Friday 10 January 2014

சளி, குறட்டை தொல்லையா. அப்ப இத படிங்க… நாகையில் நடந்த மூலிகை விழிப்புணர்வு முகாமில் தும்பைப்பூவை பல்வேறு வகைகளில் பயன்படுத்தினால் சளி, குறட்டையைபோக்கலாம் என்று மூலிகை மருத்துவர் தேவூர் மணிவாசகம் மருத்துவ ஆலோசனை கூறினார். நாகை கோட்டைவாசல்படியில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தில் வள்ளலார் மூலிகை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வள்ளலார் தெய்வ நிலைய நிறுவனர் ரவி தலைமை தாங்கினார். மூலிகை மருத்துவர்கள் வீரமணிகண்டன், இளங்கோவன், இளமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெய்வ நிலைய நிர்வாகி அருணாச்சலம் வரவேற்றார். முகாமை, மூலிகை மருத்துவர் தேவூர் மணிவாசகம் தொடங்கி வைத்து பேசுகையில், குறட்டை நோயை போக்கவல்ல மூலிகை தும்பை பூவாகும். தும்பை பூவை பாலில் கொதிக்க வைத்து குடித்தால் சளி தொல்லை நீங்கும். 50 மில்லி நல்லெண்ணையில் 50 எண்ணிக்கை தும்பைப்பூக்கள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 21 நாட்கள் தினமும் மூக்கில் மூன்று சொட்டு இட்டு வந்தால் குறட்டை நோய் குணமாகும். 100 மில்லி தேனில் எண்ணிக்கையில்� 50 தும்பைப்பூ, 50 நித்தியகல்யாணிப்பூ ஆகிய வற்றை ஊறவைத்து காலை, மாலையில் ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டையில் சதை வளர்ச்சி, கழுத்தில் வரும் காசக் கழலைகள் குணமாக்குவதுடன் குடலில் ஏற்படும் கட்டி, வீக்கம், குணமாகும். மேலும் 20 தும்பைபூவுடன் 5 கிராம் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர கருப்பை கட்டி கரையும் என்று கூறினார். நிலைய காப்பாளர் சிவநேசன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment