Wednesday 27 April 2016

தலைமுடிச்சு ரகசியம்
மாந்திரீகத்தில் ஈடுபடக்கூடியவர்கள் தலைமுடியில் சிறிய முடிச்சு போட்டு வைக்கலாம், அல்லது முடி வளர்த்து கொண்டையும் போட்டுக் கொள்ளலாம், இவ்வாறு செய்தால் பில்லி. சூன்யம். செய்வினை கோளாறுகள். பேய் பிசாசு இவைகளின் சக்தி நம்மிடம் செயலிழந்து விடும், இதனால் நம் மந்திரமும் செயலிழந்து போகாது , எதிரி நமக்கு செய்யும் தீங்கு நம்மை ஒன்றும் செய்யாது, தெரியாமல் செய்த பாவம் நம்மை அண்டாது , நம் உடலுக்கு கட்டு கட்டினார் போல் நம்மை பாதுகாக்கும், பிராமினர். நம்பூதிரிகள். சாஸ்த்திர விற்ப்பன்னர்கள் மொட்டையே அடித்தாலும் பின் தலையில் சிறிது முடிவிட்டு அதில் ஒரு முடிச்சு போட்டு வைத்து மீத எல்லா முடியும் மொட்டை அடித்து கொள்வார்கள், சுத்தமாக மொட்டை அடிக்க மாட்டார்கள், இவர்கள் ஏன் முடிவளர்த்து கொண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால் இதற்குத்தான், புண்ணிய சக்தி தன்னை விட்டு போகாமல் இருக்கவும். பாவசக்தி தாக்காமல் இருக்கவும் தலையில் காப்பாக எண்ணி முடிச்சு போட்டு கொள்வார்கள்,
கிராம புறங்களில் பேய் பிடித்த பெண்ணுக்கு தலையில் ஒருமுடிச்சு போட்டு பின்பு பேய் விரட்டுவார்கள், அதுவும் ஒரு பாதுகாப்பான கட்டு ஆகும், தீட்டுபடக்கூடிய பெண்கள் முடிவளர்த்து கொண்டு கொண்டை போட்டுக் கொள்வதும் இதற்குத்தான், தீட்டினால் தீயசக்தி அண்டால் தலை கொண்டை காக்கும், முடியில் போடும் முடிச்சுக்கு அவ்வளவு சக்தி உண்டு, தன்னால் தலைமுடியில் சடை பின்னிக்கொண்டால் அதை தெய்வ சடை என்பார்கள், அக்காலம் முதற்கொண்டே விஷயம் அறிந்த ஒரு சில பிரிவினரே இதை முறையாக கடைபிடித்தனர், ராஜாக்கள் காலத்தில் கூட ஆண்கள் தலைமுடி வளர்ப்பதை கௌரவமாக கொண்டார்கள், தலைமுடியை கிரிடமாக அலங்கரிப்பதும் உண்டு, தலைமுடியில் கொண்டை இல்லாமல் இருப்பது அழிவை குறிப்பதாகும், அது நல்ல சகுனமாகவும் இன்று வரை மக்கள் ஏற்பதில்லை , மகாபாரதத்தில் பாஞ்சாலி தலைமுடியை விரித்து அழிப்பதற்காக சபதம் செய்தார், மதுரையை எரித்த கண்ணகியும் கூந்தலை விரித்து சபதம் செய்து பின்னர் மதுரையை அழித்ததாகவும் வரலாறு கூறுகிறது , ஆக தலைமுடியில் முடிச்சு இல்லாத போது அழிவு குணம் நமக்கே தூண்டுதலாகும் , கோபம். காமம். அடக்காது இது சத்தியமான உண்மை, இதன் பெருமை அறிந்தவர்கள் ரகசியம் என காத்துக் கொண்டார்கள்,
மேலும் நம் தலைமுடி தானம் இறைவனுக்கு ஏற்றதாகும், நம் தலைமுடி கிரஹ சக்தியை நம் எண்ணத்திற்கு ஏற்றவாறு இழக்கவும். இழுக்கவும் அதற்கு சக்தி உண்டு, அதில் போடும் முடிச்சு என்பது காப்பு , அழகுக்காக என்று சாதாரணமாக நினைத்து விடவேண்டாம், முடி வெட்டும் சாதனங்கள் வந்த பின்பு கூட ரகசியம் அறிந்தவர்கள் முடியை நீக்குவதில்லை, முடி வளர்த்து கொண்டை இடுவது ஆன்மிகத்தின் அடையாளம் என்று கூறி விஷயத்தை வெளிகொணர விரும்பாமல் மழுப்பி விட்டார்கள், விஷயம் அறியாதவர்கள் அதை கிண்டல் பேசி காலத்தை கடத்திவிட்டார்கள், ஆன்மிக சிந்தனை கொண்ட தாங்கள் உண்மையை நீங்களே அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள், அவரவர் விதிப்படி உண்மை புலப்படும், இன்னும் பல விஷயங்கள் இந்த முடியில் அடங்கியுள்ளதை அறிவீர்கள், அத்தனையும் சித்தர்கள் தலைகொண்டையில் முடித்த தெய்வ ரகசியங்களாகும்
Like
Comment

No comments:

Post a Comment