போடுவது போன்றவற்றை செய்திடக் கூடாது. சித்தர்கள் புறவழிபாட்டினை வெறுப்பவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த முறையில் குரு வணக்கத்தினை எத்தனை ஆர்வத்துடனும், ஆத்ம சுத்தியுடனும் செய்து வருகிறோமோ அத்தனை விரைவில் நாம் வணங்கும் சித்தரின் அருளாசி கிடைக்கும். நமது முயற்சியின் தீவிரத்தினை பொறுத்து குறிப்பிட்ட அந்த மகா புருஷரின் திருவுருவ தரிசனமும் கிடைக்குமாம்.
மெய்யான குருவருள் நாடுவோருக்கு இந்த முறை கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு
LikeShow more reactions
Comment
மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை விடுவிக்க இந்த பரிகாரம் உதவும்.மகாராஷ்டிரா,மத்தியப்ரதேசம் போன்ற மாநிலங்களில் இதைச் செய்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர் தானே செய்துகொள்ளலாம் அல்லது குடும்பத்தில் யாராவது ஒருவர் அவருக்கு இதைச் செய்யலாம்.
பரிகாரம்:-
வளர்பிறை அஷ்டமி,தேய்பிறை அஷ்டமி,அமாவாசை ஆகிய மூன்று நாட்களிலும் செய்ய வேண்டும்.
கொஞ்சம் மஞ்சளை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
கொஞ்சம் குங்குமத்தை நீரில் குலைத்து வைத்துக்கொள்ளவும்.
கொஞ்சம் கண்மை எடுத்துக்கொள்ளவும்.
ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பர் எடுத்துக்கொள்ளவும்.அந்தப் பேப்பரில் மஞ்சளால் ஒரு கோடும், குங்குமக்கலவையால் ஒரு கோடும்,கண்மையால் ஒரு கோடுமாக மொத்தம் மூன்று கோடுகள் வரையவும்.பின்,வேகவைத்த அரிசிசாதம் கொஞ்சம் அந்தப் பேப்பரில் வைத்துக்கொண்டு அந்த சாதத்தின் மேல் கொஞ்சம் தயிர் விட்டு சாதத்தின் மேல் சிகப்பு மிளகாய் விதைகள் கொஞ்சம் தூவவும். .
பின் அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு மது/ போதைப் பழக்கத்துக்கு அடிமையானவரின் தலை மற்றும் உடலை 11 தடவை இடமிருந்து வலமாக ஓம் நமசிவாய என்று மனதுக்குள் ஜெபித்தபடியே சுற்றவும்.
11 தடவை சுற்றி முடித்த பின் அந்த பேப்பரையும் அதில் உள்ளவற்றையும் அப்படியே ஓடும் நீர்,கிணறு,ஏரி ,குளம்,கடல்,ஆறு எதிலாவது போட்டு விடவும். பின் காலையும் கையையும் கழுவிக் கொண்டு தலையில் கொஞ்சம் நீர் தெளித்துக் கொண்ட பின் வீட்டுக்குள் செல்லவும்
Like
Comment
மேன்மை தரும் ஸ்ரீ அக்னி சூர்யன் மந்த்ரம்
சூரியன் இன்றி உலக இயக்கம் இல்லை.சூரியன் அருளும் ஒளியையும் பிராண சக்தியையும் கொண்டே தாவரங்கள் முதல் மனிதர்கள் உட்பட யாவரும் ஜீவித்திருக்கிறோம்.எனவே வேதம் அவரை ப்ரத்யக்ஷ பரமாத்மஹா என்று போற்றுகிறது.இதையே தமிழில் நம் பாரதியார் கண்ணுக்குத் தெரிந்த கடவுளே என்று சூரியதேவனைப் போற்றுவார்.இதன் காரணமாகவே நவக்கிரஹங்களில் ஒருவராகவும், நவக்கிரகங்களுக்குத் தலைவராகவும் போற்றப்படுகிறார்.ரசவாதத்தில் கூட இவரது அருளும், பங்கும் பிரதானமானது.பஞ்ச பூதங்களில் அக்னி அம்சமாகக் கருதப்படுபவர். சூரியன் வெப்பத்தை அளிக்கிறது.ஆனால், குளிர்ச்சியைத் தரும் சந்திரனும் கூட சூரியனிடம் இருந்தே அதற்கான சக்தியைப் பெற்றுச் செயல்படுகிறது.
வேதம்,உபநிஷதம் ,மந்திர,தந்திர சாஸ்திர நூல்களும் ஆதி தேவன் என்று அழைக்கப்படும் சூரியனைப் பற்றி மிக உயர்வாகவே பேசுகின்றன.இன்றும் பலர் வேத முறையிலும்,தாந்த்ரீக முறையிலும் சூர்யபகவானை உபாசனை செய்து வருகின்றனர்.
இங்கு நாம் பார்க்கவிருப்பது அக்னி சூர்ய மந்திரம் இம்மந்திர ஜெப பலத்தால் கர்ம வினையின் கெடுபலன்கள் வெகுவாகக் குறையும்.பித்ரு தோஷம் தீரும்.வேலையில்,அதிகாரிகளுடன் உள்ள பிரச்சனைகள் தீரும்.ஜாதகத்தில் சூரியன் பலமாக அமையப் பெறாதவர்கள் இம்மந்திர ஜபம் செய்து வர சூரியனின் அருள் பெற்று அவரது காரகத்துவ பலன்களைக் குறைவின்றிப் பெறலாம்.அதோடு வேலை,தொழில்,அரசாங்க காரியம் இவற்றில் உயர்வும் கிட்டும்.இதை குடும்பத்தில் உள்ள யாவரும் தனியாகவோ அல்லது சேர்ந்தோ செய்யலாம்.
அமாவாசை அன்று துவங்கிக் குறைந்தது 10 ஞாயிற்றுக்கிழமைகள் 108 எண்ணிக்கை ஜெபித்து வரலாம்.
அல்லது
ஒரே நாளில் (அமாவாசை அன்று) 1008 உரு ஜெபித்தும் முடிக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசையில் செய்ய மிகச் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
சுத்தமான பசு நெய் ஊற்றி விளக்கு ஏற்றி வைத்துக் கொண்டு அதன் முன் கிழக்கு முகமாக அமர்ந்து, குருவையும்,குலதெய்வத்தையும் வணங்கிக் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபிக்கவும்.
ஸ்ரீ அக்னி சூர்ய மந்திரம் :-
ஓம் பூர் புவ ஸூவஹா |அக்னயே ஜாதவேத இஹாவஹா |
சர்வகர்மாணி சாதய சாதய ஸ்வாஹா ||
Like
Comment
கஷ்ட நிவாரண ,சர்வ சத்ரு ஜெய ப்ரத ஸ்ரீ பகளாமுகி மாலா மந்த்ரம்
ஸ்ரீ பகளாமுகி தேவியின் மாலா மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர ஆயுள் கூடும்,அடிக்கடி விபத்துக்கள், நோய்கள் ஏற்படாது.எதிரிகளின் கெட்ட செயல்கள் நம்மிடம் பலிக்காது.பித்ரு தோஷம்,கிரக தோஷம் ,மாந்த்ரீக பாதிப்புகள் நீங்கும். கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பிரயோகத்தைச் செய்ய நிறைவான பலன் கிடைக்கும்.
பிரயோகம் 1:-
மஞ்சள் கிழங்கை எடுத்து
"ஓம் ஹ்ரீம் பகளாமுகி ஸ்வாஹா
"என்று ஜெபித்தபடியே அரைத்து அந்த விழுதை ஒரு மஞ்சள் நூலில் தடவி மந்திரத்தை 21 தடவை ஜெபித்து அந்தக் கயிற்றை ரக்ஷையாக அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் கிட்டும்.
பிரயோகம் 2:-
மஞ்சள் கிழங்கை எடுத்து
"ஓம் ஹ்ரீம் பகளாமுகி ஸ்வாஹா "
என்று ஜெபித்தபடியே அரைத்து அந்த விழுதை ஒரு வெற்றிலையில் வைத்துக் கொண்டு மந்திரத்தை 21 தடவை ஜெபித்து முடித்த பின் அந்த மஞ்சள் விழுதை ஒரு செம்பில் நீர் வைத்து அதில் கரைத்து வீட்டின் மேலும், வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து விட மேற்கண்ட பலன்கள் கிட்டும்.
பிரயோகம் 3 :- இதை உடற்கட்டு மந்திரமாகவும் பயன்படுத்தலாம்.ஏதேனும் பூஜை செய்யும் முன் அல்லது காடு,பயங்கரமான இடங்களுக்குச் செல்லும் பொழுது இதை ஆபத்து ஏதும் ஏற்படாது காக்கும்.பயந்தவர்களுக்கு இதை 3 தடவை ஜெபித்துத் தண்ணீரில் 3 தடவை ஊதி அந்தத் தண்ணீரால் முகத்தில் தெளிக்கப் பயந்ததால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.
ஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம்:-
ஓம் நமோ பகவதி | ஓம் நமோ வீரப்ரதாப விஜய பகவதி பகளாமுகி | மம சர்வ நிந்தகானாம் சர்வ துஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பய | ஜிஹ்வாம் முத்ரய முத்ரய | புத்திம் விநாசய விநாசய |அபாரபுத்திம் குரு குரு ||ஆத்ம விரோதினாம் சத்ரூனாம் சிரோ லலாடம் முகம் நேத்ர கர்ண நாசிகோரு பாத அன்னு அன்னு |தந்தோஷ்டஹ ஜிஹ்வாம் தாலு குஹ்ய குதா கட்டி ஜானு சர்வாங்கேஷு கேசாதி பாதானாம் பாதாதி கேச பர்யந்தம் ஸ்தம்பய ஸ்தம்பய | கேம் கீம் மாரய மாரய |பரமந்திர பரயந்திர பரதந்த்ராணி ச்சேதய ச்சேதய |ஆத்ம மந்தர தந்த்ராணி ரக்ஷ ரக்ஷ | க்ரஹம் நிவாரய நிவாரய |வ்யாதிம் விநாசய விநாசய |துக்கம் ஹர ஹர | தாரித்ர்யம் நிவாரய நிவாரய |சர்வ மந்த்ரஸ்வரூபிணி துஷ்ட க்ரஹ பூத க்ரஹ பாஷான் சர்வ சாண்டாள க்ரஹ யக்ஷ கின்னர கிம்புருஷ க்ரஹ பூத பிரேத பிசாசானாம் சாகினி டாகினி க்ரஹானாம் |பூர்வ திஷம் பந்தய பந்தய வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ | தக்ஷிண திஷம் பந்தய பந்தய ஸ்வப்ன வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ |பச்சிம திஷம் பந்தய பந்தய உக்ரகாளி மாம் ரக்ஷ ரக்ஷ |பாதாள திஷம் பந்தய பந்தய பகளா பரமேஸ்வரி மாம் ரக்ஷ ரக்ஷ |சகல ரோகான் விநாசய விநாசய | சத்ரு பலாயணம் பஞ்சயோஜன்மாதயே ராஜஜன ஸ்வபக்ஷம் குரு குரு |சத்ரூன் டஹ டஹ பச பச ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய ஆகர்ஷய ஆகர்ஷய |மம சத்ரூன் உச்சாடய உச்சாடய ஹ்லீம் பட் ஸ்வாஹா ||

பலன் தரும் ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்
எந்த ஒரு காரியம் துவங்கும் முன்பும் கீழே உள்ள ஸ்லோகத்தை மூன்று தடவை கூறி ஆஞ்சநேயரை வணங்கி வேண்டிய பின்னர் துவங்க சிறப்பாக முடியும்.
ஏற்கனவே துவங்கிய வேலை பாதியில் முடிவடையாமல் நின்றால் செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ ஹனுமன் ஆலயம் சென்று அவருக்கு வெற்றிலை மாலை சாற்றி அமர்ந்து இந்த ஸ்லோகத்தை 27 தடவை ஜெபித்து வேண்டிக்கொள்ள தடைபட்ட காரியம் விரைவில் முடியும் சூழல் உருவாகும்.
1.ஸ்ரீ ஹனுமத் சுலோகம் :-
அசாத்ய சாதக ஸ்வாமிந் |
அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ |
மத் கார்யம் சாதய ப்ரபோ|
2.வியாதிகள்,எதிரிகள் நீங்க ,வசீகரம் தரும் மந்திரம்
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
சர்வ சத்ரு சம்ஹாரணாய சர்வ ரோக ஹராய |
சர்வ வசீகரணாய ராமதூதாய ஸ்வாஹா ||
3.எல்லா ஆபத்துக்களில் இருந்தும் விடுபட :-
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |ஆத்யாத்மிகாதி தெய்வீகாதி
பௌதீக தாபத்ரய நிவாரணாய| ராமதூதாய ஸ்வாஹா ||
நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து 108 தடவை இம்மந்திரம் ஜெபித்து கையில் ரக்ஷை கட்டிக்கொள்ள மனிதர்களாலும், இயற்கை மற்றும் துஷ்ட சக்திகளாலும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது சர்வரக்ஷையாக விளங்கிக் காக்கும்.ரக்ஷையை அணியும் முன் மேற்சொன்ன மந்திரம் 3 தடவை ஜெபித்து அர்ச்சித்து பின் அணிந்து கொள்ளவும்.
4.பிறரால் செய்யப்பட திருஷ்டி,மந்திர யந்திரங்களால் உண்டான பாதிப்புகள் நீங்க, நோய்கள் ,பயம் நீங்க,சர்வ கார்யங்களிலும் வெற்றி பெற :
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய |
சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய |
சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய |
சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா ||
மேற்சொன்ன பலன்கள் போக மேலும் சில காரியங்களுக்கும் இம்மந்திரம் பயன்படும்.எதிர்களுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வெற்றி கிட்டும்.
5.கெட்ட சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்க :-
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச|
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா ||
அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் இருந்தால் இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும்.உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து ஒரு நல்ல வெற்றிலையில் செந்தூரம் கொண்டு "ஹ்ராம்" என்று எழுதி இம்மந்திரத்தை 1008 உரு ஜெபித்து அந்த வெற்றிலையைச் சுருட்டித் தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் அணிந்து கொள்ள பூத,ப்ரேத,பிசாசு,துர்சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்கும்.
தனி நபருக்கு இல்லாமல் ஒரு வீடு,கடை,தொழிற்சாலை போன்றவற்றுக்கு துஷ்ட சக்திகளால் பாதிப்பு என்றால் மேற்கண்ட வெற்றிலையை ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீடு,கடை,தொழிற்சாலை வாசலில் கட்டி வைக்கவும்
Like
Comment