Wednesday 4 November 2020

 பிரதோஷ பிரதட்சணம் செய்யும் முறை*

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
1. பிரதோஷ வேளையில் முதலில் நந்தி தேவரை வணங்க வேண்டும்!
2. பின்னர் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவலிங்கத்தை தரிசித்து வணங்கிட வேண்டும்!
3.அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று திரும்ப வேண்டும்!
4. திரும்பி வழக்கம் போலபிரதட்சணமாக சிவலிங்க சந்நிதியை வலம் வந்து, அபிஷேக நீர் விழும் தொட்டியை கடந்து விடாமல் , வந்த வழியே திரும்ப அப்பிரதட்சணமாக சென்றுமூலவரையும் நந்தி தேவரையும் வணங்க வேண்டும். இதை சோம சூத்ர பிரதட்சணம் என்றும் சொல்வார்கள்!
இதுபோல் மூன்று முறை செய்தால் பிரதோஷ பிரதட்சணம் பூர்த்தியாகி சிறந்த பலன் கிடைக்கும். குறிப்பாக, கடன் தொல்லை தீர பிரதோஷ வழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது.
சிவராத்திரியன்றும்​, பிரதோஷ காலங்களிலும் சிவனுக்கு அபிஷேகம் செய்வது விசேஷமான ஒன்றாகும்.பால், நெய், தேன், சந்தனம், தயிர், நல்லெண்ணய் போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் நம் குறை தீர்க்கும் சக்தி உண்டு!!
1. சிவபெருமானுக்குத் தயிரால் அபிஷேகம் செய்ய குழந்தைவரம்கிட்டும்.
2. சந்தனத்தால் அபிஷேகம் செய்ய அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் பெருகும்.
3. கடன் தொல்லைகள் தீர அரிசி மாவால் அபிஷேகம் செய்யலாம்.
4. வேலை வாய்ப்பு அமைய சிவனுக்கு விபூதி அபிஷேகம்.
5. சர்க்கரை அபிஷேகம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை அழிக்கும்
6. குடும்ப நலன் காக்க ஐயனுக்கு இளநீரால் அபிஷேகம்.
7. மரண பயம் நீங்க எலுமிச்சை சாற்றால் அபிஷேகம் செய்யலாம்.
8. ஆரோக்கியம் காக்கபால்அபிஷேகம் செய்யலாம்.
9. சகல ஐஸ்வர்யம் கிட்டப் பஞ்சாமிர்த அபிஷேகம்.
10. வாழ்வில் முக்தி கிட்ட நெய் அபிஷேகம்.
முறையான வழிபாட்டை முடித்து சிவபெருமானின் இணையில்லா அருளைப் பெறுவோம்.
மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி!

No comments:

Post a Comment