Sunday 5 June 2016

எளிய காயகற்ப முறைகள்
குமரி கற்பம் என்ற செங்கற்றாழை கற்பம்
சித்தர்கள் குறிப்பிடும் காய கற்ப மூலிகை,தாவர வகைகளில் இன்றைய கால கட்டத்தில் எளிதாக கிடைக்கும் வகைகளில் ஒன்றுதான் கற்றாழை ஆகும்
இதனைப் பொதுவாக சித்தர்கள் 'குமரி' எனக் குறிப்பிடுகின்றனர் .உடலினை என்றும் இளமையாக வைக்கும் தன்மை இதற்குண்டு என்ப தனை சித்தர்கள் தங்கள் மெய்ஞானத்தால் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக கற்றாழையில் உடலிற்குத் தேவையான வைட்டமின் சத்துக் கள் ஏராளமாக உண்டு.இது உடலில் சேரும் நஞ்சுகளை வெளியேற்றி உடலின் செல்களை உயிர்ப்புடன் காக்கின்றது. எனவே இதனை முறைப் படி உண்டோமானால் முதுமை தோன்றாமல் தேகத்தை என்றும் இளமை யுடன் (காய கற்பம்) காத்துக் கொள்ளலாம்.
சிவப்புக் கற்றாழையை மேலே உள்ள தோலை சீவி நீக்கி விட்டு அதன் சதைப் பகுதியை மட்டும் எடுத்து தண்ணீரில் அலசி விடவும்.பிறகு அந்த தண்ணீரை ஊற்றி விட்டு புது தண்ணீரை விட்டு அலசவும்.இதே போல் ஏழு முறை தண்ணீர் விட்டு கழுவி விட்டு எடுத்து திரிகடுகு தூளில் அதாவது சுக்கு மிளகு திப்பிலி ஆகியவற்றின் பொடி(திரிகடுகம் விளக்கம் கடைசியில் பார்க்கவும்)
திரிகடுகு தூளில் பிரட்டி அதில் தேன் ஊற்றி 9 நாள் சூரிய ஒளி படும்படி வைத்தெடுத்து இக்கற்றாழை கற்பத்தை மென்று உண்ணவும்.
இதேபோல் காலை - மாலை உண்ணவும்.தொடர்ந்து ஒரு மண்டலம் - 48-நாள் உண்ணவும்.இதுவே காயகற்பம் ஆகும்.
இதன் பலன்கள் :
உடலில் கஸ்தூரி வாசனை வீசும்,.உடலில் வியர்வை வெளியேறாது, தலை முடி கருக்கும், பார்வைத்திறன் அதிகரிக்கும்.(நரை,திரை)மாறும். உடலில் முழுதும் பிராணன் நிரம்பும்.சோம்பல்,கொட்டாவி,தூக்கம் வராது.மனம் விழிப்பு நிலையில் நின்று "குண்டலினி"யோகம் சித்திக்கும்
+++++++++++++++++++
மேற்படி 7 முறை கழுவிய சோற்றை திரிகடுகு (சுக்கு,மிளகு,திப்பிலி,)சுரணமிட்டு பிசறி சிறிது பசு நெய் விட்டு பிசறி நாட்டு சர்க்கரை சிறிது சேர்த்து காலை வெறும் வயிற்றில் விழுங்கவும்.இப்படி காலை,மாலை,48 நாட்கள் சப்பிட்டுவரவும்.ஒருமண்டலம் சாபிட்டால் மூலம்,பௌத்திரம்,18 வகை குஷ்டநோய்கள் பனிபோல் விலகும்.
இப்படி ஒரு வருடம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம்,திடமும் உண்டாகி ஞானியாவான்.
12 வருடம் சாப்பிட்டால் சித்தனுக்கு சித்தனாகி,உமிழ்நீரில் சூதத்தை கட்டுவான்.
குறிப்பு
மருந்தை வெயில் காலத்தில் சாப்பிட ஆரம்பிக்கவும்.உடல் அதிகம் குளிர்ச்சி உற்றால் திரிகடுகை அதிகம் சேர்த்து சாப்பிடவும்.இல்லறத்தை துறந்தவர்களுக்கு இது நன்மை பயக்கும்
++++++++++++++++++++
திரிகடுக காயகற்பம்!
திரிகடுகம் ஓர் அறிமுகம்.
திரி என்றால் மூன்று. கடுகம் என்றால் மருந்து. மூன்று மூலங்களினால் ஆன மருந்துதான் திரிகடுகம். பழந்தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த இந்த மருந்தைப் பற்றி, இன்றைய தலைமுறையினருக்கு எத்தனை தெரியும் என்பது கேள்விக்குரியது. திரிகடுகம், திரிகடுகு என்றழைக்கப் படும் இந்த மருந்துதான் பழந்தமிழரின் நோயற்ற பெருவாழ்வுக்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இருந்ததென்றால் மிகையில்லை.
திரிகடுகம் உடலையும், உயிரையும் காக்கும் எளிய அருமருந்து. நமது முன்னோர்களின் வாழ்வில் இந்த மருந்து இரண்டற கலந்திருந்தது. கால ஓட்டத்தில் நாம் மறந்துவிட்ட நமது மேலான அடையாளங்களில் இதுவும் ஒன்று.
சுக்கு மிளகு திப்பிலி என்கிற மூன்று மூலகங்களை சூரணமாகவும், பல்வேறு வகையிலும் மருந்தாக பயன்படும் தகவலை நேற்றைய பதிவில் பார்த்தோம். அந்த வகையில் திரிகடுகத்தைக் கொண்டு உடலை பேணும் கற்பம் ஒன்றினை தயாரிக்கும் முறையினை இன்று பார்ப்போம். இந்த காயகற்பம் தயாரிக்கும் முறை கருவூரார் அருளிய "கருவூரார் வாதகாவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.
இந்த கற்பத்தை "திரிகடுக கற்பம்" என்கிறார் கருவூரார்.
அற்புதமா தாகவொரு - மருந்து
அறைகிறேன் இன்னதென்று தெரிந்து கொள்ளும்
கற்பமொன்று விள்ளுகிறேன் - நல்ல
கற்றாழைஞ் சொறெடுத்து விஸ்தாரமாய் வெருகடி
திரிகடுகு பொடிபண்ணி - வெருகடி
தீர்க்கமுடன் கற்றாழஞ் சோற்றுடனே
பிரட்டியே தின்றுவரக் - காயம்
பிலக்குமப்பா நரை திரைமாறும்
சித்தருக்குச் சித்தனப்பா - பர
தேசியர்க்குப் பர தேசிகனாம்
ஞானிக்கு ஞானியப்பா - அஞ்
ஞானிக்கஞ் ஞானியாய்த் தோணுமப்பா
இல்லத்துக் கில்லனுமாய்க் - கோடிவய
திருப்பான் பதினாறு வயதது போல்
கற்றாழை சோற்றில் வெருகடி* அளவு எடுத்து அதனுடன் திரிகடுக சூரணத்தை வெருகடி* அளவு சேர்த்து நன்றாக பிரட்டிக் உண்ண வேண்டுமாம். இப்படி சாப்பிட்டு வர நரைதிரை மாறி உடலும் உறுதியாகுமாம். மேலும் அத்தகையவர்கள் சித்தருக்கு சித்த்னாகவும், பரதேசிகளுகு பரதேசியாகவும், ஞானிகளுக்கு ஞானியாகவும், இல்லறத்தாருக்கு இல்லறத்தானாக சிறந்து பலகாலம் பதினாறுவயது போல் வாழலாம் என்கிறார்.
எல்லாம் சரிதான், எத்தனை நாட்கள்? எந்த வேளையில் உண்பது?
இதுவொரு வருடங் கொண்டால் - இவனுக்
கிப்பிறவி போகப்பிற் பிறவியில்லை
தேவலோகம் நாகலோகம் - முழுதும்
தேவ னிவனென்றே செப்பலாகும்
நேராகவே தோன்றும் - மல
நீர்விட்ட இடங்களில் வர்ணம்பேதிக்கும்
அமிர்தம் ரசத்தைக்கட்டும் - அவன்
அவனியிற் பேர்பெற்ற சித்தனப்பா
இந்த கற்பத்தினை காலை அல்லது மாலை வேளையில் தொடர்ந்து ஒருவருடம் உண்ண வேண்டுமாம். அப்படி உண்பதால் இனி பிறப்பே இருக்க மாட்டாது என்கிறார். இந்த காயகற்பம் உண்டவர்கள் உலகில் பெயர் பெற்ற சித்தனாக இருப்பார்கள் என்கிறார்.
* வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கு மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.
"சுக்கு","மிளகு","திப்பிலி" என்கிற இந்த மூன்றும் கூடியதுதான் திரிகடுகம். ஆம், எளிதாய் கிடைக்கிற இந்த மூன்று தாவரப் பொருட்களே நோயற்ற வாழ்வின் ரகசிய மருந்து. திரிகடுகம் போலவே திரிபலா என்கிற ஒன்றும் தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தது. நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றும் சேர்ந்ததுதான் திரிபலா. திரிகடுகத்தை மும்மருந்து என்றும், திரிபலாவை முப்பலை என்றும் அழப்பர்.
திரிகடுகத்தின் மகத்துவம் பற்றி சொல்ல வரும்போது தமிழ் இலக்கியத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான "திரிகடுகம்" பற்றி கூறியே ஆகவேண்டும். நல்லாதனார் என்பவர் இயற்றிய இந்த நூலின் பெருமையை பழந்தமிழ் பாடல் ஒன்று பின்வருமாறு சொல்கிறது.
உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள்
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
மருவு நல்லாதன் மருந்து.
உடலில் இருக்கும் நோய்களை அகற்றும் சக்தி திரிகடுகம் என்ற மருந்துக்கு இருக்கிறது அதைப்போல நல்லாதன் என்றவர் எழுதிய திரிகடுகம் என்னும் நூலுக்கு மனதின் சஞ்சலங்களான அக நோயை நீக்கும் தன்மை உள்ளது என்கின்றனர். இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் மூன்று மூன்று அறங்கள் சொல்லப்படுகின்றன. இதை பின்பற்றி நடப்போர் உள்ளத்திலே ஒரு நோயும் இன்றி பெருவாழ்வு வாழமுடியும்.
எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படும் "பிங்கலந்தை" என்கிற பிங்கலநிகண்டுவிலும் திரிகடுகம் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது. இது தவிர சித்தர் பெருமக்கள் பாடல்களிலும் திரிகடுகம் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன.
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment