Monday 3 February 2014

ஆரோக்கிய குறிப்புக்கள்:-

*படர்தாமரை போக:
அறுகம்புல்லும், மஞ்சளும் சம அளவு எடுத்து அதை நன்கு அரைத்து படர்தாமரையில் பூச படிப்படியாக படர்தாமரை மறையும்.

* பல் ஈறு, வீக்கம், வலி போக:
கிராம்பு, கற்பூரம், ஓமம் சம அளவு எடுத்து நன்றாகத் பொடி செய்து அதை வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் போய்விடும்.

*குழந்தைகள் பேதிக்கு:
புளியாரை, வாழைப்பூ ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து பின் அதை அவித்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

* அஜீரண பேதிக்கு:
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் குழைத்து சாப்பிட அஜீரண பிரச்சினை தீரும்.

* உடல் எடை கூட:
பூசணிக்காய் பருப்பை எடுத்து காய வைத்து பின் பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

No comments:

Post a Comment