Friday 29 April 2016

சூரியஒளி சந்திரஒளி ரகசியம்
ஒளிகிரகமான சூரிய ஒளி நேரத்தை விட சந்திரஒளி நேரமே சிறந்தது என சித்தர்கள் சில கணக்கை வைத்து வழிபாடு செய்தார்கள்,
பகலான சூரிய நேரம் - சிவநேரமாகவும். இரவான சந்திர நேரம் - விஷ்ணுநேரமாகவும் கருத்தில் கொண்டார்கள், விஷ்ணு நேரம் வசியநேரமாக கணக்கில் கொண்டார்கள், இதில் சூரிய உதயத்திற்கு முன்பும். சூரிய மறைவிற்கு பின்பும் உள்ள சில நாழிகைகளை பிரம்ம வேளை எனவும். உற்பத்தி வேளை எனவும் பலன் கூறினார்கள், நாளடைவில் பிரம்ம முகூர்த்தம் என்றானது , இது சகல காரியத்திற்கும் வெற்றி தரும் நேரமாக உள்ளது , ஆக நாம் அறிய வேண்டியது என்னவெனில் சந்திரவேளையான இரவு பொழுது நமக்கு ஞான சக்தியை பெருக்க வழி செய்கிறது என்பதை அறிய வேண்டும்,
ஒரு ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள் சித்த ஞானிகள். தவசிகள் பகல் உச்சிவேளையில் இளைப்பாறுவார்கள், வெளியில் அதிகம் நடக்க மாட்டார்கள், காரணம் அறிவீராக உச்சி சூரியவேளை ருத்ரவேளை எனக் கூறுவார்கள், அந்த வேளையில் நாம் சூரியைனை கண்டால் நீர்சக்தி. வாசிசக்தி. தீய சக்தியோடு வசிய சக்தியையும் எடுத்து விடும் ஆற்றல் ருத்ர சூரியனுக்கு உண்டு, அதனால் உச்சிவேளையில் சூரியனை காணமாட்டார்கள், ஆனால் சந்திர உச்சி வேளை (இரவு) மாற்றாக செயல்நடக்கும், சந்திரன் உடலுக்கும். மனதிற்கும் சக்தியை கொடுப்பார், அதனால்தான் சித்தர்கள் பகலில் வெளியில் வராமல் குகையிலேயே இருந்தார்கள், (கண்பார்வை பலத்தையும் இரவு விழிப்பதற்காக பயிற்சி செய்து பலப்படுத்தினார்கள்,) இரவில் வந்து பூஜை முடித்து காலை உதயசூரியனை மட்டும் பாதிகண்கள் மூடிய நிலையில் தரிசனம் செய்து குருவணக்கம் செய்திருக்கிறார்கள்,
இவ்விடம் ஒன்றை அறிக சந்திர வேளைக்கு சக்தி இருப்பது போல் சூரியனுக்கு சக்தி இல்லையா என தவறாக எண்ணக்கூடாது ஆத்ம சக்தி பெருக்கமும். செயல்பாடும் சூரியனே செய்து கொடுப்பார் என்பதை அறிக,
சக்தியை பெருவது இரவிலும். சக்தியை செயல்படுத்துவது பகலிலும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், நடுநிசி சூரியனுக்கும் உண்டு, சந்திரனுக்கும் உண்டு 12 பர் 1 சூரியனுக்கும். இரவு 12 பர் 1 சந்திரனுக்கும். உச்சிவேளையாகும், இதில் சந்திர உச்சி நேரத்தை சித்தர்கள் தங்கள் யாகத்திற்கும் ஞான பயிற்சிக்கும் பயன்படுத்தினார்கள், சந்திர வேளையில் எவ்வளவு பயிற்சி செய்தாலும் நன்மையே, இன்னொரு ரகசியத்தையும் தெரிந்து கொள்ளுங்கள், புதிதாக மாந்திரீக சித்து பயிற்சி செய்பவர்கள் பௌர்ணமி ஒளியில் முதன் முதலில் தொடங்குவதும் இதற்குத்தான், சித்தர்களும் கிரியில் அமர்ந்து தியானிப்பதும். யாகம் நிகழ்த்துவதற்கும் சந்திர ஈர்ப்பே காரணமாகும், மனித உயிர்களுக்கு மனவேகத்தை உந்துதல் சக்தி . ஈர்ப்பு சக்தி இவைகளை தருவதே சந்திர ஒளி என்பதை அறிந்திருந்ததால் அந்த சந்திரவேளையை தேர்ந்தெடுத்தார்கள், வளர்பிறையை நாமும் முகூர்த்தமாக விரும்புவதும் இதற்குத்தான், சந்திரவளர்ச்சியை போல் நம் வாழ்வும் வளரும் என நம்பிக்கை மட்டும் அல்ல , மேற்க்கண்ட உண்மையும் கூட, அசுபத்தை தேய்பிறையில் செய்யலாம், பரிகாரத்தையும் தேய்பிறையில் செய்யலாம்.சுபநிகழ்வை வளர்பிறையில் செய்ய சொன்னது சுபம் வளர்வதற்குத்தான், ஆக ஞானசித்தி புத்தி சந்திர வேளையில் தான் பெறலாம், பெறவும் முடியும், எனவே மந்திர சித்துகளுக்கு இரவு பொழுது சிறந்தது , அதற்காக சூரியனுக்கு சக்தியில்லை என தப்பு கணக்கு போடக்கூடாது , சந்திரன் சக்தி பெறுவதும். மனிதன் மற்றும் ஏனைய உயிர்கள் சக்தி பெறுவதும் சூரியனிடமிருந்துதான் என்பதே உண்மை, சந்திரனும். மரமும் மற்றும் மூலிகைகளும் சூரியனிடமிருந்து பெற்ற சக்தியோடு தன் சக்தியையும் இரவில் உமிழ்வார்கள் அதை மனிதன் எளிமையாக பெறமுடியும், மனதை அடக்கி. வாசியை நிலை நிறுத்தினால் எளிமையாக பெறலாம், ஞானிகள் மரத்தடியில் வாழ்ந்த ரகசியமும் இதற்குத்தான், புத்தருக்கு கூட அரச மரத்தடியில் தான் ஞானம் கிடைத்தது என்று வரலாறு கூறுகிறது , சித்தர்கள் சந்திர தரிசனம் சிவனாக நினைத்து செய்ததும் இதற்குத்தான் ஒவ்வொரு பிறையும் ஒவ்வொரு தெய்வமாக பாவித்து வணங்குவதும் இதற்குத்தான், எனவே சந்திரவேளையை நிச்சயம் பயன்படுத்துங்கள், முன்னோடிகள் பலனை பெற்றது அப்படித்தான், நிம்மதி மட்டுமே இரவில் என நினைக்காதீர்கள், ஞானமும் தான் கிடைக்கும்
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment