Wednesday, 26 July 2017

நேற்று கடையில் டீ சாப்பிட்டுகொண்டிருந்தபோது,ஓய்வு பெற்ற காவல்துறை நண்பரும் டீ சாப்பிட்டு கொண்டிருந்தார்.அவரிடம்..,
"என்ன சார் நல்லாயிருங்கிளா,பார்த்து ரொம்ப நாளாச்சு,டீ க்கு நான் காசு கொடுக்கிறேன் சார்"
"பரவாயில்லை தம்பி நானே கொடுக்கிறேன்.நான் ரிட்டையர்ட் ஆகிட்டேன் தெரியுமா?"
"தெரியும் சார்,இதே நீங்கள் பதவியில் இருந்து நான் டீ வாங்கி கொடுத்தால் அது பதவிக்காக வாங்கி கொடுத்தது போல் இருக்கும் நீங்க ரிட்டையர்ட் ஆகியவுடன் வாங்கி கொடுப்பது தான் உங்களுக்கு வாங்கி கொடுப்பது போல அதுதான் உண்மையான அன்பு"
"பதவி இருந்த வரை எல்லோரும் வணக்கம் வைத்தார்கள் வலிய பேசினார்கள் இப்போது யாரும் கண்டுக்கிறமாட்டேங்கிறார்கள்,என் மனைவியே பழைய மாதிரி மதிக்கிறதில்லை"என்றார்.
நான் அவருக்கு தைரியம் சொல்லி விடைப்பெற்றேன்.அரசு வேலையோ அல்லது பதவியோ அது இருக்கும்போது கண்ணில் பட்டதெல்லாம் சாதாரணமாக தோன்றும்.எல்லோரையும் காக்க வைக்க,அலட்சியமாக பார்க்க சொல்லும்.அவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் இவர்கள் அதிகார போதையில் வீட்டில் மனைவியுடன் கூட அன்பாக நடக்க மாட்டார்கள்.
சிட்டா அடங்கல் வாங்க போனால் மந்திரி மாதிரி பிகு பண்ணும் ஒரு வி.ஏ.ஓ வை சமீபத்தில் ஒரு உணவகத்தில் பார்த்தேன்.சிட்டா அடங்கலுக்கு பணம் கொடுத்தால் அலட்சியமாக இடது கையில் வாங்குபவர் தற்போது பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.
நானாக வலிய சென்று நலம் விசாரித்தேன்.யாரும் மதிப்பதில்லை என புலம்பினார்.அவருக்கு சிக்கன் ரைஸ் வாங்கிகொடுத்தவடன் கண்கலங்கி பெற்றுக்கொண்டார்.
பதவியில் இருப்பவர்களின் வாழ்வு ஓய்வு பெற்றவுடன் பரமபத பாம்பு போல் உச்சத்தில் இருந்தவர் திடீரென்று எந்த அதிகாரம் இல்லாமல் ஆகி விடுகிறார்கள்.அதிகாரியின் கடைக்கண் பட்டால் போதும் என நினைக்கும் பியூன் அவர் ஓய்வு பெற்றவுடன் அவரை கடைக்கண்ணால் கூட பார்ப்பதில்லை.
பதவியில் இருக்கும்போதே எல்லோரிடமும் அன்பாகவும்,அரவணைப்பாகவும் இருக்கவேண்டும் தனக்கு கிடைக்கும் மரியாதை தன் பதவிக்காகதான் என உணரவேண்டும்.ஓய்வுக்கு பின் என்ன என்பதை திட்ட மிட்டு வாழ்ந்தால் கடைசி காலம் இனிமையாக கழியும்.
பதவி,அதிகாரம்,பணம்,இளமை,அழகு,புகழ் இவை யாருக்கும் நிரந்தரமில்லை என உணர்ந்தாலே யாரும் நம்மை வீழ்த்தவும் முடியாது நம் வாழ்வும் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

