Saturday 4 June 2016

விளக்கேற்றும் முறைகள் , பலன்கள், சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்
விளக்கைத் தரையில் வைக்காமல் தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்க வேண்டும். செவ்வாய் வெள்ளி தவிர்த்து மற்ற நாட்களில் விளக்கைச் சுத்தம் செய்யலாம்.
பித்தளை,வெண்கலம்,வெள்ளி விளக்குகள் சிறந்தவை,எவர்சில்வர் உத்தமமல்ல.
விளக்குத் திரியும் பயன்களும்:-
தாமரைத் தண்டில் விளக்கேற்ற முன்வினை ,கர்மவினைப் பயன்கள் தீரும்.
வாழைத்தண்டில் விளக்கேற்ற குழந்தை பாக்கியம் கிட்டும்.
வெள்ளை துணியைப் பன்னீரில் நனைத்துக் காயவைத்து அந்த துணியால் விளக்கேற்ற சகல நன்மைகளும் உண்டாகும்.
வெள்ளெருக்கன் பட்டை திரியை கொண்டு விளக்கேற்ற பேய்,பிசாசு ,தீய சக்திகளின் தொல்லைகள் நீங்கும்.
நீல நிறத்துணி கொண்டு விளக்கேற்ற பேய்,பிசாசு ,தீய சக்திகளின் தொல்லைகள் நீங்கும்.
மஞ்சள் நிறத்துணி கொண்டு விளக்கேற்ற அம்மன் அருள் கிட்டும்.
சிவப்பு நிறத்துணி கொண்டு விளக்கேற்ற திருமணத்தடை ,மலட்டுத்தன்மை
நீங்கும்.
பஞ்சு திரியினால் விளக்கேற்ற குடும்பம் சிறக்கும்.
விளக்கின் முகங்களும் பலன்களும் :-
ஒரு முகம் - மத்திமம்
இரு முகம் - குடும்ப ஒற்றுமை
மூன்று முகம் - புத்திர சுகம்
நான்கு முகம் - வீடு,வாகனம்,கால்நடைச் செல்வங்கள் பெருகும்.
ஐந்து முகம் - சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
விளக்கேற்றும் திசைகளும் பலன்களும் :-
கிழக்கு - துன்ப நிவாரணம் ,குடும்ப விருத்தி,செல்வ நிலையில் உயர்வும் உண்டாகும்.
மேற்கு முகமாய் விளக்கேற்ற எல்லாரோடும் இணக்கமான உறவு உண்டாகும்.வசீகர சக்தியும் தேஜசும் உண்டாகும்.கடன் தீரும்.
வடக்கு முகமாய் விளக்கேற்ற திருமணத்தடை நீங்கும்.
தெற்கு முகமாய் விளக்கேற்றக் கூடாது.
1.மந்திரம்
தேஹி சௌபாக்யம் ஆரோக்கியம் தேஹி மே பரமம் சுகம் |
ரூபம் தேஹி ஜெயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி ||
இதை சொல்லி விளக்கேற்றி குறைந்தது 27 தடவை ஜெபித்து வர வளமும் , நலமும், காரிய வெற்றியும் கிட்டும்.
2.மந்திரம்
மந்திர சாஸ்திரத்தில் நிறைசெல்வம் பெற ஹோமம் செய்யும் போது ஜெபிக்கப்படும் சக்தி வாய்ந்த ஸ்துதிகளில் சிறந்த ஒன்று ஸ்ரீ லக்ஷ்மி ஹ்ருதயம்.அதில் உள்ள சில சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் நிறைந்த செல்வச்செழிப்பு அருளும்.
சர்வ மங்கள சம்பூர்ணா சர்வைஸ்வர்ய சமந்விதா|
ஆத்யாதி ஸ்ரீ மகாலக்ஷ்மீஹி த்வத்கலா மயி திஷ்ட்டது ||
ப்ரசீத மே மகாலக்ஷ்மி சுப்ரசீத மஹா சிவே |
அசலா பவ சுப்ரீதா சுஸ்திரா பவ மத்க்ருஹே ||
இதைத் தினமும் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஜெபித்து வர செல்வ நிலையில் உயர்வு கிட்டும்
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment