Sunday 5 June 2016

வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் 1
பஞ்ச பூத இயற்கை சக்திகளை சமன்படுத்தல்,பரவ விடுதல்,ஈர்த்தல் இவைகளின் மூலம் நமது வீடு,கடை மற்றும் வசிப்பிடத்தை ஆரோக்யமானதாகவும் வளம் தருவதாகவும் வைத்துக்கொள்ள உதவும் முறைகளைக் கூறுவது வாஸ்து மற்றும் சீன பெங்சுயி சாஸ்திரம் .
வாஸ்து மற்றும் சீன பெங்சுயி சாஸ்திரம் பற்றிய பல ரகசிய விபரங்களை இன்று முதல் பார்க்கலாம்.
வாஸ்து பகவான் காயத்ரி
ஓம் அனுக்ரஹ ரூபாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தன்னோ வாஸ்து புருஷ ப்ரசோதயாத்
வீடு, கடை ,தொழிற்சாலை பீடைகளும் திருஷ்டிகள் ஆபத்துக்கள் நீங்க
1.பயன்படுத்தாத, உடைந்த, செயல்படாத பொருள்களை அகற்றவும்.
2.ஒரு எச்சில் செய்யாத பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் கருந்துளசி அல்லது செந்துளசி இலைகளைப் பறித்து 1:30 மணிநேரம் கழித்து அந்த நீரை வீடு முழுவதும் வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து வர எல்லாப் பீடைகளும் நீங்கி நலமும் வளமும் உண்டாகும்.கடை,தொழிற்சாலை இவைகளானால் கடை,அல்லது தொழிற்சாலையில் தெளித்து கடை ,தொழிற்சாலையின் வாசல் முகப்பு பகுதியிலும் முதலாளி,மேனேஜர் அறைக,காசாளர் அறை மற்றும் முக்கியமான பகுதிகளிலும் தெளிக்கவும்.
இதை மாதம் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் 2
தென்மேற்குத் திசை - மண் தத்துவத்தைக் குறிக்கும்.இந்திய வாஸ்து சாஸ்திரத்தின் படி இத்திசை திருமண காரியம் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளை குறிக்கும்.
இத்திசையில் பசுமையான செடி,மரங்கள் வளர்க்கக்கூடாது.அவ்வாறு வளர்ந்தால் திருமணத்தடை கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்படும்.
இத்திசையில் அளங்கார மின்விளக்குகள் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும். குறிப்பாகத் தகுந்த வாழ்க்கை துணை அமைய உதவும். குறைந்தது மாலையில் 2 அல்லது 3 மணிநேரமாவது எறிந்தால் நல்ல பலன்களைத் தரும்.பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அழங்கார மின்விளக்குகள் வைத்தல் நலம்.தூசு படியாமால் அவ்வப்போது துடைத்து வைக்க வேண்டும்.
தெற்குத்திசை - நீர்தத்துவத்தை குறிக்கிறது.இத்திசையில் மண்,களிமண், ஸ்படிகம்,கண்ணாடியினால் ஆன பொருட்களை வைக்கக்கூடாது.அவ்வாறு வைத்தால் அது தொழில்,வேலையில் பிரச்சனைகளை உண்டாக்கும்.
பெங்சுயி சாஸ்திரப்படி பொருளாதாரம் என்ற பணம் நீர் தத்துவத்தோடு தொடர்புடையது.தேவையின்றி நீரை வீணாக்குவது,நீர்க்குழாய்களில் நீர் வீணாய்க் கசிவது பண விரயத்தை ,பண வரவில் தடையை உண்டாக்கும்
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்:- 3
காசாளர் அறை (CASH COUNTER) அமைப்பு :-
கடை ,தொழிற்சாலைகளின் மைய நோக்கம் லாபமும் ,பணத்தைப் பெருக்குவதுமே. அதற்கு முக்கியமாக காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டரின் அமைப்பு சரியாக இருக்கவேண்டும்.
குறிப்பு :
1.உள்ளே வரும் வாடிக்கையாளர்களைக் காசாளர் எளிதில் காணும் வண்ணம்
கேஷ் கவுன்டர் இருக்கவேண்டும்.
2.கடையின் மையப்பகுதியில் காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டர் இருந்தால் விற்பனை அதிகரிக்கும்.
3.குறிப்பாக காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டரை பிற கவுன்டர்களில் இருந்து தனித்து இருக்கும் படி சிறிது தள்ளி அமைப்பது நல்லது.
4.காசாளரின் பின்புறம் ஒரு கண்ணாடி வைத்தால் நிரந்தர பணப்புழக்கம், விற்பனை அதிகரிப்பு ஏற்படும்
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்:- 4
டாய்லெட் அமைப்பு :-
பெங்சுயி வாஸ்துவில் பணம்ஜலத் தத்துவத்தோடு தொடர்புடையது.எனவே கடை,வீடு,தொழிற்சாலைகளில் தேவையின்றி நீர் செலவாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.குழாய்கள்,தொட்டிகளில் லீக்கேஜ் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும்.
குளியல் அறை மற்றும் டாய்லெட் இவற்றில் நீர் தொடர்ந்தும் அதிகமாகவும் வெளியேறுவதால் டாய்லெட்டை பீரோ,பணப்பெட்டி ,அடுப்பறை,ஸ்டோர் ரூம் இவற்றின் அருகில் அமைக்கக்கூடாது .
டாய்லெட் வீட்டின் பிரதான நுழைவாயிலின் அருகிலும் அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைத்தால் அடிக்கடி உடல் நலக்குறைவு,தீரா நோய்கள் ,கையிருப்புக் குறைவு ,பணப்புழக்கம் இன்மை ஏற்படும்.
