Sunday 8 February 2015

அன்பிற்குரிய குருவே பல திருமணங்கள் முடிந்த பின்பு
ஏன் முன்பு கொண்ட அன்பு அழிந்து போகிறது ?
ஓஷோ பதில் :
திருமணம் எப்படி அன்பை அழிக்கும்?
ஆமாம்,அது திருமணத்தில் அழிகிறது.
"உன்னால்தான் அழிக்கப்படுகிறதே தவிர திருமணத்தால் அல்ல"
துணை சேரும் இருவரும் சேர்ந்துதான் அதை அழிக்கிறார்கள்.
திருமணம் எப்படி அன்பை அழிக்கும்?நீதான் அதை அழிக்கிறாய்,ஏனெனில் அன்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியாது.
நீ தெரிந்தாற் போல் நடிக்கிறாய்.தெரியும் என்று நம்புகிறாய்.தெரியும் என்று கனவு காண்கிறாய்.ஆனால்,அன்பு நேசம் என்றால் என்ன என்று உனக்குத் தெரியாது.
உள்ளத்திலேயே மிகச்சிறந்த கலை அது.
நேசத்தைக் கற்றுத்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.
தூய்மையான நேசத்தை நீ கற்றுக்கொள்ளவில்லை என்றால்
நீங்கள் செய்யும் ஒவ்வொரு திருமணமும் தோல்வியில் தான்
முடியும் .
திருமணம் ஆனந்தமாக இருக்க வேண்டுமென்றால்
அதற்கு நீ நிபந்தனையற்ற அன்பை முழுமையாக செலுத்த வேண்டும் ..
அன்பை எப்படி பெறுவதில் என்பதில் உன் கவனம் இருக்க
கூடாது . அன்பை எந்த வகையில் செலுத்தலாம் என்பதில்
உன் கவனம் இருக்க வேண்டும் .. அப்படி இருந்தால்
நீ செய்யும் திருமணத்தால் உன் வீட்டிலயே சொர்க்கம்
உண்டாகும் .
--- ஓஷோ -

No comments:

Post a Comment