Wednesday 27 April 2016

கண்பார்வை பலம் ஏன்?
மாந்திரீகத்தில் ஈடுபடக்கூடியவருக்கு நன்றாக கண் பார்வை வேண்டும் என்பார்கள், இதை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் அது ஏன் என்று தான் பலருக்கும் தெரியாது , இதை இரு விதத்தில் சித்தர்கள் கூறினார்கள், ஒன்று ஞானக்கண் என்னும் நெற்றிக்கண்ணை கூறினார்கள், இந்த ஞானக்கண் உருவாக்கும் சக்தி இருந்தால் தான் உண்மை மாந்திரீகனாக உருவாக முடியும் என்ற பொருளிலும். மற்றொன்று நமக்கு இயற்கையாக இறைவன் அளித்த இரு கண்கள் உண்டு அல்லவா அதற்கும் சக்தி வேண்டும் என்றும் கூறினார்கள், ( இவ்விரு கண்களும் அகக்கண், புறக்கண் எனப்படும் ),
கண்களுக்கு பார்வை சக்தி .காந்த வசிய சக்தி மட்டும் இருந்தால் போதும் என்ற நோக்கில் கூறவில்லை , கண்களுக்கு சாதாரணமாகவே கண் பார்வை பலம் வேண்டும் என்றும் கூறினார்கள், ஏன் எதற்காக என்று கேள்வி உங்களுக்குள் எழும் அல்லவா அதையும் அறிவீராக, அமாவாசை இருட்டில் மூலிகை மேல் எதனுடைய நிழலும் விழாது எவ்வித ஒளியும் படாது அன்று மூலிகைகள் சாபம் அகன்று உயிர்ப்புடன் இருக்கும், அந்த நேரத்தில் நாமும் எவ்வித விளக்கு ஒளியும் இல்லாமல் மூலிகையை தேடிச் சென்று எவ்வித சாப நிவர்த்தி மந்திரமும் செபிக்காமல் அப்படியே மூலிகையை கொண்டு வந்து பயன்படுத்தலாம், இதுதான் சித்தர்களின் பார்வை வேண்டுமென்றதின் சூழ்ச்சும ரகசியம் .
( எந்த நிழல் பட்டாலும் குறிப்பாக மனிதன் நிழல் பட்டால் மூலிகை சாபத்துடன் இருக்கும் ), இதை உணர்ந்த பெரியவர்கள் அனுபவத்தில் ஆராய்ந்து பூனைக்கண். ரத்தக்கண் உள்ளவர்களுக்கும் பார்வை நன்கு தெரியும் என்று அறிந்திருந்தனர், இந்தக்கண் உள்ளவர்கள் ஆன்மீகத்தில் பல சித்துக்களை வெற்றியுடன் கற்கலாம் என்றும். இரவில் ஆவிகளின் உருவத்தைக்கூட பார்க்க முடியும் என கூறினார்கள், ஆக பார்வை பலம் ஆன்மீகத்தில் முக்கிய பங்குண்டு, வெளிச்சத்தை அதிகம் பார்க்காமல் இருட்டை உற்று நோக்கி கொண்டு சில நாள் பயிற்சி செய்தாலே இரவில் நன்றாக கண் தெரியும், இது அனுபவ உண்மை .
மாந்திரீகத்திற்கு பார்வை பயிற்சி மிக முக்கியம் என்பது இதனால்தான், இரவில்தான் பல நிகழ்வுகள் செய்ய வேண்டிய நிலை ஆன்மீகத்தில் உண்டு, அந்த காலத்தில் லைட் இல்லை என்ற காரணத்தால் கண் பார்வை சிறப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள் என்று சிலர் அனுபவமில்லாமல் கூறுவதுண்டு, இதில் சிறிதளவும் உண்மையில்லை, இரவிலே மலை ஏறுவதும். காட்டிலே வசிக்கவும். அதிகாலை எழுந்து கருக்கல் வேலையிலேயே நித்திய பூஜையை செய்யவும் பார்வை பலம் சிறப்புற வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள், அடுத்து மூலிகை எடுக்க எளிமையான யுக்தியான மேற்கண்ட முறையை கையாளவும் கண்பார்வை சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள்
Like
Comment

No comments:

Post a Comment