Wednesday 27 April 2016

வாசி சக்திக்கு சில பயிற்ச்சிகள்
அன்றாடமோ அல்லது வாய்ப்பு கிடைக்கும் போதோ மலை ஏற்றம் ஏறி இறங்குவது மலை அருகில் இல்லாதவர்கள் படிக்கட்டுகளை ஏறி இறங்குவது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது நலம், இவ்வாறு செய்யும் போது உயரமான இடத்தில் பயணிக்கும் போது அடிவயிறு அழுத்தமாக மடங்கும் அங்குள்ள காற்று வேகமாக வெளியேறுவதும் உள்ளிழுப்பதும் இயல்பாக செயல் நடக்கும், அப்போது வாசி கைகூடும் சுழிமுனை தன்னால் ஓடும், இப்பயிற்சி மந்திரம் இல்லாமல் உடல் சக்கராக்கள் இயங்க சிறந்த பயிற்சியாகும், இதை சிறந்த உடற்பயிற்சியாகவும் வைத்துக் கொள்ளலாம்,
அதே போல அருகில் கடற்கரை ஒரு மணல் பரப்பு போன்றவற்றில் நடை பயிற்சி செய்து பின்பு தியானம் செய்யலாம், இங்கு நடக்கும் போது அதிக சக்தி தேவைப்படும், மலை ஏற்றத்தின் போதும் அதுபோலவே அதிக சக்தி தேவைப்படும், இது போன்ற பயிற்சியின் போது உயிர் சக்தி விரையமாகாது பெருகும், உடல் அசுத்த நீர் வெளியேறும். நவதுவாரமும் சுத்தப்படும், வாசி தன்னால் வசம் பெறும், உடலில் இது போன்ற பயிற்சியின் போது ஏற்படும் அசதி விரதம் இருந்தால் கிடைக்கும் ஒரு வித மயக்க நிலை அசதி கிடைக்கும், ஞான உள்ளம் தோன்றும் வாய்ப்பு கிடைக்கும், எனவே வாய்ப்புள்ளவர்கள் மேற்கண்ட ஏதாவது ஒரு பயிற்சியை செய்தால் கூட போதும், அதன் பலனை செய்முறையின் போதே அனுபவிக்கலாம், நிம்மதியான உறக்கமும் இரவில் வரும்,
சித்தர்கள் மலை ஏறியது மூலிகை எடுக்க மட்டுமன்று. தவம் செய்வதற்காக மட்டும் மலை ஏறவில்லை, மேற்கண்ட பயிற்சிக்குத்தான் முக்கியத்துவம் என அவர்கள் ஏடுகளில் கூறியுள்ளார்கள், குறிப்பாக அமாவாசை. பௌர்ணமி நாளில் இது போன்ற பயிற்சி செய்தால் அதிக சக்தி உண்டாகும், சித்தர்கள் மறைவிற்காக காட்டில் வசித்தாலும். அவர்களின் விரத காரணங்களால் உடற்பயிற்சி செய்யும் அளவிற்கு சக்தி உடலில் இருக்கவில்லை, எனவே மலை ஏற்றம். மணலில் நடைபயிற்சி . நீச்சல் அடிப்பது . மரம் ஏறுவது . தலைகீழாய் தொங்குவது . மிருகங்கள் மேல் சவாரி செய்வது போன்ற உடற்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்கள், உடல் அசைவு உந்து தலை உண்டாக்கி நாசி சுத்தப்படவும் இது போன்ற பயிற்சியை செய்தார்கள், எனவே இந்த பயிற்சிகளின் மகத்துவம் செய்து பார்த்த பின்புதான் உங்களுக்கு புரியும் எனவே அவசியம் வாய்ப்பு கிடைத்தால் கடைபிடியுங்கள், வெகு விரைவில் ஞான சித்தி பெறுங்கள், மந்திரம் மட்டுமே ஞானத்தை கொடுத்து விடாது , உடலில் ஏற்படக்கூடிய மாற்றமும் மனதில் ஏற்படக்கூடிய மாற்றமும் கூட ஞானத்தை கொடுக்கும், சித்தர்கள் கண்ட ரகசியங்கள் இவை, சித்தர்கள் மலை