Sunday 22 December 2013

சிவசிவ திருச்சிற்றம்பலம் திருமந்திரம் ஆறங்க மாய்வரு மாமறை ஓதியைக் கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லைவேறங்க மாக விளைவுசெய் தப்புறம்பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. அறுவகைச் சமயங்களையும் ஆறங்கங்களாகக் கொண்டு திகழும் தமிழ் மாமறையினை ஓதியருளிய சிவபெருமானை மண்ணகத்தார் உய்யப் பெண்ணொரு கூறாகத் திகழும் அவன்தன் பேரருட் குணத்தைத் திருவடியுணர்வோடு ஓதியுணர்வார் இல்லை. இவ்வுண்மை தொன்மையது, நன்மையது, மென்மையது, அழியாவிழுமியது, முழுமையது என உணராது அயன்மொழி அங்கங்களையும் வேதங்களையும் அவையே பேறெனக் கொண்டு பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்குகின்றார்கள். ஆறங்கமாய் வருமாமறை - ஆறு அங்கங்களோடு கூடிய தமிழ்மறை. கூறங்கமாக - மாதொருபாகனாக. மாட்டாதார் - தமிழ் வேதம் ஆரிய வேதங்களைப் பிரித்து அறிந்து கொள்ளமாட்டாதார்

No comments:

Post a Comment