மாடிப்படியின் கீழும் அமைக்கக்கூடாது .அவ்வாறு அமைத்தால் அடிக்கடி வயிற்றில் நோய்,வலி உண்டாகும்
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்:- 5
சமையல் அறை அமைப்பு:-
நமது சமையல் அறையின் அமைப்பு நிதிநிலையின் தன்மையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
பிரதான வாசலுக்கு நேர் எதிரே சமையல் அறை அமைக்கக்கூடாது. ஏனென்றால் பிரபஞ்ச சக்தி பிரதான நுழைவு வாயில் வழியாகவே வீட்டினுள் வருகிறது.எனவே மேற்கண்டபடி சமையல் அறை அமைந்தால் பிரபஞ்ச சக்தி நெருப்பில் கலந்து கரைந்து விடும்.செல்வம் சந்ததி என எல்லா நிலைகளிலும் விருத்திக் குறைவு ஏற்படும்.
வீட்டின் மையப் பகுதியில் சமையல் அறை அமைந்தால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்யத்தைக் கெடுக்கும்.
அடித்தளத்தில் (BASEMENT) அமைந்தால் பெண்களின் உடல்நிலையைப் பாதிக்கும்.
தவிர்க்கமுடியாத காரணத்தினால் அல்லது இடமின்மையால் மேற்கண்டவாறு சமையல் அறை அமைந்திருந்தால் சமையல் அறையில் கதவு ஜன்னல்களில் திரைச்சீலையும், 5 குழல்களால் ஆன காற்று மணியும் WIND CHIME தொங்கவிடவும்(படம் இணைக்கப்பட்டுள்ளது) அமைக்கவும்.இது எதிர்மறையானபாதிப்புகளைக் குறைக்கும்.
அடுப்பு - சமையல் அறையின் பிரதான வாயிலை நோக்கியபடி எளிதில் பார்வையில் படும் வண்ணமும் வைக்கப்படவேண்டும்.
சிங் மற்றும் காஸ் சிலிண்டர் ஒரே திசையில் அருகருகே வைக்கப்படக் கூடாது.சிங் சமையல் அறையின் வடக்கு பக்கம் வைக்கப்படவேண்டும்.அப்படி இயலாத பட்சத்தில் தெற்குத் திசை தவிர மற்ற திசையில் அமைக்கலாம்.
காஸ் சிலிண்டர் - அக்னி தத்துவத்தின் திசையான தெற்குத் திசையில்வைக்கப்படவேண்டும்.
டைனிங் டேபிள் - சமையல் அறையின் தெற்குப்பக்கம் இருக்கவேண்டும்.
கண்ணாடி மற்றும் உலோகத்தினால் ஆனதைவிட மரத்தினால் செய்யப்பட்ட டைனிங் டேபிள் சிறந்தது.அது வட்டம் ,சதுரம்,செவ்வகம் என ,இருக்கலாம்.
உத்தரத்தின் கீழ் அமைக்கக்கூடாது
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் : 6
அலுவலகம் அமைப்பு :-
அலுவலகத்தின் அமைப்பு நல்ல முறையிலும் அழகாகவும் இருந்தாலும் கூட நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பு வகிக்கும் முதலாளி,மேனேஜிங் டைரக்டர்,மேனேஜர் போன்றோர் அமரும் விதம் சரியாக இல்லையென்றால் நிறுவனம் தொடர்ந்த சரிவையே சந்திக்கும்.
இதைச் சரி செய்ய பெங்சுயி கூறும் வழிமுறைகள் இதோ:- இவை நம்நாட்டு வாஸ்து குறிப்பு போலவே உள்ளது.
பிரதான வாசலுக்கு நேர் எதிரே அலுவலக அறை ( OFFICE ROOM ) இருக்கக் கூடாது.இப்படியான அமைப்பு அதில் அமரும் நபரையும் அவரது நிர்வாகத் தன்மையையும் பாதிக்கும்.எனவே ,பிரதான வாசலில் இருந்து தூரத்தில் அல்லது சற்றுத் தள்ளி ஏதேனும் ஒரு மூலையில் அமைக்கப்படவேண்டும்.
மேலும்,அமர்பவரின் பின்னால் ஜன்னல் (WINDOW) இருக்கக்கூடாது.அவ்வாறு இருந்தால் அமர்பவரின் நிலை அடிக்கடி மாறுதலைச் சந்திக்கும்படியும், நிலையற்றதாகவும் இருக்கும்.பின்னால் சுவர் இருந்தால் நல்லது.
உள்ளே வருபவர்களைத் தான் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்கும் வண்ணமும் அலுவலக அமைப்பு இருக்கவேண்டும்
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் : 7
செல்வம் ஈர்க்க ,பணவரவு நிலைக்க வாஸ்துக் குறிப்புகள்
1.வீட்டின் முன்னர் ஒரு துளசிச் செடி நட்டு வளர்க்கவும்.அல்லது ஒரு பூந்தொட்டியில் வைத்து வீட்டு முன் வளர்க்கவும். தினமும் கிழக்கு நோக்கி நின்று செடிக்குத் தண்ணீர் விடவும்.
2.வீட்டில் எப்பொழுதும் துடைப்பம்,டஸ்டர்,பிரஷ்,குப்பைகள் போட்டு வைக்கும் பக்கெட்டுகள் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்யும் பொருட்கள் அனைத்தும் வீட்டில் நுழைபவர்கள் பார்வையில் எளிதில் படும்படி வைக்கக் கூடாது.
3.பணம் வைக்கும் பீரோ.லாக்கர்,கபோர்டில் பெங்சுயி அதிர்ஷ்ட(வளம்பெருக்கும்) சிம்பலை ஒட்டி வைக்கவும்
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment