Wednesday 27 April 2016

இறைவனை வணங்கும் போது ‪#‎விபூதி‬ இட்டுக் கொள்வது முக்கியம்; மற்றொன்று ‪#‎ருத்ராட்சம்‬ அணிந்து கொள்வது, இதுவும் ரொம்ப விசேஷம். இது பரமேஸ்வரனின் மூன்றாவது கண்ணாக சொல்லப்பட்டுள்ளது.
# ருத்ராட்சம் அணிந்தவரை எம தூதர்கள் அண்ட மாட்டார்கள். அதாவது, கடைசி காலத்தில் கத்தி, கம்பு, தடி, ஈட்டியுடன் எம தூதர்கள் வர மாட்டார்கள்; திவ்ய தேகத்துடன் கூடிய பூத கணங்கள் வந்து அழைத்துப் செல்வர் என்பது நம்பிக்கை.
# வாக்கினால் பஞ்சாட்சர ஜெபம் செய்து கொண்டு, வில்வத்தால் சிவார்ச்சனை செய்தால் நல்லது. சிவானுக்ரகம் பெறலாம் என்று உள்ளது. சிவானுக்ரகம் ஏற்பட்டால், எல்லா ஐஸ் வர்யங்களும் பெற்று, மோட்ச சாம்ராஜ்யமும் கிடைக்கும்!
# விபூதிர் பூதிரைச்வர்யம்’ என்பதால் #விபூதி இட்டுக் கொண்டால் ஐஸ்வர்யம் கிடைக்கும். ஒரு வில்வ தலத்தைப் போட்டால், மோட்ச சாம்ராஜ்யமே கிடைக்கிறது.
# பரமேஸ்வரனுக்கு விலை உயர்ந்த புஷ்பங்களைக் கொண்டு வந்து பூஜிக்க வேண்டும் என்று இல்லை; சாதாரண மான தும்பைப் பூ, எருக்கம் பூ, இவைகளை அர்ப்பணம் செய்தாலே அவன் மகிழ்ந்து போகி றான்.
# இப்படியெல்லாம் பிரதி தினம் செய்ய முடியாதே என்றும் தோன்றலாம். பரவாயில்லை, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற காலங்களில் செய்தாலும் போதும். தினசரி ‪#‎சிவநாமம்‬சொன்னாலும் போதும்.
# ஏதாவது ஒரு விதத்தில் அவனது தொடர்பு இருந்தாலே போதுமே! விபூதி மகிமை, ருத்ராட்ச மகிமை, துளசி மகிமை என்ப தெல்லாம் மிக முக்கியமானது.
### ஓம் நமசிவாய ###

No comments:

Post a Comment