Thursday 29 September 2016

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குறிப்புகள் சிலவற்றை பார்ப்போமா….. சந்தனம், முல்தானிமட்டி கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வர, முகம்
பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன்
பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம்
மிருதுவாகும்.
* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ
வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக
மாறும்.
* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால்
ஏற்படும் கருமை நிறம் மாறும்.
* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி,
ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி
செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி
மறையும்.
* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.
* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு,
கரும்புள்ளி ஆகியவை மறையும்.
* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment