Wednesday 27 April 2016

ஆன்மிக உபதேசரே கவனம்
1, மாந்திரிகத்தில் ஈடுபடக்கூடியவர்கள் எக்காரணத்தை கொண்டும் உணர்ச்சி வசப்பட்டு உங்கள் சக்திக்கு மீறி வாக்கு கொடுத்து விட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள், முடிந்ததை இறைவன் மேல் பாரத்தை போட்டு செய்யுங்கள், முடியாததை முடியாது என்று மறுத்துவிடுங்கள்,
நற்புகழுக்கு களங்கம் உண்டாகாமல் இருக்க வெளிப்படையாக ஒருசிலதை ஒத்துக்கொள்ள வேண்டும் .
இதை கூற காரணம் உண்டு மாந்திரீகம் அருள்வாக்கு இவ்விடங்களை நாடி வரக்கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று துன்ப சூழலில் வருவார்கள் (அல்லது) உடனே குறுக்கு வழியில் வெற்றி பெற வழிவேண்டுவோர் வருவர் (அல்லது) ஒருவரை அழிக்க வேண்டும். வசியம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடனும். குறுக்கு வழியை நாடி பாவத்தை தடுக்க வேண்டும் என்ற பலவித செயல்பாடுகளுக்கு வருவார்கள், தர்ம வழியில் வெற்றி பெற யாரோ ஒருவர்தான் வருவர் எள்பதால் வாக்கு சொல்வதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் .
மாந்திரிக சித்து வேலை தெரியும் என்றால் ஏற்று முடிந்ததை செய்யுங்கள், ( முடியும் முடியாது என்று உங்கள் மனதிற்கே நன்றாக தெரியும் ) ஏனெனில் அருள்வாக்கு மட்டுமே நாம் சொன்னால் கூட தனக்கான கோரிக்கையை நடத்திக் கொடுக்கும்படி வற்புறுத்துபவர்கள் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாக ஆசை காட்டுவார்கள், இதற்கு மயங்கி ஏற்றுக் கொள்ள கூடாது , மேலும் வருபவர் கூறும் புகழ் வார்த்தை யாதெனில் நீங்கள் மனது வைத்தால் உங்களால் முடியும் உங்களால் முடியாதது எதுவும் இல்லை . தயவு செய்து மனமிறங்கி என் கோரிக்கையை நிவர்த்தித்து தாருங்கள் என தர்ம சங்கடமான சூழலை உண்டாக்குவார்கள், உங்களை விட்டால் வேறு ஆள் எனக்கில்லை எனக்கு நம்பிக்கை உங்கள் மேல் தான் என்றெல்லாம் கூறி உங்களை வருபவர்கள் அவர்கள் கண்ட்ரோலுக்கு இட்டுச் செல்ல முயற்சிப்பார்கள், நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் பேச்சுக்கு மயங்கி விட்டீர்களேயானால் . சரி என்று முடியாததையும் ஒத்துக் கொண்டீர்களேயானால் நிச்சயம் வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு அவப்பெயர் தான் உண்டாகும் .
ஆன்மீகத்தை நாடுவோர் அதிக நம்பிக்கையோடு வருவார்கள் நாம் அவர்கள் பணியை முடித்துக் கொடுக்கிறோம் என்றதும் அதிக ஆசைகொண்டு பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள், ஒருவேளை நடந்து விட்டால் காதும் காதும் வைத்தார் போல் மிக மிக ரகசியமாக பலனை பெற்று சென்று விடுவார்கள், ஒருவேளை நடக்கவில்லை என்றால் ஒரே நபர் ஒரு ஊரையே கூட்டி நமக்கு கெட்ட பெயர் உண்டாக்கி விடுவார்கள், இது ஆன்மீகத்தின் சாபக்கேடு நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் உடனே பரவி விடும், எனவே மிக மிக கவனமாக வாக்கு கொடுக்க வேண்டும், எதற்கும் மயங்காத மன உறுதியும் வேண்டும், நீங்கள் கடைபிடிக்க வேண்டியவற்றுள் இந்த வழிமுறையும் முக்கியமானது .
நன்மையும் தீமையும் பிறர் தருவது நம்மாலேயே கவனம் . எனவே உங்களுக்கு வசியமாகி இருக்கும் தேவதை உங்களை எச்சரிக்கும் அதற்க்கு நீங்கள் கட்டுப்பட்டு மனதிடமாக பெருமைக்கும் பொருளுக்கும் ஆசைபடாமல் திடமாக வாக்கு கொடுக்கவேண்டும் . கவனம்
Like
Comment

No comments:

Post a Comment