Saturday 15 March 2014

ரத்த சோகை...
உணவே மருந்து...!
ரத்தத்தில் இரும்புச் சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பிறகுதான் ரத்தசோகை இருப்பது தெரியவரும்.
வெளிறிய முகம், நாக்கு, நகம், உள்ளங்கை வெளுத்து போதல், படபடப்புடன் இதயம் துடித்தல், மூச்சிறைப்பு, சோர்வு, எதிலும் பிடிப்பின்மை இவையே ரத்த சோகையின் குணங்கள்.
சேர்க்கவேண்டியவை: இரும்புச் சத்து அதிகம் இருக்கும் சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என எல்லாக் கீரைகளையும் சாப்பிடலாம்.
எள், பனை வெல்லம் கலந்த உருண்டை, கம்பஞ்சோறு, வரகரிசியில் செய்த கிச்சடி, பிரியாணி, புலாவ் செய்த்து சாப்பிடலாம். கஞ்சியாகவும் குடிக்கலாம். இதைத்தவிர, பாசிப்பயறு, சிகப்புக் கொண்டை கடலை, முளைக்கட்டிய தானியங்கள் இதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் இரும்பை கிரகிக்க உதவும்.
தவிர்க்கவேண்டியவை: இரும்புச் சத்து மருந்துகளை வாங்கி சாப்பிடுவது வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, மாத்திரை, மருந்துகளாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

No comments:

Post a Comment