Thursday, 6 October 2016

ஈஷாவில் ஏன் பாம்பு மோதிரம்
சத்குரு:
“ஒவ்வொரு மனிதருக்கும் அவர் வாழ்க்கை என்று எதை அறிந்திருக்கிறாரோ அதன் உச்சத்தை அடைய வேண்டும் அன்ற ஆவல் இயல்பாகவே இருக்கிறது. உலகின் கிழக்குப் பகுதி நாடுகள் சிலவற்றில் இந்த மனித விருப்பத்தை சீறி எழும் பாம்பாக சித்தரித்திருக்கிறார்கள். சிவபெருமானின் தலையில் பாம்பு படமெடுத்து காட்சியளிப்பது அவர் விழிப்புணர்வின் உச்ச நிலையை அடைந்ததையே இது சித்தரிக்கிறது.
மோதிர விரல், பல உணர்ச்சிமிக்க நாடிகள் அல்லது சக்தி வழிகளின் இருப்பிடமாக இருக்கிறது. அந்த நாடிகளை அல்லது சக்தி வழிகளை தகுந்த தீட்சை மற்றும் பயிற்சிகள் மூலம் தீவிரமாக தூண்டிவிட முடியும். தன் மோதிர விரலின் மீது ஆளுமை உள்ள ஒருவர், வேறொருவரின் விதியையே மாற்றி எழுத முடியும் என்பது ஒரு விஞ்ஞான உண்மையாக இருக்கிறது.
மோதிர விரலின் அடிப்பாகத்திலிருந்து நுனி வரை பல பிறவிகளின் அனுபவங்கள் பதிந்துள்ளன. அதை அறிவதற்கு அநேக ஆன்மீக சாதனைகள் தேவைப்படுகிறது. அந்த விரலின் வெவ்வேறு இடங்களைத் தொடும்போது, வெவ்வேறு அனுபவங்களை உணர முடியும். அந்த விரலின் ஒவ்வொரு மைக்ரோ மில்லி மீட்டரும் ஒவ்வொரு விதத்தில் வித்யாசமானது.
மோதிர விரல் உங்கள் கணினி மௌசைப் போன்றது. அதை வைத்து எதுவும் செய்யமுடியும். அதனால்தான் தன் மோதிர விரல் மீது ஆளுமை உள்ள ஒருவர் அவருடைய விதியையும் திருத்தி எழுத முடியும் என்று நாம் சொல்கிறோம்.”
பாம்பு மோதிரத்தின் பயன்கள்:
# ஒரு சாதகர் தன் மோதிர விரலில் செம்பு மோதிரத்தை அணியும்போது அது அவரது உடலை ஒருநிலைப் படுத்துகிறது.
# அவருடைய ஆத்ம சாதனைகளுக்கு உதவியாக இருக்கிறது.
# சரியான ஆன்மீகப் பயிற்சிகளுடன் பாம்பு மோதிரம் அணிவது ஒருவரின் இறைநிலைப் பரிமாணங்களுக்கான திறவுகோலாகவும் இருக்கிறது.
யாரெல்லாம் அணியலாம்?
# இந்த செம்பு மோதிரத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.
# இதை அணிவதற்கு எந்த வயதும், பாலினமும் ஒரு தடையில்லை, எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.
# இதை உங்கள் இடது கை மோதிர விரலில் அணிவது சிறந்தது.
Like
Comment

Thursday, 29 September 2016

பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்....

முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, சன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும்
பொருட்களை புகைப்படம் எடுங்கள்....

இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்.... ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்....

இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்..
நம் அழகை மேம்படுத்த பலவற்றை நாம் செய்கின்றோம். அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது சிகை அலங்காரம். ஆள் பாதி, ஆடை பாதி என்று சொல்வர். அதே போல் ஒருவருடைய அழகை தீர்மானிப்பதில், தலை முடி சமபங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட தலை முடி கொட்டினால் முடி கழிதல் என்பது உலகளாவிய பிரச்சினை ஆகும்.
அதற்கு பத்திய சாப்பாடு, கனிமங்களின் குறைபாடு, பலவித மருந்துகளை உண்ணுதல், மன அழுத்தம், சுகாதார சீர்கேடு மற்றும் மரபியல் போன்ற பல காரணங்கள் உள்ளன.

1.தொப்பி மற்றும் ஹெல்மெட் அணிவதாலும், ஆண்களுக்கு முடிகழியும். இதனால் சிலருக்கு இளமையிலேயே வழுக்கை தலை ஏற்படும் நிலைக்கு ஆளாகின்றனர். இத்தகைய முடி கழிதலை குறைக்க, உங்களுக்காக நாங்கள் கூறும் 20 தீர்வுகள், இதோ இங்கே.

2.மிதமான ஷாம்புவால் சீரான இடைவெளியில் முடியை கழுவவும் சீரான இடைவெளியில் முடியை அலசினால், தலையும் தலைச்சருமமும் சுத்தமாக இருக்கும். அதனால் முடி கழிதலும் குறையும். இது தொற்று மற்றும் பொடுகு பிரச்சினைகளில் இருந்தும் தலையை காப்பாற்றுவதால், முடி உடைதலும், கழிதலும் கணிசமான அளவு குறையும். இது போக சுத்தமான தலை முடி தோற்றத்துக்கு மேலும் பலம் சேர்க்கும்.

3.முடி கொட்டுதலை தடுக்க வைட்டமின்களின் பங்களிப்பு. வைட்டமின்கள் உடல் நலத்தை பேணுவதற்கு மட்டுமல்லாமல் முடி ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது. வைட்டமின் `ஏ' தலையில் உள்ள மயிரடிச் சுரப்பு வளமாக சுரக்க உதவி புரியும். வைட்டமின் `ஈ', தலைச் சருமத்திற்கு அடியில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். இது முடியின் சுரப்பிகள் செழிப்பாக இருக்க உதவும். வைட்டமின் `பி', முடியின் நிறத்தை பேணுவதற்கு பயன்படும்.

4.ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த உணவுகள் கொழுப்பில்லா இறைச்சி, மீன்கள் மற்றும் இதர புரதச் சத்துள்ள உணவுகளை உண்ணுவதால் முடி உதிர்தல் குறையும்.

5.முக்கிய எண்ணெய்களை கொண்டு தலைக்கு மசாஜ் செய்தல் பல காலமாக முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள், தலைக்கு முக்கிய எண்ணெய்களை கொண்டு சில நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இது மயிர்ச்சுரப்பிகள் சுறுசுறுப்பாக இருக்க உதவும். அதிலும் பாதாம் அல்லது நல்லெண்ணெயை பயன் படுத்தலாம்.

6.ஈர முடியை சீவ வேண்டாம். முடி ஈரத்துடன் இருக்கும் போது, வலுவிழந்த நிலையில் இருக்கும். அதனால் ஈர முடியை சீவ முயற்சித்தால் முடி கழிதலுக்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் ஈரத்துடன் இருக்கும் போதே முடியை சீவ வேண்டுமானால், அகன்ற பற்களை கொண்ட சீப்பை பயன்படுத்தவும். அதே போல் முடியை அடிக் கடி சீவுவதையும் நிறுத்த வேண்டும். இது முடியை சேதப்படுத்தி கொட்டவும் செய்யும். முடிந்த வரை முடியில் ஏற்படும் சிக்கல்களை கைகளைக் கொண்டே எடுங்கள்.

7.பூண்டுச்சாறு, வெங்காயச் சாறு அல்லது இஞ்சிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தலைச் சருமத்தில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். பின் காலையில், முடியை நன்கு அலசுங்கள். இதை வாரம் முழுவதும் தொடர்ந்து செய்தால், நல்ல பலனை காணலாம்.

8.அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். தலைமுடி தண்டில் நான்கில் ஒரு பகுதி தண்ணீர் உள்ளது. அதனால் தினமும் 48 கப் தண்ணீர் பருக வேண்டும். இது வளமான முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்

9.க்ரீன் டீயை தலையில் தடவவும். க்ரீன் டீயை தலையில் தடவினால், முடி கொட்டுதலை தடுக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இரண்டு க்ரீன் டீ பைகளை எடுத்து, ஒரு கப் தண்ணீரில் ஊற விட்டு, சிறிது நேரம் கழித்து அந்த நீரை தலையில் நன்கு தடவி, ஒரு மணி நேரம் கழித்து முடியை அலச வேண்டும். நல்ல பலனைக் காண, இதனை ஒரு வாரம் முதல் பத்து நாள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

10.தலைமுடிக்கு எது கேடு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும். முடியை ஆரோக்கியமாக பாதுகாக்க, அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். முடியை துண்டை வைத்து துவட்டுவதை தவிர்க்கவும். அதற்கு பதில் முடியை இயற்கையாகவே காய விட வேண்டும்.

