Saturday 28 December 2013

*சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.

*சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.
Like ·  · Promote · 
மாதுளை

வேறுபெயர்: தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம், மாதுளுங்கம்
தாவரவியற் பெயர்: Punica granatum

ஆங்கிலப் பெயர்: Pomegranate 
இது மரகுவப்பைச் சேர்ந்தது, முக்கியமாக ஆப்கானிஸ்தான், பாரசீகம் முதலிய இடங்களில் அளவு கடந்து வளர்கின்றது. இலங்கை இந்தியாவில் எல்லா இடங்களிலும் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூமாதுளை என்று 3 வகுப்புகளுண்டு. இதன் பூ, பிஞ்சு, பழம், விதை, பட்டை, வேர் என்பன மருத்துவத்தில் பயன்படுகின்றன. பொதுவாக குருதி வாந்தி, வயிற்றுக்கடுப்பு, வெப்பம், குருதி மூலம் இவை போம் . இது குருதியைப் பெருக்கும் வன்மையைத் தரும். பிஞ்சினால் கழிச்சல் வகைகள் யாவும் போம். பழத்தினால் சுரத்தில் காணுகின்ற வாந்தி நீர்வேட்கை, வாய்நீர் ஊறல் என்பன தீரும். இதன் மருத்துவப் பயன்பாடுகளாவன;

சீதக் கழிச்சல் குணமாக

*பூவை உலர்த்திச் சூரணத்து அதில் 4 கி. எடுத்து வேலம் பிசின் தூள் 4 கி. அபின் 195 மி.கி. சேர்த்து வேளைக்கு 260390 மி.கி. வீதம் கொடுத்துவரலாம்.
*மாதுளம் பிஞ்சு, அதிவிடயம், முத்தக்காசு, பெரு மரத்தோல், சுக்கு, விளாங்காய்த் தசை இவை ஒவ்வொன்றிலும் 10 கிராம் எடுத்து ஒன்று சேர்த்து 1.3 லீற் நீர் விட்டு 150 மில்லிக்கு வற்றவைத்து பருகலாம்.
*மாதுளம் பழத்தோல் சுக்கு இவை வகைக்கு 15 கி. தண்ணீர் 2 படி விட்டுக் காய்ச்சி 1/8 ஆக வற்ற வைத்து வடிகட்டி 75 மி.லீ. குடிநீரில் சிறிது தேனும் கூட்டி காலை மாலை கொடுக்க பெருங்கழிச்சல் நிற்கும்.
* மாதுளம் பிஞ்சு, மாதுளம் துளிர், மாதுளம்பூ, இவைகளைத் தனித்தனியாக ஆவது (எலுமிச்சங் காய்ப் பிரமாணம்) அல்லது ஒன்று சேர்த்தாவது அரைத்துத் தயிரில் கலக்கிக் கொடுக்க இரத்த பேதி சீதபேதி குணமாகும்.

மூல நோய்க்கு

மாதுளம் பூக்களை சுத்தம் செய்து 50 கிராம் எடுத்து அதே அளவு வேலம் பிசினையும் எடுத்து வெய்யிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து சலித்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1 தே.க. சூரணத்துடன் 1 தே.கரண்டி தேனுடன் கலந்து தினம் காலை மாலை உட்கொண்டு வரலாம்.

குடற் புழுக்கள் அகல

மாதுளை மரத்து வேர்ப்பட்டையைக் கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி 1 கைப்பிடி அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு 200 மி.லீ. நீர் விட்டு நன்றாகக் காய்ச்சி கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி காலை ஒருவேளை அருந்தினால் போதும்.
வாந்திக்கு

ஒரு லீற் மாதுளம் பழச்சாற்றுடன் 1 கிலோ கற்கண்டு, ஒரு லீற் பன்னீர், 1 கிலோ தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி பாகுபதமாக்கிக் கொண்டு வேளைக்கு 2 தே.க. வீதம் 2 வேளை நாள் தோறும் சாப்பிட நல்ல குணம் கிடைக்கும்.

இருமல் தணிய

*மாதுளை மொக்கு 25 கிராம் அளவு எடுத்து நைத்து அத்துடன் 200 மி.லீ நீர் விட்டு நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி இரு பாகமாக்கி அத்துடன் 1 தே.க. தேன் கலந்து 3 வேளை அருந்தினால் போதும் இருமல் குணமாகும்.

