Saturday 8 February 2014


கசகசாவின் மருத்துவக் குணம்:- ( குறிப்பை தவறாமல் படிக்கவும் )

இந்த கசகசா செடியில் விதைகள் தாங்கி இருக்கும் பை முற்றி அது முழுவதும் காய்ந்த பிறகே கசகசா வரும். ஆனால் விதை பை பசுமை நிறத்தில் இருக்கும் போதே அந்த விதை பையை கீறி...அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அது தான் "ஓபியம்" என்கிற போதை பொருள்.

ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும். மலச்சிக்கலைக் குணமாக்கும். சருமத்தை மெருகேற்றும் என்பதால் அழகுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. கலோரி, புரதம், எண்ணெய், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம், நீரில் கரையும் நார்ச் சத்து (Soluble Fibre)ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம் ஓரளவு இருக்கிறது. அசைவ உணவில் இருக்கும் எண்ணெய்த் தன்மையைக் குறைக்கும் என்பதால், அசைவ உணவில் அதிகம் இடம்பெறுகிறது.

இவ்வாறு சிறப்பு மிக்கது கசகசா இதை பொதுவாக சருமத்தைப் பாதுகாக்க பயன்படுத்ப்படுகின்றது. வறன்ட சருமத்தைப் பாதுகாக்க பொன் வறுவலாக வறுத்து அரைத்து முகத்தில் பூசலாம். என்னை பசையான சருமத்துக்கு பயத்தம் மா சேர்த்து அரைத்து பூசலாம். இதனால் சருமம் பளபளப்பாகும். குளிப்பானங்களில் கசகசாவை இட்டும் அருந்த முடியும். உடலுக்கு குளிர்ச்சி தரும். உணவுப் பொருட்களை தயாரிக்கும் போதும் கசகசாவைப் பயன்படுத்து கின்றனர் (பொதுவாக அசைவ உணவுதயார்ப்பின்போது)

கசகசா சில திண்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது.

எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.

ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.

10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

கசகசாவை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டு வர ஆண்மை பலன் பெறும்.

கசகசாவைச் சிறிது எடுத்து, பாலில் ஊறவைத்துத் தேய்த்து குளித்தால் பொடுகு குறையும்.

குறிப்பு:-

''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை! இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது. கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment