Wednesday 27 April 2016



பேய்மிரட்டி மூலிகை மர்மம்
மூலிகை மர்மங்கள் வரிசையில் பெருந்தும்பை பேய் மிரட்டி, குபேர மூலிகை என்று சொல்லக்கூடிய ஒரு வன மூலிகையை பற்றி அறிந்துகொள்ளுங்கள். இந்த பேய்மிரட்டி மூலிகையின் இயற்கை பெயர் பெருந்தும்பை என்பதுதான்.
வேறு பெயர்கள் -: இரட்டைப் பிரமட்டை, இரட்டை பேய்மிரட்டி,எருமுட்டைப் பீ நாறி, சற்று வட்டமான இலையுடைய இனம் ஒற்றைப்பேய் மிரட்டி எனவும், வெதுப்படக்கி எனவும் அழைக்கப்படுகிறது. சற்று நீளமாக உள்ளவை இரட்டை பேய்மிரட்டி எனவும் அழைக்கப்படுகிறது.
தீய சக்திகளை விரட்டும் சக்தி இதற்கு உண்டு என்பதால் பேய் மிரட்டி என்று பெயர்கொண்டு அழைத்தார்கள். பேயையும் விரட்டக்கூடியது நோயையும் விரட்டக்கூடியது இந்த மூலிகை .
நம்மை முன்னுக்கு வரவிடாமல் நம் வம்சத்தை சேர்ந்த ஆத்மாவே தடுத்துக்கொண்டிருந்தாலும், பிற ஆத்மாக்கள் தடுத்துக் கொண்டிருந்தாலும் இந்த பெருந்தும்பை இலை தண்டுகளை முறையாக பயன்படுத்தும்போது நம் அதிஷ்டங்களை தடுத்து துன்பத்தை தந்து கொண்டிருந்த ஆத்மாக்களை விரட்டி இழந்த அதிஷ்டத்தை மீண்டும் நமக்கு அளிக்கும். அதனால் இம்மூலிகையை குபேர மூலிகை என்று கூறலானார்கள்.
இது ஒருபுறம் இருக்க, இன்றைக்கு இம்மூலிகையைப் பற்றி முழுமையாய் அறியாமல் சித்தர்கள் காட்டிச் சென்ற மூலிகை என்ற ஒரே காரணத்தை மட்டும் முன்நிறுத்தி இதன் சாதக பாதகங்களை அறியாமல் இன்றைக்கு பயன்படுத்துகிறார்கள். இன்றைக்கு இந்த மூலிகையை முன்நிறுத்தி மக்களிடம் இதன் அருமை பெருமைகளை முன்நிறுத்துபவர்களுக்கும், இந்த மூலிகையின் மர்மங்கள் தெரிந்திருக்கவில்லை. ஏதோ கிடைத்துவிட்டது என்றவுடன் எல்லாமே நன்மைதான் என்று பயன்படுத்துகிறார்கள், இது தவறு.
எல்லோரும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொண்டுவாருங்கள். இன்றைக்கு ஆன்மிகத்தில் புதிது புதிதான விஷயங்களை பரப்ப வேண்டும் என்று ஆர்வப்படுபவர்கள் கேள்வி ஞானத்தை கொண்டு ஆராய்ந்து வெளிப்படுத்துபவர்கள் யாரோ ஒருசிலர் தான் உள்ளார்கள். இதனால் சித்தர்கள் கையாண்ட நுணுக்கங்கள் ஆராயப்படுவதில்லை. மேலும் தான் ஆராய்ச்சி செய்து அனுபவித்து புரிந்து வெளியிடுவதும் இல்லை. இந்த தவறால் தவறான தகவல்கள் நிறையவே நாட்டில் பரவி இன்றைக்கு வியாபாரமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த பெருந்தும்பை எனும் வன மூலிகையாகும்.
அக்காலத்தில் இருந்தே இம்மூலிகைகளின் பயன்பாடு நடைமுறையில் பயன் அளித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த மூலிகை மிகவும் சக்தி வாய்ந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எனினும் இம்மூலிகை பயன்படுத்த வேண்டிய முறை ஒன்று உண்டு. பௌர்ணமி இரவுவேளையில் மட்டும் சக்தி ஆயுதம் ஏந்திய தெய்வங்கள் ஆலயத்தில் இந்த பெருந்தும்பை மூலிகை இலையால் தீபம் ஏற்ற வேண்டும்.
நெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து மண் அகலில் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும். உலோக விளக்கில் தீபம் ஏற்றக்கூடாது. பெருந்தும்பை இலை எந்த எண்ணெயில் நனைத்து எரியவைத்தாலும் பச்சையிலையே நன்றாக எரியும். காய்ந்த இலையும் எரியும். ஆனால் இந்த பெருந்தும்பையின் பலனை பெற வேண்டுமாகின் பச்சை இலையைத்தான் பயன்படுத்த வேண்டும். காய்ந்த இலை ஜீவனற்றதாகும், பலனைத் தராது.
ஆக பௌர்ணமி இரவில் மண் அகலில் பெருந்தும்பை இலை ஒன்றை அப்போதே செடியில் இருந்து பறித்து பச்சை இலையை திரியாக பயன்படுத்தி ஐந்து எண்ணெய் கூட்டி தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றி இரவு முழுவதும் உறங்காமல் கண்விழித்து தீபத்தையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் நம்மிடம் உள்ள எல்லாவித தீய திருஷ்டியும், தீய சக்திகள் பற்றியிருந்தால் அவைகளும் விலகிவிடும்.
இந்த இலையைக்கொண்டு வீட்டில் தீபம் ஏற்றுவதாக இருந்தால் பௌர்ணமி அன்று இரவுவேளை மட்டுமே ஏற்ற வேண்டும். வீட்டில் உள்ள காமாட்சி விளக்கில் ஏற்றக்கூடாது. அகலில் மட்டுமே ஏற்ற வேண்டும். இன்னொரு எச்சரிக்கையும் அறிந்துகொள்ளுங்கள் கண்டிப்பாக பௌர்ணமி ஒரு தினத்தை தவிர்த்து மற்ற தினங்களில் இந்த மூலிகையை தீப திரியாக பயன்படுத்தக்கூடாது. தனித்த ஒரு எண்ணெயிலும் தீபம் ஏற்றக்கூடாது. சாந்த தெய்வங்களிடமும் காரணமின்றி இந்த தீபத்தை ஏற்றக்கூடாது. எதிர் வினை உங்களை தாக்கும்.
கண்டிப்பாக அமாவாசை அன்று இந்த இலையைக் கொண்டு தீபமேற்றக்கூடாது. மேலும் தீயசக்தி அறிகுறி தென்படாதவரை இதன் வேரையோ, தண்டையோ, இலையையோ வீட்டின் தலைவாயிற்படியில் வைக்கக்கூடாது. பௌர்ணமியை தவிர்த்து மற்ற தினங்களில் இல்லத்தில் இந்த இலையைக் கொண்டுவந்தாலோ, தீபமாக இலையை பயன்படுத்தினாலோ செல்வ சம்பத்தை இழந்துவிடுவீர் கவனம். குறிப்பாக அசைவம் சாப்பிடுபவருக்கு செல்வ இழப்பு அதிகமாகிவிடும் கவனம்.
இந்த செடி அக்காலம் முதலே வீட்டின் அருகில் வளர்க்கக்கூடாது என சித்தர்கள் கட்டுப்பாடு விதித்து வனத்தில் மட்டுமே இவைகளை கை படாமல் பாதுகாக்கலாம் என தெரிவித்துள்ளார்கள். வீட்டினருகில் இந்த செடி வளர்ந்தால் இந்த செடியின் வாசம் படரும் தொலைவு வரை பித்ரு தேவதைகள் நெருங்கமாட்டார்கள். நம்மை ஆசிர்வதிக்க புண்ணிய ஆத்மாக்கள் கூட வரமாட்டார்கள். இந்த மூலிகையின் பனி என்னவென்றால் நல்ல ஆத்மாவோ கெட்ட ஆத்மாவோ கொண்ட பேய் பிசாசு எதுவாக இருந்தாலும் இம்மூலிகை இருக்கும் இடத்தில் இருந்து விலக்கும் சக்தி கொண்டதாகும். அதனால்தான் பேய்மிரட்டி என்றே பெயர் இதற்கு வந்தது. அமாவாசையில் இவ்விலையை பயன்படுத்தக்கூடாது என்று சொன்னதின் காரணமும் இதுதான். முன்னோர்கள் இன்று நம்மை ஆசிர்வதிக்க வரும்போது இந்த மூலிகை வீட்டிலோ அல்லது அருகிலோ இருந்தால் அதன் எதிர்ப்பு சக்தியால் முன்னோர் வர இயலாது. அதனால் வருத்தமாக திரும்பிச் சென்றுவிடுவர். எனவே அமாவாசையில் இந்த மூலிகை அருகில் செல்வதைக்கூட தவிர்க்க வேண்டும்.
தீயசக்தி இருப்பதாக உணராதவரை இம்மூலிகையை தொடக்கூடாது. வெளி ஆலயத்தில் அம்மன், ஐயனாரப்பன், வீரன், முனீஸ்வரன், கருப்பன், காத்தவராயன், அனுமன், பைரவர் போன்ற ஆயுதம் ஏந்திய தெய்வங்களின் ஆலயத்தில் அனைத்து ஆத்மாக்களும் கட்டுப்பாடற்று இருக்கும் பௌர்ணமி தினத்தில் இரவுவேளையில் இம்மூலிகையைக்கொண்டு தீபமேற்றி பயன்பெறலாம். இம்மூலிகை அபரித ஆற்றல் உள்ளது. தீயசக்திகளை கட்டுப்படுத்தாது ஆனால் விரட்டும்.
பௌர்ணமி கடந்த மற்ற நாட்களில் வீட்டில் பேய் விரட்டி மூலிகை இலையை தீபமாக பயன்படுத்தினால் வீட்டில் உள்ள எல்லா தெய்வ சக்தியும் விலகும். எனவே தவிர்க்கவும். ஒற்றை எண்ணெய்யைக் கொண்டு இம் மூலிகையால் தீபமேற்றக்கூடாது.
நம் வீட்டில் மற்ற தெய்வங்கள் வலிமையாக இருந்தும் நம் பரம்பரை முன்னோர்கள் கோபத்தோடு நம்மை பழிவாங்க வீட்டினுள் வந்தால் சக்தி வாய்ந்த தெய்வங்களானாலும் அவர்களை தடுக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களின் ஆத்மா நம் பரம்பரையை சேர்ந்தவர்கள் என்பதால் தெய்வசக்தி அனுமதி கொடுத்துவிடும். இந்த சூழலால் பாதிக்கப்பட்ட குடும்பம் தரித்திரத்தில் வாடும். எந்த கோயிலுக்கு சென்றாலும் அவ்வளவு எளிதில் பிணி தீராது. இந்த சூழலை புரிந்துகொண்டவர்கள் ஜோதி இலை, பெருந்தும்பை, பேய்மிரட்டி, குபேரமூலிகை என பெயர் கொண்ட இந்த மூலிகையை பௌர்ணமி இரவு இல்லத்தில் தீபமேற்றி விடியும் வரை உறங்காமல் கண்விழித்தால் அந்த தீய எண்ணத்தோடு பழிவாங்கும் நம் பரம்பரை ஆத்மாவை விரட்டலாம். தரித்திரத்தை விலக்கி சுபிட்சத்தை உண்டாக்க இந்த மூலிகை உதவும். இதனால் இம்மூலிகை குபேர மூலிகை என்று கூறுகிறார்கள்.
பௌர்ணமி தினத்தில் இதன் இலையை கொண்டு வந்தாலும் தீபமேற்றியது போக மீதமுள்ள இலையை நீர்நிலையில் வீசிவிடவும். கடுமையான செய்வினை கோளாறால் ஏவல் வீட்டில் நடமாடுவதை உறுதி செய்தால் தலைவாயிற்படியில் இந்த மூலிகையின் தண்டு பாகத்தை கொண்டுவந்து கட்டி வைக்கலாம். பிரச்சனை தீர்ந்தவுடன் சில நாட்கள் பொருத்து அதை நீர்நிலையில் வீசிவிடவும்.
பெருந்தும்பை இலையை காயவைத்து பொடிசெய்து அதை சாம்பிராணியுடன் கலந்து வைத்து பௌர்ணமி இரவில் தூபம் போடலாம். தீயசக்தி விலகி நன்மையைத் தரும். இந்த மூலிகை பரவலாக நாடெங்கும் கிடைக்கக்கூடியதேயாகும். எனினும் ஒரு சில பகுதிகளில் கிடைப்பது அரிதாக உள்ளது. அரிது என்பதால் வீட்டினுள் தொட்டி வைத்து வளர்க்கக்கூடாது. எங்காவது ஒதுக்குப்புறமான இடத்தில் வளர்க்கலாம். ஆனால் அனாவசியமாக தொடக்கூடாது. இந்த செடியின் வாசம் மிக நன்றாக இருக்கும். அதற்காக இலையை கசக்கி முகரக்கூடாது.
இதுபோல் எச்சரிக்கையாக கையாள வேண்டிய பல மூலிகைகள் உள்ளன. எல்லாமே சித்தர்கள் காண்பித்து கொடுத்ததுதான். எனினும் மூலிகையை பயன்படுத்த வேண்டிய நுணுக்கங்கள் பலதும் தொழில்காரனுக்கு மட்டும் புரியும்படி மறைபொருளாக சொல்லிச் சென்றுள்ளார்கள். நாங்கள் அனைத்து மூலிகையும் (ஒரு சிலதை தவிர) அனுபவித்தும் உணர்ந்துள்ளோம். இவைகளெல்லாôம் எம்பயிற்சியில் கொடுத்துள்ளோம், பெற்று பலன் பெறுக.
எச்சரிக்கை - மனித ஆத்மாவிற்க்கு எதிரான மின்காந்த கதிர்கள் இம் மூலிகையில் உள்ளது . அதே நேரத்தில் முறையான பாதுகாப்புடன் பயன் படுத்தினால் தகுந்த நற்பலனைப் பெறலாம் .
. அறிவியல் விளக்கும் சிறப்பம்சம்
பேய் விரட்டியின் இலையானது பச்சையிலேயே (ஈரத்தன்மையிலேயே) எரியகூடியது, அதற்கு காரணம் அணிசொமிளிக், மெலபாறிக் ஆசிட்கள்(Acids) இருப்பதுதான். இவ்விலையை பஞ்சுத்திரிபோல் சுருட்டி விளக்கிளிட்டு தீபமேற்றலாம். ஒரு இலை எண்ணையின் உதவியுடன் ஒருநாள் முழுவதும் எரியக்கூடியது.
இந்த இலையானது. ஒவ்வொரு செயலிலும் நல்வினைபுரிந்து நறுமணத்தையும்,அருமருந்தையும் காற்றில் பரப்பக்குடியது. திரியாக சுருட்டும்போதே மருந்து கலந்தமணம்(நெடி) உணரமுடியும் இந்தநெடியானது மனிதனுக்கு நோய்தடுப்பாகவும், சில நோய்களை சரிசெய்யவும் . கொசுவையும் விரட்டக்கூடியதாகவும் இருப்பது விஞ்ஞான உண்மையாகும்

No comments:

Post a Comment