பல்வலிக்கு

பழத்தோல் பொடி 17 கி., வெள்ளைப் போனம் 17 கிராம் சீமைச் சுண்ணாம்புத்தூள் (Prepared Chalk) 34 கிராம் சேர்த்துக் கலந்து பல் துலக்க பல்வலி தீரும்.
Like ·  · Promote · 

அருநெல்லி

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உணவுகளில் கூட, ருசி இல்லையயன்றால் அதனை நாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.

ஏனெனில் உணவை சுவையாக உட்கொண்டே நாம் பழகி விடுகிறோம். பிறந்த குழந்தை கூட தாய்ப்பாலின் ருசிக்கு மயங்கி பல மாதங்கள் வரை வேறு எந்த சுவையையும் விரும்பாமல் தாய்ப்பாலை மட்டும் உட்கொண்டு வருவதுண்டு. நாம் உண்ணும் உணவின் ருசியை மூளைதான் நமக்கு உணர்த்துகிறது என்றாலும், உணவின் தன்மையை நாக்கின் சுவை அரும்புகளே புரிந்துக் கொண்டு உணவின் ருசியை மூளைக்கு கொண்டுச் செல்கின்றன. நாக்கின் சுவை அரும்புகள் பழுதுபட்டால் உணவின் சுவையை உணர முடியாமல் சுவை நரம்புகள் தத்தளிக்கின்றன. இதனால் ருசியான உணவாக இருந்தாலும் கூட உணவை உட்கொள்ள பிடிக்காமல், உணவின் மேல் வெறுப்பு உண்டாகிறது.

சுவை நரம்புகள் பல காரணங்களால் தனது சுவை உணரும் தன்மையை இழக்கின்றன. சுரம், காமாலை, வயிற்று கிருமிகள், இரத்தச்சோகை, சிறுநீரக பாதிப்பு போன்ற நோய் நிலைகளில் நாவின் சுவை நரம்புகள் தற்காலிகமாக தங்கள் பணியை நிறுத்திக்கொள்வதால் உணவின் சுவை தெரிவதில்லை. ஆனால் நோய் சரியானதும் மீண்டும் சுவை நரம்புகள் சீராக பணிபுரிகின்றன. பக்கவாதம், முகவாதம், உமிழ்நீர் கோளவீக்கம், புற்றுநோய் போன்றவற்றில் நிரந்தரமாகவே நாவின் சுவை அரும்புகள் செயலிழந்து விடுகின்றன. நாவில் ஏற்படும் புண்களும், வயிற்றின் கூடுதல் அமிலச் சுரப்பும், நாவில் வளரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை கிருமிகளும் கூட நாவின் சுவையை மாற்றிவிடுகின்றன.

உண்ணும் உணவின் சுவை தெரியாமலும், உணவின் மேல் விருப்பம் இல்லாமலும், பசியின்மையாலும் தோன்றும் ருசியின்மையை சித்த மருத்துவம் அரோசகம் என குறிப்பிடுகிறது. தூங்கிக்கொண்டிருக்கும் நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பி, கபால நரம்புகளை தூண்டி உண்ணும் உணவின் ருசியையும், தன்மையையும் நாவிற்கும், மூளைக்கும் உணர்த்த ஏராளமான உணவுப் பொருட்களை நமது முன்னோர்கள் உண்ணும் உணவில் பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். அருநெல்லி, பிரண்டை, எலுமிச்சை, நாரத்தை, துருஞ்சி போன்ற உணவுக்குப் பயன்படும் பல மூலிகைகள் சர்பத், ஊறுகாய் போன்ற பல வடிவங்களில் பக்குவப்படுத்தப்பட்டு உண்ணும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்பட்டு படுகின்றன. இவை நாவின் சுவை நரம்புகளை தூண்டி அரோசகத்தை நீக்குகின்றன. இந்த உணவுகளில் சிறுநெல்லி எனப்படும் அருநெல்லிக்காயே நாவிற்கு ருசியை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

பிலன்தஸ் டிஸ்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட யுபோர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த அருநெல்லி நாவிற்கு ருசியை தருவது மட்டுமின்றி அரோசகம் எனப்படும் ருசியின்மைக்கு காரணமான இரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின் மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கிறது. அருநெல்லிக்காயில் அசிடிக் அமிலம் மற்றும் லூப்பியால் என்னும் வேதிப்பொருள் நாவின் சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன.

அரு நெல்லிக்காயை அலசி, இடித்து, கொட்டை மற்றும் காம்பு நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெந்தயம், மிளகாய்வற்றல் மற்றும் பெருங்காயத்தை நன்கு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் கடுகை போட்டு வெடித்தவுடன் அருநெல்லிக்காயை நன்கு வதக்க வேண்டும். பின்பு பொடித்து வைத்த மிளகாயத்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து சூடாறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடைய இந்த அருநெல்லி ஊறுகாயை உணவுக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மசக்கையினால் ஏற்படும் வாந்தி, குமட்டமல் நீங்க அரைநெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்..!

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு:

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து

இதயப் படபடப்பு நீங்க:

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்

சிறுநீரக கல்லடைப்பு நீங்க:

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

அத்துடன் உடல் சூட்டைத் தணிக்கும், கண்கள் ஒளிபெறும், நரம்புகள் புத்துணர்வடையும் மற்றும் தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும், குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கு

வளரும் குழந்தைகளுக்கு:

வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.

பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

வாய்ப்புண் குணமாக:

வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
இன்று ஒரு தகவல்:- 18.12.2013. கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி:- இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம். நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது. இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். * மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். * இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். * அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. * கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். * உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். * கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும். * உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும். அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம். கேழ்வரகு - கம்பு கூழ்: ஒரு பார்வை தேவையானவை: கேழ்வரகு மாவு - 1/2 கப் கம்பு மாவு - 1/2 கப் உப்பு - தேவைக்கு செய்முறை: * முதல் நாளிரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்து,புளிக்க வைக்கவும். காலையில் பார்த்தால் மாவு புளித்து,பொங்கினாற்போல் இருக்க வேண்டும். இட்லி மாவை புளிக்க வைப்பதுபோல் செய்ய வேண்டும்.உப்பு போட வேண்டாம். * காலையில் ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு சூடேற்றவும். * அது கொதி வருவதற்குள் கம்பு மாவில் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும். * தண்ணீர் கொதி வந்ததும் கம்பு மாவை ஊற்றிக் அடியில் பிடிக்காமலும்,கட்டி விழாமலும் கிண்டிவிடவும். * சிறிது நேரத்தில் கம்புமாவு பொங்கி வரும். * அப்போது கேழ்வரகு மாவைக் கரைத்து ஊற்றி தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும். மீண்டும் கட்டிகள் வராதவாறு விடாமல் கிளர வேண்டும். * 5 நிமிடம் கழித்து தீயை மிதமாக்கி மூடி மேலும் ஒரு 5 நிமிடம் வைக்கவும். * இப்போது இரண்டு மாவும் கலந்து கொதித்தபிறகு நல்ல வாசனை வரும். கெட்டியாகவும் இருக்கும். * விருப்பப்படி சூடாகவோ அல்லது ஆறியபிறகோ சாப்பிடலாம்.
தேங்காய் உலகத்திலேயே மிகச்சிறந்த ஒரு உணவு: இப்போ எல்லாம் டாக்டர்கள் ,தேங்காய் சட்னி சாப்பிடாதீங்க.. தேங்காயை உணவில் சேர்த்துக்காதீங்க..கொழுப்பு என்கிறார்கள்...இது ஒரு செம காமெடி..தேங்காய் உலகத்திலேயே மிகச்சிறந்த ஒரு உணவு..கோயில்களில் பிரசாதமாக தேங்காயும் பழமும் கொடுக்கிறார்கள்...கெட்ட கொழுப்பு பொருளை கடவுள் பிரசாதமாக தரும் அளவுக்கு நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல... தேங்காயில் உடலுக்கு தேவையான அனைத்து தாது பொருட்களும் இருக்கின்றன.... பழங்காலத்தில் எந்த நோயாக இருந்தாலும் பனங்கருப்பட்டியையும் ,தேங்காய்ப்பாலையும் தான் வைத்தியர்கள் கொடுப்பார்கள்..சுக்கு ,கருப்பட்டி சேர்ந்த அந்த கலவை மற்றும் தேங்காயை பிழிந்து எடுக்கப்பட்ட பாலுக்கு எந்த நோயையும் முறித்து குணமாக்கும் சக்தி உண்டு....அஜீரணம்தான் அனைத்து நோய்களுக்கும் அடிப்படை...தேங்காய் அதை இல்லாமல் செய்வதால்தான் சமையலில் அது இல்லாமல் எந்த உணவும் தமிழர் உணவில் இல்லை..... தேங்காய் கெட்ட கொழுப்பு அல்ல..நல்ல கொழுப்பு..மிருகங்களில் இருக்கும் கொழுப்பும் தேங்காயில் இருக்கும் கொழுப்பும் ஒன்றல்ல...உலகில் சுத்தமான நீர் தேங்காயில் இருக்கும் நீர்தான்..முன்பெல்லாம் சாககிடக்கும் தாத்தா,பாட்டிகளுக்கு தேங்காய்ப்பால் கொடுத்து பிழைக்க வைப்பார்கள்..இப்போது எல்லாம் மாட்டுப்பால் கொடுத்து சாகடிக்கிறார்கள்....தேங்காய் அதிகம் சாப்பிட்டால் மட்டுமே கொழுப்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீரும் என்பதே உண்மை..!!
::சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்:: அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு, மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள். சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது

Friday 27 December 2013

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் விளையும் நன்மைகள்..!

1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.

2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.

4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.

6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.

8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.

9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.

10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது
Like ·  · 

Sunday 22 December 2013

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டா:ள்.

ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.

தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.
அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள்.ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.
அபி நயா
ஒரே நட்சத்திரம்,ராசியில் இருப்பவர்கள் திருமணம் செய்யலாமா?
---------------------------------------------------------------------------------
திருமணப் பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் நட்சத்திர பொருத்தம் ஆகும். நட்சத்திர பொருத்தம் மொத்தம் 10-க்கும் மேற்ப்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும்,தற்பொழுது 
பெரும்பாலும் 10 பொருத்தங்களையே பார்க்கின்றனர்.ஆண்,பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாகஇருந்தால்,முக்கியமான பொருத்தமான ரஜ்ஜு பொருத்தம்(மாங்கல்ய பொருத்தம்)இருக்காது.

இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால்,தவிர்க்க முடியாத பட்சத்தில் சில பரிகாரங்கள்மூலம் இணைக்கலாம்.இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் வரும் திசா,புக்திக்கள் ஒரே நேரத்தில் வரும்.
ஒரே நட்சத்திரமாக இருந்து வெவ்வேறு லக்கினமாக இருந்தாலும் பராவாயில்லை.

தம்பதிகள் வெவ்வேறு ராசியாக இருப்பது நல்லது. ஏனென்றால் இருவருமே ஒரே ராசியாக இருக்கும்பட்சத்தில் கிரக நிலைகள் சரியில்லாத போது (ஏழரைச் சனி, அஷ்டமச் சனி) இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.மேலும் ஜென்ம குரு வந்தாலும் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புண்டு.

ஒரே ராசியாக இருக்கும் சமயத்தில் பெண்ணுக்கு பிந்தைய நட்சத்திரமாக ஆணுக்கு இருந்தால் நன்மை.
ஆனால் ஒரே ராசியாக இருந்தால் தம்பதிகளின் ரசனை ஒத்துப்போகும். எனினும் மோசமான கிரக நிலையின் போது இருவருக்கும் இடையே மாதத்தில் ஒருமுறையாவது கருத்து மோதல்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