11.மதுபான வகைகள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் முடி கொட்டுவதை உணர்ந்தீர்கள் என்றால், மது பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மது, முடி வளர்ச்சிக்கு தடை போடும். அதனால் குடி பழக்கத்தை குறைத்தாலோ அல்லது முற்றிலும் நிறுத்தினாலோ, தலை முடி வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கும்.
12.புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்கவும். புகைப் பிடித்தால், தலைச் சருமத்திற்கு செல்லும் இரத்த அளவு குறையும். இது முடி வளர்ச்சிக்கு தடையாக நிற்கும்.

13.உடற்பயிற்சியில் ஈடு படவும். தினமும் ஏதாவது ஒரு உடற்பயிர்சியில் ஈடுபட வேண்டும். நடை, நீச்சல் அல்லது பைக் ஓட்டுதல் போன்றவற்றை தினமும் 30 நிமிடங்கள் செய்தால், அது உடலில் ஹார்மோன் அளவை சீராக்கி, மன அழுத் தத்தை குறைத்து, முடி கொட்டுதலையும் குறைக்கும்.

14.மன அழுத்தத்தை குறைக்கவும். மன அழுத்தத்திற்கும், முடி கொட்டுதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது என்று மருத்துவ சான்றுகளோடு பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதனால் மன அழுத்தத்தை வளர விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தியானம் கைகொடுக்கிறது. தியானத்தையும், யோகாசனத்தையும் ஒழுங்காக செய்தால், அது ஹார்மோன் அளவையும் சீராக வைத்திருக்கும்

15.ஹேர் ட்ரையரை தவிர்க்கவும். முடியை கருவிகள் மூலம் அடிக்கடி உலர்த்தவோ அல்லது சூடாக்கவோ முயற் சிக்க கூடாது. அடிக்கடி அப்படிச் செய்தால், முடியில் உள்ள புரதச்சத்து வலுவிழந்து போகும். முடியின் சத்தும் குறைந்து, முடி கழிதலுக்கு வழிவகுக்கும்.

16.தலையில் வியர்வை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவும். எண்ணெய் பசையுடன் கூடிய முடியை கொண்ட ஆண்களுக்கு, கோடைக்காலத்தில் வியர்வை உண்டாவதால் பொடுகு அதிகரிக்கும். இதுவே முடி கொட்டவும் காரணமாக அமையும். கற்றாழை மற்றும் வேப்ப இலை களைக்கொண்டு செய்யப்பட்ட ஷாம்புவை பயன்படுத்தினால், தலை குளிர்ச்சி யோடு இருப்பதோடு, பொடுகிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

17.ஹெல்மெட் அணிவதை தவிர்க்கவும். கோடைக் காலத்தில் ஹெல்மெட் அணியும் ஆண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக உள்ளது. ஹெல்மெட் அணிவதால், வியர்வையானது தலையில் உள்ள துளைகள் வழியாக உள்ளிறங்கும். அதனால் முடியின் வேர்கள் வலுவிழக்கச் செய்து, முடி கொட்ட ஆரம்பித்து விடும். எனவே தலையை சுற்றி ஸ்கார்பை கட்டிக் கொண்டால் முடி உதிர்வு குறையும்.

18.தலை முடியின் ஸ்டைலை மாற்றவும் (ஆண்கள் நீளமான முடியை வளர்க்கலாம்) முடி கழிகிறதா, முடியை தளர்த்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் போனி டைல், பின்னல் போன்ற ஸ்டைல்கள் முடியை இறுக்கமாக்கி முடியை உதிரச் செய்து சீக்கிரமே வழுக்கையும் விழச்செய்யும்.

19.உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்நல கோளாறுகள் முடி உதிர்வுக்கு முக்கிய காரணம். தீராத நோய், கடும் காய்ச்சல் மற்றும் தொற்று போன்றவைகளை ஒழுங்காக கவனித்தால், ஆரோக்கியமான முடியை பாதுகாக்கலாம்.

20.மருந்து உண்ணுதலில் கவனம் தேவை. சில மருந்துகளை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும். அதில் ஒன்று தான் முடி உதிர்வு. ஆகவே எப்போதும் மருத்து வரை கலந்தாலோசித்து விட்டு, பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொண்டு, பின் மருந்துகளை வாங்கவும்.

