Monday 3 February 2014

சரக்கடித்து விட்டு உடலைக் கெடுத்துக் கொள்ளும் அன்பானவர்களுக்காக இந்த முள்ளங்கி சூப்.....
சரக்கடித்து விட்டு காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த சூப்பை செய்து சாப்பிட்டால்..கல்லீரல்,குடல் எதுவும் பாதிக்கப் படாது...

தேவயான பொருட்கள்
முள்ளங்கி - 1
பூண்டு - 10 பல்
சிறு பருப்பு _100 கிராம்
சோயா மாவு _ 1 டீஸ்பூன்
உப்பு,மிளகு _ தேவையான அளவு.

செய் முறை விளக்கம்:முள்ளங்கியை சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன்,பூண்டு,சிறுபருப்பு சேர்த்து வேக வைத்து மசித்துக் கொள்ளுங்கள்.
மசித்த கலவையில் சூப்பின் அளவிற்கு நீர் விட்டு கொதிக்க விடுங்கள்.சோயா மாவை நீரில் கரைத்து இதில் சேர்த்து, ஒரு கொதி வர விட்டு இறக்கும்போது உப்பு மிளகுபொடி சேர்த்து பரிமாறுங்கள்.(கொத்தமல்லி இலையும் இறக்கும்போது பொட்டுக் கொள்ளலாம்.)
அனைவருமே சாப்பிடக் கூடிய ஒரு சூப் இது...உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இரவு உணவில் முள்ளங்கியைத் தவிர்ப்பது நலம்.

No comments:

Post a Comment