Wednesday 20 January 2016

"மழைக்காலத்தில் வரும் நோய்களுக்கு சித்தமருத்துவத்தில் தீர்வு"
மழைக்காலத்தில் தொற்று கிருமிகளால் ஆஸ்த்துமா, தலையில் நீர் கோர்த்தல், எலிக்காய்ச்சல்,டெங்கு,வயிற்றுப்போக்கு, போன்ற நோய்கள் ஏற்படும்.
ஆஸ்த்துமாவுக்கு ஆடாதோடை குடிநீர்,ஆடாதோடை மணப்பாகு,திப்பிலி லேகியம் நல்ல மருந்து.
தலையில் நீர் கோர்க்கும் பிரச்சனைக்கு சுக்கு தைலம் ,அரக்கு தைலம் உள்ளது, நோயின் தாக்கத்தை பொறுத்து, வாரம் ஒருநாளோ இரண்டு நாளோ தலையில் தேய்த்துக் குளித்தால் பிரச்சனை தீரும்.
சளியால் ஏற்படும் தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரை உள்ளது,இதை நெற்றியில் பத்து போட்டால் தலைவலி குறையும்.
சளி தொல்லைக்கு தாளீசாதி சூரணம் நல்ல மருந்து, சுவாச குடோரி மாத்திரையும் பலன் தரும்.
டெங்கு எலிக்காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர், பிரம்மானந்த பைரவம் மாத்திரையும் நல்ல மருந்து.
வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு தயிர்சுண்டி சூரணம், திரிபலா சூரணம் ,ஸ்படிகலிங்க துவர் போன்ற மருந்துகளை உட்கொள்ள தீரும்.
தொண்டை கரகரப்பு, வலி,குரல் பாதிப்பு போன்றவைக்கு தாளீசாதி வடகம் மாத்திரையை சப்பி சாப்பிட தீரும்.
இம்மருந்துகள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும் ,அனைத்து அரசு சித்த மருத்துவ மனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது

No comments:

Post a Comment