அப்படி முடியை பாதிக்கும் படி பக்க விளைவு ஏற்பட்டால், மருத்துவரை வேறு மருந்துகளை மாற்றி தரச் சொல்லவும். ரசாயனங்களை விட்டு தள்ளியே இருக்கவும் கடுமையான ரசாயனங்கள் மற்றும் நிரந்தர முடிச்சாயங்கள், முடியின் ஆரோக்கியத்தை பாதித்து விடும். முடிகொட்டும் போது தலை முடிக்கு சாயம் பூசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பிரச்சினையை படம் பிடித்து காட்டும் முடி.......... உடலில் உள்ள பிரச்சி னையை முடியை வைத்தே தெரிந்து கொள்ளலாம். உடலுக்கு தனக்குள் நடப்பவற்றைச் சொல்லத் தெரியாது. ஆனால் உடல் வெளிப்படுத்தும் சிற்சில அறிகுறிகள், மாற்றங்கள், ஆகியவை நமது உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை நன்கு உணர்த்தும்.
ஆரோக்கியமற்ற தலை முடியானது நமது உடல் நலம் கெட்டுப் போவதை உணர்த்துகின்ற அறிகுறியாகும். தலைமுடி சார்ந்த பிரச்சினைகளான பொடுகு, முடி உதிர்தல், இள நரை ஆகியவை எப்போதுமே சாதாரணமான, முக்கியத் துவமில்லாத பிரச்சினைகளாகவே பார்க்கப்படுகின்றன. தலை முடியில் ஏற்படும் பாதிப்புகள், உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்புகளை வெளிக்காட்டும் வெளிக்காட்டிகளாகும்.
தலைமுடியில் ஏற்படும் பாதிப்புகளானது, எவ்வாறு உடல் நலத்தின் நிலையை நமக்குக் காட்டுகின்றன என்பதைக் கீழே பார்ப்போம்.

1. முடி உதிர்தல்: சாதாரண மனிதனின் உடலில் இருந்து நாள்தோறும் 90 முதல் 100 முடிகள் வரை உதிர்கின்றன என்று தோல் நோய் நிபுணர்கள் சொல்கிறார்கள். நமது உடலில் உள்ள மயிர்க்கால்களில் 90% மயிர்க்கால்கள் சீராக வளர்ந்து கொண்டு இருக்கும் பொழுது, 10% மயிர்க்கால்கள் மட்டும் உறக்க நிலையை, அதாவது டெலோஜென் நிலையை அடைகின்றனவாம்.

இவ்வாறு டெலோஜென் நிலையை அடைந்த மயிர்க் கால்கள் இறந்து போய் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை உதிரத் தொடங்கி விடுகின்றனவாம். இவ்வாறு உதிர்ந்த முடிகள் இருந்த இடத்தில், புதிய மயிர்க் கால்கள் உருவாகி, அங்கே புதிய முடிகள் முளைக்கத் தொடங்கும். இந்த சுழற்சியானது சீரான இடைவெளிகளில் நடந்து கொண்டே இருக்கும்.

உணவுப் பழக்கம் ஆரோக்கியமற்றது என்பதை அதிகமாக உதிர்கின்ற முடிகள் வெளிக்காட்டும். தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வளர புரோட்டீன், இரும்புச்சத்து, துத்தநாகச் சத்து, வைட்டமின் `ஏ', ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன.
ஆனால் உணவில் கஞ்சத்தனம் காட்டினால், இச்சத்துக்கள் உணவின் வழியாக கிடைக்காமல் போய்விடும். ஊட்டச்சத்துக்கள் குறைந்தாலோ, உணவுமுறையில் குறை இருந்தாலோ, அதன் விளைவுகள் தலைமுடியில் தெரியும். ஆம், தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கிவிடும்.

2. பொடுகு: தலையின் ஸ்கால்ப் எனப்படும் மேல் தோல் வறண்டு காணப்பட்டாலோ, அல்லது அதிகமாக எண்ணெய் பசையுடன் காணப்பட்டாலோ பொடுகு உண்டாகும். ஷாம்புவை அடிக்கடி உபயோகிப்பதாலோ அல்லது தேவையான அளவு உபயோகிக்காமல் இருந்தாலோ, பொடுகு உண்டாகலாம்.
பொடுகானது, பூஞ்சை களால் ஏற்படுகிறது என்று சரும நோய் நிபுணர்கள் கருதுகிறார்கள். பொடுகு இருப்பதால் உடல் நலம் குன்றியுள்ளது என்று பொருளல்ல. ஆயினும், மஞ்சள் பொடுகால் ஏற்படும் செபோரிக் டெர்மா டிடிஸ் எனப்படும், தோலில் காணப்படும் சிவந்த செதில்செதிலான தடிப்புகள், ஹார்மோன் தொடர் புடையவையாக இருக்கக் கூடும் அல்லது பூஞ்சைகளால் ஏற்படக்கூடும் அல்லது குறிப்பிட்ட நரம்பியல் பிரச்சினையாகவும் இருக்கலாம்.

3. இளநரை: தலைமுடி நரைத்தல் என்பது எப்போதுமே முதுமையைக் குறிப்பிடுவதில்லை. சிலருக்கு இளமையிலேயே கூட முடி நரைக்கக்கூடும். இளமை யிலேயே தலைமுடி நரைத்தல் என்பது பரம்பரை சார்ந்த நோயாகவும் இருக்கலாம். இளநரையானது உடல்நலம் குன்றியுள்ளதைக் குறிப்பிடு வதில்லை.
எனினும், ரத்த சோகை, தைராய்டு பிரச்சினைகள், வைட்டமின் பி12 குறைபாடு, தோலில் வெண்புள்ளிகள்/வெண் குஷ்டம்ஆகியவையும் இள நரைக்குக் காரணமாக அமையலாம்.
முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம் !!

முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?

முதுகில் வலி உருவாக என்ன காரணம்?

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?

தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?
“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? “முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? “பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?
“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?
“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம்.

அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை.

அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.”
 — with Bala Murugan.

நிலா…பார்க்கப் பார்க்க சலிக்காத யாருக்கும் புரிபடாத விஷயங்களையும் அழகையும் தன்னகத்தே கொண்டது. கவிஞர்கள் கவிதை எழுதுவதற்கும், குழந்தைகளுக்கு சோறு ஊட்டவும் நாம் பயன்படுத்தும் நிலாவில் நம் பூமியை ஒத்த சிகரங்களும், மலைத்தொடர்களும், வளைகுடாக்களும் காணப்படுகின்றன.

அத்தகைய நிலா என்பதே அதிசயமான விஷயம்தான். ஆனாலும் நிலாவில் உள்ள ஏழு அதிசயங்களை விஞ்ஞானிகள் பட்டியலிட்டு உள்ளனர்.

1. மேர் செரினிடேட்டிஸ் ; நம் பூமியில் காணப்படும் கடல் போன்ற அமைப்பு. நீர் இல்லாததால் உலர்ந்து காணப்படுகிறது. சற்றேறக்குறைய 500 மைல்கள் விட்டம் கொண்டது.

2. ஸ்ட்ரெய்ட் சுவர் ; நம் பூமியில் காணப்படும் மலைத்தொடர் போன்ற அமைப்பு கொண்டது நூறுக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவு கொண்டது. இங்கு பல உயரமான சிகரங்கள் காணப்படுகிறது.

3. டேலிமயஸ் பகுதி ; பிரமாண்டமான குழிகள் கொண்டது இப்பகுதி 4. கோப்பர் நிக்கஸ் (நீஷீஜீமீக்ஷீஸீவீநீus) வானியல் அறிஞர் கோபர்நிகஸ் பெயரால் அழைக்கப்படும் இப்பகுதியில் மிக மிக ஆழமுள்ள குழிகள் உள்ளது.

5. க்ளேவிஸ் ; கிண்ண வடிவில் பல குழிகள் காணப்படும் பகுதி. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் 6.

6. அரிஸ்டார்சஸ் பகுதி ; வித்தியாசமான பல நிலத்தோற்றங்கள் காணப்படும் பகுதி. விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராயும் பகுதி

