தீய பழக்கங்களில்,தவறான தொடர்புகளில் இருந்து விடுபட
நமக்கு அறிமுகமான அல்லது குடும்பத்தில் யாரேனும் மது,சூதாட்டம் ,போதைப்பொருள் அல்லது தவறான காமத்தொடர்பு போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தால் அவர்களை நேர்வழிக்கு வரச்செய்ய சக்தி வாய்ந்த இந்த தாந்த்ரீகப் பரிகார முறையைப் பின்பற்றி நலம் பெறுங்கள்.
இரவில் குளித்து முடித்து 10 மணிக்கு பத்ரகாளி படத்தின் முன் நல்லெண்ணெய் விளக்கேற்றித் தெற்கு முகமாக அமர்ந்து யார் தீய பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டுமோ அவர் திருந்த வேண்டும் என்று வேண்டிச் சங்கல்பம் செய்து கொண்டு கீழ்காணும் மந்திரத்தை 108 எண்ணிக்கை உள்ள கருமணி மாலையால் 15 சுற்று ஜெபிக்க வேண்டும்.(108*15+1620 எண்ணிக்கை ) .
விளக்கின் முன்னால் பாதிக்கப்பட்ட நபரின் போட்டோ வைத்துக்கொள்ளவும்.
ஜெபம் செய்து முடித்ததும் ஜெபம் செய்யப் பயன்படுத்திய மாலையை அந்த நபரின் போட்டோ மீது வைத்து விடவும்.5 நாட்கள் கழித்து அந்த போட்டோ, ,ஜபமாலை ,காளிபடம் ,பூஜைக்குப் பயன்படுத்திய பொருட்கள் (விளக்கு தவிர) இவற்றை ஆற்றில் போட்டு விடவும். விரைவில் பாதிக்கப்பட்ட நபர் திருந்தி நேர்வழிக்கு வந்து விடுவார்.
மூல மந்திரம்:-
ஓம் க்லீம் உச்சாடய பத்ரகாளி அவதர அவதர க்லீம் ஹூம் பட்||




No comments:
Post a Comment