Saturday 4 June 2016

பாதுகா பைரவ மந்திர சாதனை
கலியுகத்தில் மக்கள் எல்லா ஒழுக்க மற்றும் சாத்திர நியதிகளைக் கடைப்பிடிக்க மாட்டார்கள் அவர்களுக்கு இறையருள் பெற்று நல்வால்வு வாழ பகவான் ஸ்ரீ பைரவ மந்திர சாதனையும் வழிபாடும் மிக எளிதானதாக இருக்கும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
பைரவர் சிவனது மற்றொரு வடிவமே என்றும் சிவனின் அடியவர்களைச் சாதாரண மற்றும் மரணத்திற்கு ஒப்பான துன்பங்களில் இருந்து காத்தருள்வதே அவரது பிரதான இயல்பு எனச் சிவ புராணம் கூறுகிறது.
பாதுகா பைரவ சாதனையின் பலன்கள் :-
1.எல்லாவிதமான துன்பங்கள்,தடைகள்,மரணகண்டங்கள் இவற்றில் இருந்து தீர்வு
2.குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி மன அமைதி பெற
3.வருடத்திற்கு ஒருமுறை இந்த மந்திர ஜப சாதனை செய்து வந்தால் எதிர்காலத்தில் நமது கர்ம வினையால் நிகழவிருக்கும் பல துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
4.வழக்குகளில் வெற்றி பெற ,எதிரிகளால் பாதிப்பு வராமல் இருக்க
5.ஒருவரின் வாழ்வும் செல்வங்களும் பாதுகாக்கப் பெற
ஜப ( பூஜை )முறை :-
ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று குளித்து முடித்து சுத்தமான ஆடை அணிந்து ஒரு மரப்பலகை வைத்து அதில் கருப்பு எள் மூன்று கைப்பிடி எடுத்து குவித்து வைக்கவும்.அதன் மேல் பாதுகா பைரவ யந்திரத்தை வைக்கவும்.நெய்விளக்கேற்றி விளக்கையும் யந்திரத்தையும் குங்குமத்தால் அர்ச்சித்து இந்த சாதனையில் சித்தி அருள வேண்டவும்.
த்யான ஸ்லோகம்:-
பக்த்யாம் நமாமி பாதுகாம் தருணம் த்ரிநேத்ரம்|
காம பிரதான வர கபால திரிசூல தண்டான் |
பக்தார்த்தி நாசகரணே ததாதம் கரேஷு |
தம் கோஸ்துபா பரான் பூஷித திவ்ய தேஹம் ||
இந்த த்யான ஸ்லோகத்தை ஜெபித்து பின்னர் வலது கையில் சிறிது அட்சதை எடுத்து எந்த பிரச்சனை நீங்க வேண்டுமோ அதை உரக்கச் சொல்லி அட்சதையை வலது கையில் வைத்தபடி தலையைச் சுற்றவும்.பின்னர் அதை எல்லாத் திசைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் தூவி விடவும்.இதன் பின்னர் ருத்ராக்ஷ மாலையை ஏந்தி மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.
மூல மந்திரம்:-
ஓம் ஹ்ரீம் |
பாதுகாய ஆபதுத்தாரனாய |
குரு குரு பாதுகாய |
ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா ||
இந்த மந்திரத்தைத் தினம் 700 தடவை வீதம் தொடர்ந்து 7 நாட்களுக்கு ஜெபிக்கவும்.7 நாட்கள் கழித்து அந்த யந்திரத்தையும் ருத்ராக்ஷ மாலையையும் ஆற்றிலோ குளத்திலோ போட்டு விடவும்.விரைவில் நல்ல மாற்றங்களைக் காணத் தொடங்குவீர்கள்
Like
Comment

No comments:

Post a Comment