நட்சத்திரப் பொருத்தம் என்று ஒரு பிரிவு உண்டு, அது எப்படி என்றால் ரோகினி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம் இவை ஆறும் ஸ்திரீ ,புருஷர்களுக்கு ஒரே நட்ச்சத்திரமானால் உத்தமம் என்றும்,அசுவனி, கிருத்திகை,மிருகசீரிடம்,புனர்பூசம், உத்திரம், சித்திரை,அனுஷம், உத்திராடம் இவை எட்டும் சுமார்.இந்த நட்சத்திரங்கள் உள்ளவர்களை பரிகாரங்கள் மூலம் இணைக்கலாம். மற்றவை பொருந்தாது.
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,..... பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான். அவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். அவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும் குழந்தைகக்காக படிப்பு, திருமணம் என எந்தவித குறையும் இல்லாமல் வைக்க தன்னையே தியாகம் செய்கிறான். அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர். இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது. பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை. அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள். ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.
கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?? பாலில் நெய் மறைந்திருப்பதை போல எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்திருக்கிறார். எங்கிருந்தாலும் அவனை வணங்கலாம் என்பது ஒரு கருத்தாக இருந்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபடும்போது பலன் இரட்டிப்பாக கிடைக்கும். ஒரு துணியை வெயிலில் காயப்போட்டால் உலர்ந்து போகும். அதே துணியை ,ஒரு லென்சின் கீழ் வைப்பதால் கருகிவிடும். சூரியக் கதிர்கள் ஒன்றுதான். ஆனால் அது குவியும் போது சக்தி அதிகமாகிறது. அது போல வெளி இடங்களை விட கோயிலில் மன ஒருமைப்பாடு அதிகரிக்கும். இறை வழிபாட்டுக்கு முக்கியத் தேவையே மன ஒருமைப்பாடு தான்.அந்த சமயத்தில் செய்யும் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். இது மட்டுமன்றி, கோயிலுகளுக்கு மனசுத்தமுடைய அடியார்கள் பலர் முற்காலத்தில் வந்து சென்றுள்ளனர். நல்லவர்களின் பாதம்பட்ட இடத்தில் நின்றாலே, நம் பாவங்கள் கருகிப்போகும். கோயிலில் உள்ள படிகட்டுகள் கூட அடியவர்களின் திருவுருவங்கள் என்று கூறப்படுவதுண்டு. எனவே வெளியிடத்தில் கடவுளை பிராத்தித்தாலும் வாரம் ஒரு முறையாவது கோயிலுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

கால்களை உதைத்து கர்ப்பப்பையை கிழித்தாகிவிட்டது. தொப்புள்கொடியை யாரோ அறுத்தனர். முதல் பால் அருந்த முன்வரிசையில் காத்திருந்தேன். யாரும் என்னை கவனிப்பவராக இல்லை. விட்டேன் ஒரு குவா குவா சத்தம் சாதம் ரெடி ! ஓ பிள்ளைக்கு பசிக்குது நீங்களே பால் குடுங்க நாங்கள் வெளியில் நிக்கிறோம். கண்ணை மூடியிருந்த இருட்டிலும் ஏதோ கரங்கள் என்னை தூக்கி மார்போடு அணைத்தது அப்பொழுது எரிந்தது என்னிடம் முதல் முறையாக அகல் விளக்கு. பன்னீர்க்குடத்து நீரையெல்லாம் பகல் இரவாய் குடித்த எனக்கு பத்தினியின் முலைமார்பில் முதல் விருந்து முதல் அமிர்தம். யாரப்பா அது எனக்கு நீ பால் தர எல்லாமே இருட்டாயிருக்கே எப்படித் தேடுவது அவளை என்றிருக்கையில் என் செல்லம் என் குஞ்சு முத்த முத்திரைகளை முகமெல்லாம் குத்தியவர் யார் பஞ்சு விரல்கள் என் உடலை வருடி தென்றல் காற்றை பிடித்து என் தேகமெல்லாம் விட்டது யார் பிரசவ வலியென்னும் மிச்சமிருக்கையில் கொஞ்சிக்கொண்டே தாலாட்டு தமிழில் பாடியவர் யார் வந்த களைப்பில் உறங்கிக் கொண்டிருந்த மார்பு யாருடையது. இலவம் பஞ்சைவிட அதுவேன் மென்மையாக இருந்தது கண்ணை விழிதொருநாள் கறுப்பு வெள்ளையில் படம் பார்த்தேன் பக்கத்தில் நின்றவள் ஈன்றவள் இவளா என் .. அம்மா உன்னை இன்றும் அம்மா என்று கூப்பிட ஆசை வருதே ஏன் உன் முலைப்பாலில் முதல் பாலில் முழு அன்பையும் கரைத்தது உன்னுடைய இரகசியம் அதுவே இந்த வசியம். வாத்தியமாய் இசைக்கிறேன் விடியும் வரை முடியும் வரை அம்மா அம்மா .. ஆக்கம் உதயகுமார் காங்கேசன்துறை
  • குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில! 1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக ...See More
    Like ·  ·  · 1 · Yesterday at 12:28am · 
  • குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!

    1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

    3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

    5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

    6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

    7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

    8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

    9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

    10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

    11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.""