Wednesday 4 November 2020

 நல்லதை படைத்த அந்த ஆண்டவன், எதற்காக, இந்த பூமியில் கெட்டதையும் படைத்தான்?*

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
சில கேள்விகளுக்கு, நாம் என்ன தான் சிந்தித்தாலும் அதற்கான விடையை முழுமையாக ‘தெரிந்து’ கொள்ள முடியாது. ஆனால், அந்த கேள்விகளுக்கான விடையை ‘புரிந்து’ கொள்ள முடியும். ‘இந்த பூமியில் நல்லதை படைத்த ஆண்டவன் தான், கெட்டதையும் படைத்திருக்கின்றான்!
நல்லதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நம்முடைய மனது, எதற்காக கெட்டதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது’? என்றாவது இந்த கேள்வியை நாம் சிந்தித்து பார்த்துள்ளோமா? இன்றைக்கு கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம்!!
*ஒரு சிறிய கதையோடு!*
குருவிடம் ஒரு மாணவன், இதே கேள்வியை கேட்டான்! அதற்கு, அந்த குரு என்ன விளக்கம் அளித்தார்? என்பதை நாம் தெரிந்து கொண்டால், தலைப்பில் உள்ள கேள்விக்கான பதிலை நாம் புரிந்து கொள்ளலாம். ‘குருவே! “நல்லதை படைத்த இறைவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளார்! நல்லதை, நாம் மனம் அப்படியே ஏற்கின்றது அல்லவா? நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனது, எதற்காக, கெட்டதை ஏற்றுக் கொள்ளக் மறுக்கின்றது’? அந்த குரு, சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டார்.
சிறிது நேரம் கழிந்தது, இரவு நேர சாப்பாடு, சாப்பிடும் நேரம் வந்தது. குரு தன்னுடைய சிஷ்யனுக்கு, உணவாக ஒரு தட்டில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார். இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனின் மனதிற்கு குரு, பின்வருமாறு விளக்கம் அளித்தார். ‘பசுவிடமிருந்து தான் பால் வருகின்றது. சாணமும், அதே பசுவிடமிருந்து தான் வருகின்றது. பாலை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?’ பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கின்றோம்.
சாணத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதை உரமாக்கி, மண்ணில் புதைத்து, அது தரும் நன்மையின் மூலம் பலன் அடைகின்றோம். இதே போல் தான் வாழ்க்கையில் வரும் கெட்டதை மண்ணில் புதைத்து, அதிலிருந்து கிடைக்கும் நன்மையை, அனுபவங்களை நம்முடைய வாழ்க்கையின், உரமாக்கி முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றவாறு பதிலைக் கூறினார்.
இறைவன் நமக்காக படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும், பல மர்மங்கள் அடங்கி தான் இருக்கின்றது. புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள். புரியாதவர்கள், மனிதனாக இந்த பூமியில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதுதானே வாழ்க்கை! ஒரு மனிதன் மகானாக மாறுவதற்கும், மீண்டும் மறுபிறவி எடுப்பதற்கும், அவரவர் வாழ்கின்ற வாழ்க்கையை, எந்த கண்ணோட்டத்தில் பார்த்து வாழ்கின்றார்கள், என்பதை பொறுத்தே அமைகின்றது. அனைவரும் சிந்தித்து செயல்பட்டு, சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும்.
அனைவருக்கும் ஆடிக்கிருத்திகை அன்பு வாழ்த்துக்கள்!!!

 விஷ்ணு கதை கேட்டால்...கங்கை தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்

