Sunday 8 February 2015

அல்லது குறிப்பிட்ட செயல்களைச் செய்வது என்று அர்த்தமல்ல. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை முழுமையாகக் கொடுக்க முடியும்.எங்கிருந்தாலும் நீங்கள் ஈஷாவை உணர முடியும். ஈஷா என்றால் எல்லையில்லாத இறைத்தன்மை என்றுதான் அர்த்தம். நீங்கள் குடும்ப சூழ்நிலையில் இருந்தாலும் அதையும் நீங்கள் உங்கள் இறைத்தன்மையை உணர்வதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். அல்லது வியாபாரத்தில் இருக்கிறீர்கள் என்றால், அந்த சூழ்நிலையையும் நீங்கள் உங்கள் இறைத்தன்மையை உணர்வதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இப்படி உங்கள் வாழ்வில் ஒவ்வொன்றும், உங்கள் குடும்பம், உங்கள் வேலை, உங்கள் வாழ்க்கை போன்ற எல்லாமும் உங்கள் உணர்தலை நோக்கியே இருக்கும் என்றால், பிறகு நீங்கள் உங்களை ஈஷாவிற்கு அர்ப்பணித்ததாகக் கொள்ளலாம். இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள், நாளை வேறு மாதிரி இருப்பீர்கள் என்றால், பிறகு வாழ்க்கை என்பது என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே பொருள்.
-சத்குரு

No comments:

Post a Comment