Friday 24 January 2014

என் நிலையில் ஒரு சினிமாக்காரி படுத்திருந்தால் இந்நேரம் ஆஸ்க்கார் விருதுவரை பரிந்துரைத்திருக்கும் இந்த அரசாங்கம்...... அவளது கலைச்சேவையை பாராட்டி..... விவசாயத்திற்காக வங்கியிலும் கந்து வட்டிகாரர்களிடமும் வாங்கிய கடனுக்கு வட்டியாக வீட்டில் இருந்த கதவு முதல் கலப்பைவரை பரித்துக்கொண்டார்கள்... அசலுக்காக வீட்டு மனைமுதல் விவசாய நிலம்வரை ஏலம் போட்டுவிட்டார்கள்... இன்று குடியிருப்பதற்க ு நிரந்தரமாய் வீடில்லை...உழுவ தற்கு ஒரு குழி நிலமும் சொந்தமாய் இல்லை... தினக்கூலியாய் உழைத்து உழைத்து உடலும் குறுகிவிட்டது... அது என்ன...... ஒரு அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாகவும், தொழிலதிபர் மகன் தொழிலதிபராகவும், சினிமாக்காரன் மகன் சினிமாக்காரனாகவும் ஆகின்றான்...ஆனால் ஒரு விவசாயியின் மகன் மட்டும் கடன்காரனாகவே சாகின்றானே ஏன்...? இது என்ன ஏட்டில் எழுதாத சட்டமா...? விவசாய தொழிலாளர்கள் மேலும் மேலும் ஏழைகளாகவே ஆகின்றனர் எங்கள் உழைப்பில் வாழும் பணக்காரர்கள் மேலும் மேலும் செல்வந்தர்களாகின்றனர் இது என்ன நியாயம்....? ஓ இதுதான் ஜனநாயகமோ...? என் நிலையில் ஒரு சினிமாக்காரி படுத்திருந்தால் இந்நேரம் ஆஸ்க்கார் விருதுவரை பரிந்துரைத்திருக்கும் இந்த அரசாங்கம்...... அவளது கலைச்சேவையை பாராட்டி..... நாங்கள் யார்....? முகவரியில்லாத விவசாயிகள்தானே.....எங்களுக்கெல ்லாம் இலவசம் என்ற எச்சல் சோற்றை எறிந்துவிட்டு...நீங்கள் மட்டும்.. பொன்னி அரிசியும் கூட்டு பொரியலும் வடபாயாசத்துடன் எங்கள் உழைப்பில்....உண்டு கூத்தடிக்கின்றீ ர்கள்... இது என்ன கொடுமைடா சாமி..... அரசாங்கமும் அரசியல் சட்டமும் கருப்பு பண முதலைகளிடமும், அதிகார வர்க்க ஆட்சியாளர்களிடம ும் இருப்பதால் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு நிவாரணம் எப்படி கிடைக்கும்...? பணமும் பதவியும் இருப்பவர்கள் நாட்டின் பொருளாதாரமே நிலைகுலையும் அளவுக்கு ஊழல் செய்தாலும் அவர்களுக்கு சிறைச்சாலையில் குளிசாதன அறை, வண்ணதொலைக்காட்சி மருத்துவரின் ஆலோசனைப்படி தடப்புடல் விருந்து, உல்லாசத்திற்கு அழகிகள் வேறு... இதற்க்கு பெயர் தண்டனையாம்..... என் போன்றவர்கள் ஒருவேளை உணவுக்காக ஒரு சிறு தவறு செய்தாலும்... மறுநாள் விசாரனைக் கைதி மர்ம மரணம் என்ற தலைப்புச் செய்தியாய் ஊடகங்களில்.... நான்தான் கடவுள் எனக்கூறித்திரிய ும் காமுகர்களும் கோடிகளில் புரள்கின்றார்கள்.....உலக மக்கள் ஜீவித்திருக்க உணவு உற்பத்தி செய்யும் நாங்களோ தெருக்கோடியில்...... இதே நிலை தொடர்ந்தால் நீங்கள் கல்லையும் மண்ணையும் தின்று கடல் நீரைத்தான் குடிக்க வேண்டும்... ஊரை ஏமாற்றுபவர்கள் சொல்கின்றார்கள் கடவுள் இருக்கின்றாராம்...... நாங்களும் அவரைத்தான் தேடிக்கொண்டிருக ்கின்றோம்.....ஒரே ஒரு வரம் கேட்க்க வேண்டி...மாதம் மும்மாரி அக்னி மழையாக பொழிய வேண்டும் என்று.

No comments:

Post a Comment