7. சைனஸ் இரிடியம் ; பூமியில் காணப்படும் வளைகுடாக்கள் போன்ற பகுதி. என்ன…இந்த அதிசயங்களைப் பார்க்கவேண்டுமானால் செலவுதான் அதிகமாகும்...!
குளிர் காலத்தில் அதிகாலையில் மூச்சுவிட சிரமம் ஏற்படுவது இயல்பு. ஆனால், சிலருக்கு வியர்த்துக் கொட்டும் வெயில் காலத்திலும் கூட காலை வேளையில் மூச்சு திணறல் ஏற்படும். இதை சுவாசக் கோளாறு என எண்ணி சாதாரணமாக இருக்க வேண்டாம், உங்கள் இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறி இது.
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத் தன்மை குறைபாடு, பெண்களுக்கு முன்கூட்டியே நிற்கும் மாதவிடாய் போன்றவையும் கூட இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் தான் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இவை மட்டுமின்றி, கால்களில் வீக்கம், ஈறுகளில் இரத்த கசிவு, குறட்டை என சில வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் கூட இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகளாக தான் தென்படுகிறது….
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு, தமனி சார்ந்த நோய்களை குறித்து வெளிப்படும் பொதுவான அறிகுறியாக காணப்படுகிறது. நமது உடலின் தமனிகளில் ஏற்படும் ப்ளாக் ஆண்மையை குறைத்து, இதய கோளாறு ஏற்பட காரணியாக இருக்கிறது என கூறப்படுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் சீக்கிரமாக ஏற்படுவது இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணிகளாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு போன்றவை ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இன்றைய வாழ்வியல் முறையில் பெண்கள் மத்தியில் உடல் உழைப்பு குறைந்து வருவது தான் இதற்கான பெரிய காரணியாக கருதப்படுகிறது.
மூச்சு திணறல் ஏற்படுவதற்கான பொதுவான காரணி குறட்டை. இரவு முழுவதும் உறங்கியும், காலையில் தூக்கம் வருவது, சில நேரத்தில் உறங்கும் போது சுவாசிப்பதை நமக்கே தெரியாமல் நிறுத்துவது போன்றவை நிறைய உடலியல் மாற்றங்கள் ஏற்படுத்துகிறது. இதனால், இதய நோய் பாதிப்பு ஏற்படும் சதவீதம் அதிகரிக்கிறது.
மேலும், இது இதயத் துடிப்பு விகிதத்தில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிபடுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது. எனவே, தூக்கத்தில் மூச்சு திணறல் ஏற்படுவதை சாதாரணமாக எண்ண வேண்டாம். உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
ஈறுகளில் இரதம் கசிவது ஈறு சார்ந்த பிரச்சனையாக மட்டுமின்றி, இதய நலன் குறைபாடாக கூட இருக்கலாம். இரத்தத்தில் ஏற்படும் பாதிப்பு உடல் முழுதும் பிரச்சனை ஏற்படுத்த வல்லது. அதிலும் முக்கியமாக தமனிவழியாக இதய நோய்கள், மாரடைப்பு போன்றவற்றை உண்டாகவும் இது காரணியாக அமையலாம்.
எனவே, ஈறுகள் அல்லது பற்களில் இரத்தம் கசிதல் ஏற்பட்டாலோ, மிகுதியான வலி இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
இதயத்தில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிகாட்டும் அறிகுறியாக கூட கால்களில் வீக்கம் தென்படலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சில சமயங்களில் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்தால் கூட கால் வீக்கம் ஏற்படலாம். ஆனால், அது ஒரே இரவில் சரியாகிவிடும். நாட்கள் செல்ல செல்ல கால் வீக்கம் அதிகரிப்பது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
அனைவருக்குமே இதயத்தின் மீது ஓர் யானை உட்கார்ந்து அழுத்துவது போன்றோ, தோள்பட்டையை யாரோ பிழிந்து எடுப்பது உணர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் இது மாரடைப்பு ஏற்படலாம் என்பதற்கான அறிகுறிகள்.
தொடர்ந்து, கழுத்து, தோள்பட்டை பகுதிகளில் வலி இருந்து கொண்டே இருப்பது இதய வலி அல்லது மாரடைப்பிற்கான அறிகுறியாக கூறப்படுகிறது.
மேல் வயிறு பகுதியில் எரிச்சல் அல்லது வலி போன்ற உணர்வு ஏற்படுவது, தொடர்ந்து இரைப்பை அசௌகரியமாக உணர்தல், சில சமயத்தில் ஏன் என்றே தெரியாமல் விக்கல் எடுப்பது போன்றவை கூட இதய வலி அல்லது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
குமட்டல், வியர்வை, மூச்சு தடைப்படுதல், தலை சுற்றல் போன்றவை ஏற்பட்ட சில மணி நேரத்தில் சிலருக்கு இதய வலி, மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.