Saturday 8 February 2014

டுகு மருத்துவ பயன்கள்:-

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான். அதனால்தான் எல்லா குழம்புகளிலும் கடுகு தாளித்து சேர்க்கிறார்கள். கடுகின் சத்துப் பட்டியலை பார்க்கலாம்......

* கடுகு செடியில் விளையும் ஒரு வகை விதையாகும். இது துருக்கியை தாயகமாகக் கொண்டது. ஆனால் தற்போது கனடா, இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய மண்டலங்களில் மிகுதியாக விளைகிறது. வெள்ளை, கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் கடுகு விளைகிறது.

* கருப்பு கடுகுதான் காரம் மிகுந்தது. வெள்ளை கடுகு என்றழைக்கப்படும் கடுகு வகை கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மற்ற இரண்டு கடுகு வகைகளைவிட சற்று பெரிய விதையாக இருக்கும். காரம் குறைந்தது. பழுப்பு கடுகு வடஇந்தியாவில் விளைகிறது.

* கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது.

* கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

* போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற 'பி- காம்பிளக்ஸ்' வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும். நியாசின் (வைட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

* கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

*சிலர் தொடர்ந்து இருமிக்கிட்டே இருப்பாங்க. இதுக்கு கடுகை பொடியாக்கி, அரை கிராம் அளவு எடுத்து தேன் சேர்த்து காலை, மாலைனு 2 நாள் சாப்பிட்டு வந்தா… கட்டாயம் பலன் கிடைக்கும்.

*கடுகு அக்னிமந்தம், சோபம், வாதம், குழம்பிய உமிழ் நீர், கிரகணி, வயிற்றுவலி, திரிதோஷம் இவைகளை விலக்கும்...முறைப்படி உபயோகிக்க தலைமூளை, ஊள்ளுருப்பு மாசுக்களையும், குண்டிக்காய், நீர்ப்பைகளின்கற்களையும் நீக்கும். இன்னும் அநேக நோய்களை நிவர்த்திக்கும் மகத்தான சக்தி கொண்டது.

*கடுகெண்ணை மூட்டுவலிக்கு நல்ல மருந்து. சூடாக்கி பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.

*கடுகை அரைத்து முட்டிவலி மற்றும் ரத்தக்கட்டியின் மீதும், தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போட்டால் வலி நீங்கும்.

*கடுகு எண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர் வரை, உடலில் பூசி ஊரவைத்து குளிப்பது சருமத்திற்கு வனப்பளிக்கின்றது, மேலும் தலை முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

*கடுகினை பச்சையாக சேர்த்து அரைத்த உணவுப் பொருட்கள் வயிற்றில் வேக்காளத்தை உண்டாக்கும். கடுகுக் கீரை ஜீரணத்தை பாதிக்கும். அதனால் காலநிலைக்கு ஏற்றவாறு உபயோகிக்க வேண்டும்.

*இதனால், உடல் ஆரோக்கியம் அதிகரித்து சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. உணவில் கடுகை தினமும் சேர்த்துக் கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment