Saturday 25 January 2014

அலோபதி: சொந்தமாகப் பெயர் கூட இல்லாத மருத்துவமுறை! ம.செந்தமிழன் சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், ஓகமுறை மருத்துவம் (யோகா சிகிச்சை) அக்குபஞ்சர், தொடு சிகிச்சை (அக்குபிரஷர்), யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட பல மருத்துவமுறைகள் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன. இவை அனைத்திற்கும் தனித்தனியாக பெயர்கள் உள்ளன அல்லவா. அலோபதி என நாம் இன்று அழைக்கும் முறைக்கென சொந்தமான பெயர் எதுவும் இல்லை என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அலோபதி (Allopathy) எனும் சொல் – ’மாறுபட்ட / வேறான’ என்ற பொருள் கொண்டது. ஓமியோபதியின் தந்தை டாக்டர்.ஹானிமன், தாம் உருவாக்கிய மருத்துவமுறைக்கு ‘ஓமியோபதி’ (Homeopathy) எனப் பெயரிட்டார். அவர் காலத்தில் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்த மருத்துவ முறைக்கென ஒரு பெயரிட்டார், அதுவே ‘அலோபதி’ எனும் சொல். ஓமியோபதி என்றால், நோய்க்குறியீடுகளுக்கு ஒத்த தன்மையிலான சிகிச்சை அளிக்கும் மருத்துவம் என்று பொருள். அலோபதி என்றால், நோய்க் குறியீடுகளுக்கு மாறுபாடான, வேறுபட்ட தன்மையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமுறை என்று பெயர். ஒருவகையில், கேலியாக டாக்டர். ஹானிமன் சூட்டிய பெயர்தான் அலோபதி என்பது. தனக்கென சொந்தமாக பொருத்தமான பெயர்கூட இல்லாதமுறைதான் இன்றைய ‘அலோபதி’ ஆகும். ஆகவே இதனை வசதியாக, நவீன மருத்துவ முறை (modern medicine system) என்று அழைப்பதுண்டு. இதுவும் பெயர் அல்ல, ஒரு பொது அடையாளம். அவ்வளவே. ஆனால், இந்த மருத்துவத்துறை, நோய்களுக்குப் பெயர் சூட்டுவதில் வல்லமை பெற்றது. காய்ச்சல் என்றால் அதற்குப் பலவிதமான பெயர்க்ளைச் சூட்டுவார்கள். மஞ்சள் காமாலை என்றால் அதில் பலவகைகளை அடுக்குவார்கள். சர்க்கரை நோய் என்றால், அதில் பல வித நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றிற்கெல்லாம் பெயர் வைத்து அழகுபார்ப்பார்கள். உண்மையில், மஞ்சள் காமாலை, சர்க்கரை உள்ளிட்ட எண்ணற்ற நோய்களுக்கு அலோபதியில் ‘குணப்படுத்தும்’ மருந்தே இல்லை. இதைத்தான் மரபு மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்திய மருந்து மற்றும் அழகுப் பொருட்கள் சட்டமும் இதையே பட்டியலிட்டுக் காட்டுகிறது. ’’நோயைத் தீர்த்து மனிதர்களை நலமடையச் செய்ய இயலாத நிலையில், நோய்களுக்கு விதவிதமான பெயர்களை மட்டும் சூட்டுவதில் என்ன பயன்?’’ என்பதே மக்களாகிய நாம் முன் வைக்க வேண்டிய கேள்வி. மஞ்சள் காமாலையைச் சான்றுக்கு எடுத்துக்கொள்வோம். அலோபதி இதை Hepatitis என்ற பொதுப் பெயரால் அழைக்கிறது. இதோடு நில்லாமல், ஐந்து வகைகளையும் பட்டியலிடுகிறது. அவை – HAV, HBV, HCV, HDV, HEV ஆகும். அதாவது – ஹெபடைடிஸ் A வைரஸ் (Hpetaitis A virus), B virus, C virus, D virus, E virus ஆகியன. சமீபத்தில், G virus என்பதையும் கண்டறிந்துள்ளனராம். ஆக, மஞ்சள்காமாலையில் 6 வகைகள் இருப்பதாக அலோபதி கூறுகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மைகளும், சில பொதுத்தன்மைகளும் குறிப்பிடப்படுகின்றன. எல்லாம் சரி. மஞ்சள் காமாலைக்கு அலோபதியில் ‘குணமாக்கும்’ மருந்து உண்டா என்றால், இல்லை! என்ன ஒரு வினோதமான மருத்துவமுறை இது! இந்திய மருந்து மற்றும் அழகுப் பொருள் சட்டத்தின் அட்டவணை J பட்டியலிட்டலில், மஞ்சள் காமாலை 33 வது இடத்தில் உள்ளது. அதாவது, இந்த நோய்க்கும் ’குணப்படுத்தும் மருந்து இருப்பதாக அலோபதி மருத்துவத்துறை எந்தவிதக் கருத்தையும் உருவாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது’. இதுதான் சட்டம். இதுதான் நடைமுறையும் கூட. நாம் மஞ்சள் காமாலைக்கு என்ன சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம் எனச் சிந்தியுங்கள். ஏராளமான நாட்டு மருந்துகள் வழியாகத்தான் அந்த நோயை நாம் விரட்டி நலம் அடைகிறோம். அலோபதி மருத்துவர்களில் பலர், கீழாநெல்லி கலந்த ஆயுர்வேத, சித்த மருந்துகளைப் பரிந்துரை செய்வதையும் அனுபவத்தில் காண்கிறோம் அல்லவா. அவர்கள் அவ்வாறு பரிந்துரைப்பது நல்ல நோக்கில்தான் என்பதால், அது வரவேற்கத்தக்கதே. ஏனெனில், ஒரு மருத்துவ முறையில் மருந்து இல்லை என்றால், நோயாளியை பரிசோதனை எலியாக்கி, விளையாடுவதைவிட, பிற முறைகளில் உள்ள மருந்துகளைப் பரிந்துரைப்பதே மனிதநேயம் மிக்க செயல். டெங்கு காய்ச்சல் மற்றுமொரு சான்று. டெங்கு எனப் பெயரிட்டார்களே தவிர, அந்த நோயை முற்றிலும் குணமாக்கும் அலோபதி முறையிலான மருந்து கண்டறியப்படவில்லை. மக்கள் செத்து விழுந்துகொண்டிருக்கையில், பெரும் பீதியில் சமூகம் பதட்டமடைந்து கொண்டிருந்த நிலையில் கூட அலோபதி மருத்துவத் துறை, அதற்கான ‘குணப்படுத்தும்’ மருந்தைக் கண்டறியவில்லை. தமிழக அரசு டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தைப் பரிந்துரைத்தது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்: ’’டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலியும், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைந்தும் காணப்படும். டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. காய்ச்சலை குறைப்பது, ரத்ததட்டு அணுக்கள் குறைவதை தடுப்பது போன்றவைகளுக்கு பொதுவான சிகிச்சை வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த தட்டு அணுக்கள் அழிப்பதால், ரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது. சித்த மருத்துவத்தின், பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும், நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது. எனவே, இவைகள் மூலம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சித்தமருந்துகளை விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நடவடிக்கைதான் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களைக் காத்தது. சித்த மருத்துவம்தான் டெங்குவை விரட்டியது. அம்மை எனப்படும் உடல் தொந்திரவுக்கும் இதே நிலைதான். நம் மரபு மருத்துவத்தில், அம்மை வந்தால், உணவுக் கட்டுப்பாடு, சுகாதாரமான சூழல் ஆகியவற்றுடன், சில பத்திய மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. வேப்பிலைகளைப் பரப்பி அதன் மீது அம்மை தாக்கியவரைப் படுக்க வைத்து, அம்மைப் புண்கள் ஆறும்போது, வேப்பிலை நீரில் மூன்று முறை குளிக்கச் செய்வதே சிகிச்சை முறை. இதை நாம் அனைவரும் அறிவோம். இந்த முறையில்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக, நம் சமூகம் வாழ்ந்து வந்தது, உடல் நலத்துடன். அலோபதியில் இதற்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். Chicken pox என்பதுதான் அது. இது ஒரு விநோதமான பெயர். இந்தப் பெயருக்கான காரணம் குறித்து ஏராளமான ஊகங்கள் மட்டுமே உள்ளன. துல்லியமான ஒரே காரணம் இதுவரை கூறப்படவில்லை. சரி, இது மிக நல்ல பெயராகவே இருக்கட்டும். இதற்கு என்ன ‘குணப்படுத்தும்’ மருந்து உள்ளது அலோபதியில்? இல்லை என்பதுதான் விடை. பிரிட்டன் அரசின் மருத்துவ இணையதளம் அம்மை பற்றிப் பின்வருமாறு உரைக்கிறது: ’ There is no cure for chickenpox, and the virus usually clears up by itself without any treatment.’ (http://www.nhs.uk/Conditions/Chickenpox/Pages/Treatment.aspx) அதாவது, ’அம்மையை குணமாக்க இயலாது. இதை உருவாக்கும் வைரஸ் கிருமி எந்த சிகிச்சையும் இல்லாமலேயே தம்மைத்தாமே அழித்துக் கொள்கிறது’ என்கிறது, அலோபதியின் தலைநகரம் போல் விளங்கும் பிரிட்டனின் அரசு. பிற அலோபதி வல்லுனர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். நம் மரபு மருத்துவம் இந்த உண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்ததால்தான், அம்மை தாக்கியவருக்கு மருந்து தராமல், சிகிச்சை அளிக்கும் முறையை உருவாக்கியது. கூடுதலாக, வேப்பிலையும் பத்திய உணவும் சேர்ந்து, விரைவில் நலமடைய உதவுகின்றன. சர்க்கரை நோயும் இவற்றைப்போல, குணமாக்கக் கூடிய நோய்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அலோபதி மருத்துவத்துறையினால் அதை குணப்படுத்த முடியாது. அவ்வளவுதான். சர்க்கரையிலும் பல நிலைகளைப் பிரித்து அவற்றுக்கெல்லாம் பெயர் இட்டு அழகு பார்க்கிறது, அலோபதி மருத்துவம். வழக்கமான கேள்வியைத்தான் நாம் இதற்கும் கேட்க வேண்டும், ‘பெயர் வைப்பது, வகைப் பிரிப்பது எல்லாம் சரிதான். நோயை குணப்படுத்த உங்களிடம் மருந்து இருக்கிறதா?’ சித்த மருத்துவம், தொடு சிகிச்சை, ஓமியோபதி, ஆயுர்வேதம், ஓக சிகிச்சை உள்ளிட்ட பல முறைகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவை. ஏதோ, அலோபதி மட்டும்தான் இந்த நாட்டின் ஒரே சிறந்த, அங்கீகாரம் பெற்ற, சட்டப் பாதுகாப்பு பெற்ற மருத்துவமுறை எனும் மாயை இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலில் அதை உடைக்க வேண்டும். சித்த மருத்துவம் உள்ளிட்ட பல மரபு மருத்துவங்களில் ’சர்க்கரை நோயை குணப்படுத்த மருந்துகள் உள்ளன’ என்பது சட்டப்படியான, நடைமுறைப்படியிலான, மரபுவழிப்பட்ட உண்மை ஆகும். இந்த உண்மையை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இனிப்பு ஆவணப்படத்தில், இந்த உண்மைகளைத்தான் பதிவு செய்கிறேன்.

No comments:

Post a Comment