🙏
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
ஒருவர் தன் வாழ்நாளில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவ வினைகளை போக்க ஒரு முறையேனும் காசி சென்று கங்கை தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்று கூறுவார்கள். அதன் மூலமாக அனைத்து பாவங்களும் அகன்று விடும் என்பதும் ஐதீகமாக உள்ளது. கங்கையில் நீராட முடியாதவர்கள் காலம் முழுவதும், தங்களையும் அறியாமல் செய்த ஒரு பிழையால், அதற்குண்டான பாவ வினைகளை நீக்க வழி உள்ளது. அந்த வழியை கூறும் கதையை இங்கு காணலாம்.
கங்கை நதிக்கரையில் இருந்து 4 மைல் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்ற அந்தணர் வசித்து வந்தார். அதே ஊரில் பிருஹத்தபா என்ற பெரும் தவசியும் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் மாலை வேளைகளில் இறைவனின் லீலைகளை, ஹரி கதையாக கூறுவார். அந்த கதைகளை புண்ணியதாமா தவறாமல் கேட்டு விடுவார். தனது அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு, பிருஹத்தபா கூறும் கதையை கேட்க கிளம்பிவிடுவார். தனது நூறாண்டு கால வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் ஹரி கதையை கேட்க தவறியதில்லை. அன்றாட பணிகளை முடிப்பது, ஹரி கதையை கேட்பது, உணவு கேட்டு, தங்க இடம் கேட்டு வரும் அதிதிகளை உபசரிப்பது என்பவையே அவரது தலைசிறந்த பணியாக இருந்தது. கங்கையில் இருந்து 4 மைல் தூரத்தில் இருந்தாலும் ஒரு நாள் கூட புண்ணியதாமா கங்கையில் நீராடியதில்லை.அவருக்கு அது பற்றிய சிந்தனையும் இருந்ததில்லை. ஒரு முறை வெகு தொலைவில் இருந்த இரண்டு யாத்திரிகர்கள், கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகி விட்டதால் வழியில் எங்காவது தங்கி மறுதினம் பயணத்தை தொடர இருவரும் நினைத்தனர். அருகில் இருந்த புண்ணிய தாமாவின் வீட்டிற்கு சென்று, ‘வீட்டு திண்ணையில் தங்க இடம் கிடைக்குமா?’ என்று கேட்டனர்.
அவர்கள் இருவரையும் யாத்திரிகர்கள் என்று தெரிந்து கொண்ட புண்ணியதாமா, வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவியிடம் கூறி அன்னம் பரிமாறக் கூறினார்.
இரண்டு யாத்திரிகர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர்.
அப்போது அவர்கள், புண்ணியதாமாவிடம், ‘ஐயா! நாங்கள் காசிக்கு சென்று கங்கையில் நீராட உள்ளோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கூறமுடியுமா?’ என்று கேட்டனர்.
அதற்கு புண்ணியதாமா, ‘நான் நூறு ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கிறேன். இங்கிருந்து 4 மைல் தூரத்தில் கங்கை நதி இருப்பதாக, பிறர் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். உண்மையை கூறவேண்டும் என்றால், இதுவரை நான் ஒருமுறை கூட கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது’ என்றார். ஒரு கணம் திகைத்த அந்த அதிதிகள், மறுகணம் அன்னத்தை நிராகரித்து எழுந்து விட்டனர். ‘பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு கங்கா! என்று சொன்னாலும் கூட பாவங்கள் விலகிவிடும்.இவர் என்னடா என்றால், அருகிலேயே இருந்து கொண்டு கங்கையில் நீராடவில்லை என்கிறார். இவரை விட பாவி யாரும் இருக்க முடியாது. இவ்வளவு சமீபத்தில் இருந்து கொண்டு கங்கா ஸ்நானம் செய்யாதவரின் வீட்டில் நாம் அதிதிகளாக தங்கியதே மகா பாவம்’ என்று நினைத்து வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர்.
அவர்களின் செய்கையைக் கண்டு புண்ணிய தாமாவின் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது. ஆனால் அந்த இரு யாத்திரிகர்களும், ‘கங்கையில் நீராடாதவரின் வீட்டில் தங்கியிருந்த பாவத்தை கங்கையில் நீராடிதான் போக்க வேண்டும்’ என்று தங்களுக்குள் பேசியபடியே கங்கை நதியை நோக்கி வேகமாக நடைபோட்டுச் சென்றனர். கங்கை நதிக்கரையை அவர்கள் அடைந்த போது கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கங்கை நதி வறண்டுபோய் கிடந்தது.
அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கானல் நீர் கூட தென்படவில்லை. கங்கை நதிக்கரை ஓரமாகவே நடந்து கங்கை உற்பத்தியாகும் இடம் வரை சென்று விட்டனர் அவர்கள். ஆனாலும் அவர்களால் கங்கையை காணமுடியவில்லை.
‘எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நம்மால் கங்கையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே! நாம் ஏதோ அபவாதம் செய்து விட்டதாக தெரிகிறதே!’ என்று புலம்பத் தொடங்கி விட்டனர். பின்னர் கங்கா தேவியை மனதார நினைத்து, ‘தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து தங்களுக்கு காட்சி தர வேண்டும்’ என்று மனமுருக வேண்டினர். அப்போது அவர்கள் முன் தோன்றிய கங்கா தேவி, ‘என்னை காணும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள்.மிகவும் பாக்கியசாலியும், புண்ணியவானுமான, புண்ணியதாமாவை இருவரும் சேர்ந்து நிந்தித்து விட்டீர்கள். ஹரி கதை எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதே போல் ஹரி கதையை தொடர்ந்து கேட்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர் ஆகிறார்கள். அத்தகைய சிறப்பு மிக்க புண்ணியவானின் பாதங்கள் என் மீது படாதா என்று பல காலங்களாக நான் காத்திருக்கிறேன். நீங்களானால் அவரது மனம் புண்படும்படி நடந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். புண்ணியதாமாவிடம் சென்று மன்னிப்பு கோருங்கள்.
அதுவரை உங்களால் கங்கையில் நீராட முடியாது’ என்று கூறி மறைந்து விட்டாள்.
தங்கள் தவறை உணர்ந்து கொண்ட இருவரும் உடனடியாக, புண்ணியதாமாவிடம் சென்று அவரது காலில் விழுந்து தங்கள் தவறை பொறுத்துக் கொள்ளும் படி கேட்டனர்.
அவர்களை அரவணைத்துக் கொண்ட புண்ணியதாமா, இருவரையும் பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஹரி கதை கேட்கும்படியாக செய்தார். பின்னர் அனைவரும் சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்தனர்.
கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாதது.
ஆனால் ஹரி கதை கேட்பது, படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்து முடிக்கக் கூடிய விஷயம்தான். ஹரி கதையை படிப்பதன் வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும். அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும். ஆயிரம் பிரம்மஹத்தி தோஷத்திற்கும் கூட பிராயச்சித்தம் என்பது உண்டு. ஆனால் பகவானின் பக்தனை நிந்திப்பவனுக்கு எந்த பிராயச்சித்தமும் இல்லை என்பதை உணருங்கள். 🙏
*ஸ்ரீ திருமால் அருளாலே இன்றைய நாளும் திருநாள் ஆகட்டும்*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*

 மனித உடல் என்று அழைக்கப்படும் இந்த கருவியின் முழு திறனை நாம் எவ்வாறு அடைய முடியும்?

மனித உடல் துங்கபத்ரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துங்கா என்றால் எல்லையற்றது, பத்ரா என்றால் சுபம் என்று பொருள். இதனால், உடல் என்பது புனிதத்தின் எல்லையற்ற நீர்த்தேக்கம் என்று பொருள்.
எனவே உடல் என்று அழைக்கப்படும் இந்த புனிதமான பரிசு சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது தவறாகக் கையாளப்படுகிறதா என்பதை அனைவரும் கவனமாக ஆராய வேண்டும்.
நாரத முனிவர்தான் ஆழ்ந்த விசாரணையின் பின்னர் துங்கபத்ரா என்ற பெயரை மனித உடலுக்கு வழங்கினார். மனித உடலின் புனிதத்தன்மையைப் புரிந்து கொள்வதற்கும், உன்னதமான மற்றும் புனிதமான செயல்களுக்கு அதைப் பயன்படுத்துவதற்கும், அதிலிருந்து ஆனந்தத்தைப் பெறுவதற்கும் நாம் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்.மனித வாழ்க்கையை ஒரு உலக, பொருள் மற்றும் உடல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.
தீவிர விசாரணையின் மூலம், முந்தைய முனிவர்கள் மனித இருப்பின் ஆழமான முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி உள்ளனர். மனிதன் இன்று துன்பத்தை எதிர்கொள்கிறான், ஏனென்றால் அவன் தன் உடலை சரியாகப் பயன்படுத்தவில்லை, அவனது வாழ்க்கையை வாழ வேண்டியதில்லை, அதாவது மனிதகுல சேவையில் இருக்க வேண்டும். ஒருவர் சமுதாயத்தில் அக்கறை கொள்ளும் போதுதான் மனித உடலை ஏன் துங்கபத்ரா என்று அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளத் தொடங்குவார்கள்.ஆண்டுகள் புதியதாக மாறும், ஆன்மீக ஒழுக்கத்தால் நீங்கள் அதை பரிசுத்தப் படுத்தும்போது அதுவும் ஒரு நாள் புனிதமாகிவிடும்!!!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம், , ’5 தீக்குச்சி விளக்கை ஏற்றியது, எல்லோரும் விளக்கை வணங்கினார்கள்...! பித்தன் கீழே எறியப்பட்ட தீக்குச்சியை வணங்கினான் ஏன் தீக்குச்சியை வணங்குகிறாய்? என்று கேட்டேன்? ஏற்றப்பட்டதை விட ஏற்றி வைத்தது உயர்ந்ததல்லவா என்றான்..’ எனச்சொல்லும் உரை
611
16 கருத்துக்கள்
155 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

 சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள் !*

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
1. சிவலிங்கத்தை பூஜை செய்பவன் சித்தம் சுத்தமாகும் . சித்த ரிஷிகளாகவே மாறுகிறான்
2. சிவலிங்க பூஜை செய்பவன் முடிவில்
சிவமாகவே ஆகிவிடுகிறான்.
3. சிவலிங்கத்தின் பிம்ப தரிசனம்
கொலை செய்தவனின் பாபத்தையும் கூட போக்கும்.
4. சிவலிங்கத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல பாபங்கள் கழன்று ஓடும் .
5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு .
6.சிவபூஜை பூஜை செய்பவனுக்கு
எமபயமில்லை .
7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் , வேள்விகள் செய்து இப்பூஜையினை செய்பவர்கள்
சிவலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள் .
8. சிவலிங்கத்தை பக்தியுடன் நமஸ்கரித்தவன் தேவனாகிறான் ...!
அதன் பின் அவன் சாதாரண மனிதன் அல்லன் ...!
9. சிவலிங்கம் - சிவன் இருக்குமிடம் .
சர்வ பாபங்களையும் நாசம் செய்யவல்லது .
10. பாபங்கள் செய்தவர்கள் கூட சிவலிங்க பூஜையினால் பரகதி அடைகிறார்கள். பக்தியோடு செய்பவர்கள் முக்தியடைகிறார்கள் .
11. அரணி கட்டையில் அக்னி உண்டாவதுபோல, சிவலிங்கத்தின் சிவன் இருக்கின்றார். லஷ்மி மற்றும் வைகுண்டத்தில் இருப்பதைவிட சிவன் சிவலிங்கத்தின் மிகவும் பிரசன்னமாகவே உள்ளார்.
12. சிவலிங்கத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும் கோதானமும் செய்த பலன்.
13. அஸ்வமேத யாகம் ஆயரம் செய்தாலும், ஒரு நாள் சிவலிங்கத்தை பூஜை செய்த பலனுக்கு ஈடாகாது.
14. சிவராத்திரி வேளையில் லிங்கோற்பவ காலத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம் பூஜை செய்தபலன்
ஒரே நாளில் கிடைக்கும்.
15. காமக்குரோதம் உள்ள மனிதன்கூட சிவலிங்க பூஜையினால் முக்தி பெறுவான்.
16.தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே சிவலிங்க பூஜையினால் முக்தியடைவான்.
17. சிவலிங்கத்தை அபிஷேகம் செய்த தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்துவிடும்.
18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சிவலிங்கத்தின் சூட்சுமாமயிருந்து அருள்பாலிக்கின்றனர்.
19. ருத்ர பாராயணம் செய்துகொண்டே சிவலிங்க பூஜை செய்பவன் சிவகதி அடைகிறான்.
20.சிவலிங்கம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும், சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.
21. பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும்..! சிவலிங்க தீர்த்தமே போதுமே நம் உள்ளும் புறமும் சுத்தமாகுமே.
22. ஒரு திவலை சிவலிங்க அபிஷேக தீர்த்தம் சாப்பிட்டாலே போதுமே, மீண்டும் பிறவாநிலை கிடைத்துவிடும்.
*அவனருளாலே அவன் தாழ் வணங்கிடுவோம்!*
*சிவாயநம* *சிவாயநம*
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’4 வரங்கள் கொடு ஆண்டவா! இறுதிக் காலத்தில் 1) யாரையும் தொல்லைப் படுத்தாமல் வாழ வேண்டும். 2) கடனின்றி இறக்க வேண்டும். 3) யாருக்கும் தொந்தரவின்றி சட்டென்று படுத்தவுடன் போய்ச் சேர வேண்டும். 4) உன்னை நினைத்தபடியே உயிர் நீத்து, மறு பிறப்பின்றி உன்னடி நிழலில் நிரந்தரமாக இளைப்பாற வேண்டும்.’ எனச்சொல்லும் உரை
Murali Dharan மற்றும் 445 பேர்
17 கருத்துக்கள்
122 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்