உச்சியில் ஜபம் செய்து பிறகு மலையில் இருந்து இறங்கி வருவார்கள், அன்றாடம் இதுபோல் செய்வார்கள், இதற்கு காரணம் மேற்சொன்ன பயிற்சிக்கே, சுழிமுனை ஓடும்போது ஜபம் செய்தால் விரைவில் ஞானம் சித்தியாகும், மலை ஏறும் போது கிடைக்கும் பயிற்சியின் பலன் இறங்கும்போது கிடைக்காது, அதனால் தான் சித்தர்கள் மலைஏறி அங்கு ஜபம் செய்து விட்டு பூஜை முடித்து பின்பு இறங்கி விடுவார்கள் இதை ஏன் உங்களுக்கு கூறுகிறேன் என்றால் ஆரம்ப பயிற்சிக்கு மிக முக்கியமானவை இவை, எளிதில் ஞான பயிற்சியால் வெற்றி கிட்டவும் உதவும், தொடர்ந்து செய்தால் பல அறிய சித்துக்கள் கைவரப்பெரும் என ஞான நூல் கூறுகிறது , இங்கு ஒரு அறிய தகவலை அறிந்து கொள்ளுங்கள், மலையில் மட்டும் தான் சித்தர்கள் இருப்பார்கள் என நம்பிக் கொண்டிருக்க வேண்டாம், அவர்கள் எங்கும் இருப்பார்கள், குறிப்பாக சித்தர்கள் அமாவாசை. பௌர்ணமி நாளில் மலை உச்சியில் இரவு தியானம் முழு நேரம் செய்வார்கள், இதை அறிந்த அந்தக்கால மக்கள் அவர்கள் ஜபத்தைக் கெடுக்காமல் ஆசீர்வாதம் பெற மலை ஏறாமல் மலையை வலம் வரும் வழக்கம் நல்ல உள்ளங்கள் கொண்டிருந்தார்கள், ஆனால் இன்று மேற்கண்ட இரு நாட்களிலும் மக்கள் அறியாமல் சித்தர்கள் நிம்மதியை கெடுக்கிறோம் என்பதை உணராமல் மலையிலேயே இரவு முழுவதும் தங்கி வீண் பேச்சுக்களை பேசி இரைச்சல் போடுகிறார்கள், இது தவறான செயலாகும், எனினும் அவ்வாறு மலை ஏறி வந்தால் நினைத்த காரியம் நடக்கிறது என பலரும் கூறுவார்கள், இதற்கு ஒரே காரணம் சுழிமுனை மலைஏறும் போது தன்னால் அனைவருக்கும் ஓடும் அப்போது மனஒரு நிலைப்படுத்தியோ அல்லது மனதில் உள்ள வேண்டுதலோ நடக்கும், நடக்க வேண்டும் என பிராத்தித்தால் முதல் பிராத்தனையோ அல்லது கடைசி பிராத்தனையோ நடந்துவிடும், நினைப்பது நிறைவேறும், இதுவே உண்மை,
சித்தர்களை ஜீவ சமாதியால் மட்டும் அமைதியாக சென்று வழிபடுங்கள், அமாவாசை. பௌர்ணமி நாளில் கிரிவலம் வாருங்கள், ஆனால் மலை ஏற்றத்தை தவிர்த்து விடுங்கள், நல்ல எண்ணமும். தர்மமும். நம்மிடம் நிறைந்து இருந்தாலே போதும் இறையருள் பெற்றவர்கள் நமக்கு அருள்புரிய தயங்கமாட்டார்கள், தாங்கள் ஞான பயிற்சிமேற்கொள்வதாக இருந்தால் தாராளமாக எந்நாளிலும் மலை ஏறி தியானிக்கலாம், ஆனால் மௌன விரதத்தோடு மலை ஏற வேண்டும், இறங்க வேண்டும், வீண் பேச்சு கூடாது, ( எப்பயிற்சி செய்தாலும் வாய்திறந்து பயிற்சி செய்வது கூடாது என்பதை அறிக) ஆக ஞான திறவு கோல் இப்பயிற்சி மூலமும் கிட்டும் என்பதை அறிக, வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இல்லாதவர்கள் வாய்ப்பை தேடிச் செல்லுங்கள்
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment