Friday 10 January 2014

எளிய இயற்கை வைத்தியம்:- பித்தம் நீங்க: மாதுளம்பழம் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும். நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க: முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும். அம்மை நோயைத் தடுக்க: 10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவாது. குஷ்டநோய் குணமாக: வல்லாரை இலையை பொடி செய்து பரங்கி சக்கை தூளையும் கலந்து வைத்து காலை, மாலை, இரவு மூன்று வேளை வெண்ணெய்யுடன் கலந்து ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர முழு குணமாகும். சர்க்கரை நோய்: ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய், தான்றிக்காய் சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு நீராகாரம் குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும். யானைக்கால் நோய் குணமாக: பசுவின் சிறுநீரும், மஞ்சள்தூள், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் யானைக்கால் நோய் வராது. கெட்டு போய் இருக்கும் ஈரலை குணப்படுத்த: கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர ஈரல் வியாதி குணமாகும். மஞ்சள் காமாலை நோய் குணமாக: தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும். பேதி குணமாக: மாஸகொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் பேதி நிற்கும். இரத்தம் உறைதல் குணமாக: நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம். இரத்தம் விருத்தியாக: செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் விருத்தியாகும். இரத்த சோகையை போக்க: தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும், பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட, ரத்தசோகை நீங்கும். உடல் வலி குணமாக: வில்வ இலையும், அருகம்புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும். உடற் சூடு அகல: கொத்து மல்லி விதைக் கஷாயத்தில் செந்துளசி சாற்றை சேர்த்து உட்கொண்டு வந்தால் அதிகரித்த உடற்சூடு சமநிலை அடையும். மந்தபுத்தி மாற: வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பை 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும். மூளை நல்ல நிலையில் இயங்க: நாள்தோறும் பெரிய நெல்லி ஒன்றை தவறாமல் உண்டு வந்தால் நம் மூளை நல்ல நிலையில் இயங்கும். ஞாபக சக்தி அதிகரிக்க: வல்லாரை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தால் நினைவாற்றலை அதிகரிக்கும். பாதாம்பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவைகளை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஞாபக சக்தி பெருகும்.

No comments:

Post a Comment