Monday 3 February 2014

புலிப்பாணிச்சித்தர் ஜோதிடம் 300..

சித்தர்களில் பலர் மக்களின் நலன்களை கருதியும், தங்களின் சீடர்களின் துயரங்களைப் போக்கிடும் வகையில் சோதிட ஆய்வுகளின் தெளிவுகளை நூலாக்கி தந்திருக்கின்றனர்.இவை எல்லாமே வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் வகையில் வகுத்தளித்துள்ளனர்.

இத்தகைய நூல்களில் தனி சிறப்பாக சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின் ”புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலாகும். இந்த நூலில் பல அரிய விபரங்களை விளக்கியுள்ளார். இதிலிருந்து ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும்.

வான் மண்டலத்தில் நீள் வட்ட பாதையில் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை சுற்றிவரும் பாதையில் தான் இருபத்தியேழு நட்சத்திரங்களும் உள்ளன. இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களின்ன் பாதைகளை பன்னிரண்டு ராசிகளாக பிரித்து, அவற்றை நூற்றி இருபது அம்சங்களாக பகுத்திருக்கின்றனர்.

சந்திரன் இரண்டேகால் நாள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். பிறந்த நேரத்தினைக் கொண்டு சூரியனின் அமைப்பைக் கொண்டு ஒருவரின் லக்னத்தையும், சந்திரனை வைத்து ராசியும் கண்டுபிடிக்கபடுகிறது.

ஜோதிட விதிகளின் படி நாழிகை கணக்கே வழக்கத்தில் உள்ளது. ஒருநாள் என்பது அறுபது நாழிகை ஆகும். அதாவது இருபத்தி நாலு மணி நேரம் அறுபது நாழிகை என்று கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு நாள் என்று எழு நாட்கள் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் ராகு , கேது கிரகங்களுக்கு தனியே நாட்கள் வழங்கப்பட வில்லை. இப்படி கிரகங்கள் சஞ்சரிக்கும் கால அளவுகளை ஒட்டியே கிழமைகள், திதிகள், வாரம், வருஷம், எல்லாம் குறிக்கப்படுகின்றன.

புலிப்பாணி ஜோதிட முறை குறித்த மேலதிக விரிவான விவரங்கள் அடுத்த பதிவில்...

No comments:

Post a Comment