Wednesday 27 April 2016

கருவூரார் சொன்ன தேவ வசியம்…
“பாரப்பா நாக மல்லி மூலம் வாங்க
பாடுகிறேன் மந்திரந்தான் பண்பாய்மக்காள்
செய செய ஓம் கிலியும் பகவதா
வென்று தியானம் செய்து ஆரப்பா பிடுங்கி
வந்து நிழலு லர்த்தி அப்பனே பொடியாக்கி
திரியி லூட்டி பெறப்ப காராவின் நெய் யெரித்து
மையைப் போட்டிடவே தேவரெல்லாம் வசியமாவார்”.
– கருவூரார் பலதிரட்டு –
விளக்கம் :-
பண்பான மாணவர்களே நாக மல்லி என்கின்ற செடியைப் பிடுங்க மந்திரத்தை சொல்லப் பாடுகிறேன் கேள் “ஜெய ஜெய ஓம் கிலியும் பகவதா” என்று மந்திரம் ஜெபித்து பிடுங்கிவந்து நிழலில் காயவைத்துப் பொடிசெய்து துணியில் வைத்து உருட்டி திரியாக்கி ஒரு விளக்கில் காராம் பசுவின் நெய் விட்டு முன் செய்த திரியை அதில் போட்டு எரித்து அந்த மையை எடுத்து திலகமாக நெற்றியில் இட்டால் தேவர்கள் எல்லாம் வசியமாவார்கள் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில்
Like
Comment

No comments:

Post a Comment