Wednesday 27 April 2016

காமாட்சி விளக்கு.
--------------------------------
நம் இல்லத்தில் தீபம் ஏற்ற பல விளக்குகள் பயன்படுத்துகின்றோம் அதில் முதன்மையானது,தெய்வீகமானது எதுவென்றால் நல்ல விளக்கு என சொல்லப்படுகின்ற காமாட்சி விளக்குதான்.
எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.
காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்வது சிறப்பாகும். புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன் திருவிளக்கே ஆகும்.
"நிறைநாழி'' எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் மீது தீபம் ஏற்றி வெள்ளி,செவ்வாய் வழிபட்டால் போதும் நம் வீட்டில் இருக்கும் பீடையெல்லாம் விலகி நம் குடும்பத்திற்கு லெஷ்மி கடாட்சம் வந்து இல்லம் தெய்வீகமாகும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
Like
Comment

No comments:

Post a Comment