Saturday 9 April 2016

இன்று வியாழன் குரு ஸ்பெஷல்
குரு மந்திரம் மற்றும் 108 போற்றி வியாழன் கிரகத்தின் விஞ்ஞான சிறப்புகள்
காலை வணக்கம் அன்பர்களே
ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவராவார். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று.. காசு, பணம் எனப்படும் பொருட்செல்வம். இன்னொன்று.. குழந்தைச் செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திர ஸ்தானங்களின் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும். ‘குரு இருக்கும் இடம் பாழ்.
பார்க்கும் இடம் விருத்தி’ என்பார்கள். அதன்படி, இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும். குருவுக்கு பல்வேறு ஆதிக்கம் உள்ளது. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி ஆகியவை குருவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.
சமூக அந்தஸ்து, அரசியல் பதவி, ஆன்மிக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், தர்ம ஸ்தாபனங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரி கட்டுதல், அறங்காவலர் பதவி, நீதிபதி, கவர்னர் போன்ற அரசு உயர் பதவியில் அமர்வதற்கு குருபகவானின் அருள்கடாட்சம் தேவை.
வழிபாடு - பரிகாரம்
குரு பகவானின் அருள் பார்வை கிடைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குரு பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். குரு திசை நடப்பவர்கள், திருமண, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் தினமும் ‘ஓம் பிம சிவய வசி குரு தேவாய நம’ என்று 108 முறை சொல்லி வரலாம். கோசார குரு சரியில்லாமல் இருப்பது, அதாவது ஜென்ம குரு, அஷ்டம குரு, விரய குரு உள்ளவர்கள் தினமும்
‘ஓம் குரு தேவாய வித்மஹே பிரம்மானந்தாய தீமஹி தந்நோ குரு பிரசோதயாத்’
என்ற காயத்ரி மந்திரத்தை 54 முறை சொல்லி வரலாம். நாளை (26-ம் தேதி) குருபகவான் ஜெயந்தியாகும். இந்நாளில் குருபகவானை வணங்கி அவரது அருள் கடாட்சம் பெறுவோமாக.
குருவின் அம்சங்கள்
கிழமை: வியாழன்
தேதிகள்: 3, 12, 21, 30
நட்சத்திரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நிறம்: மஞ்சள்
ரத்தினம்: கனக புஷ்பராகம்
தானியம்: கொண்டைக் கடலை
உலோகம்: பொன் (தங்கம்)
ஆடை: தூய மஞ்சள்
ராசி: தனுசு - மீனம்
உச்ச ராசி: கடகம்
நீச்ச ராசி: மகரம்
தொண்டு: வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை அல்லது கொண்டை கடலை கொடுக்க வேண்டும்.
நோன்பு நாள்: வியாழன்.
பூஜை: ருத்ர அபிஷேகம்.
ருத்ராட்சம்: 5 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
குரு காயத்ரி மந்திரம்
வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்||
குரு (வியாழன்) தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குரு தசை அல்லது குரு அந்தர் தசையின் போது:
குருவின் கடவுளான சிவபெருமானைத் தினமும் வழிபடவேண்டும்.தினசரி ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும்.
குரு மூல மந்திர ஜபம்:
"ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ",
40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும்.
குரு 108 போற்றி
ஓம் அன்ன வாகனனே போற்றி
ஓம் அங்கிரஸ புத்ரனே போற்றி
ஓம் அபய கரத்தனே போற்றி
ஓம் அரசு சமித்தனே போற்றி
ஓம் அயன் அதிதேவதையனே போற்றி
ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி
ஓம் அறிவனே போற்றி
ஓம் அறிவுக்கதிபதியே போற்றி
ஓம் அறக் காவலே போற்றி
ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் இந்திரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி
ஓம் ஈரெண்ணாண்டாள்பவனே போற்றி
ஓம் உதித்தியன் சோதரனே போற்றி
ஓம் உபகிரகமுடையவனே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் எளியோர்க் காவலே போற்றி
ஓம் ஐந்தாமவனே போற்றி
ஓம் ஏடேந்தியவனே போற்றி
ஓம் கருணை உருவே போற்றி
ஓம் கற்பகத் தருவே போற்றி
ஓம் கடலை விரும்பியே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் கசன் தந்தையே போற்றி
ஓம் கந்தனருள் பெற்றவனே போற்றி
ஓம் கடகராசி அதிபதியே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காக்கும் தேவனே போற்றி
ஓம் கிரகாதீசனே போற்றி
ஓம் கீர்த்தியருள்வோனே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் குணசீலனே போற்றி
ஓம் குரு பகவானே போற்றி
ஓம் சதுர பீடனே போற்றி
ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி
ஓம் சான்றோனே போற்றி
ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
ஓம் சிறுமையழிப்பவனே போற்றி
ஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றி
ஓம் கராச்சாரியனே போற்றி
ஓம் சுப கிரகமே போற்றி
ஓம் செல்வமளிப்பவனே போற்றி
ஓம் செந்தூரில் உய்ந்தவனே போற்றி
ஓம் தங்கத் தேரனே போற்றி
ஓம் தனுர்ராசி அதிபதியே போற்றி
ஓம் தாரை மணாளனே போற்றி
ஓம் த்ரிலோகேசனே போற்றி
ஓம் திட்டைத் தேவனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெளிவிப்பவனே போற்றி
ஓம் தேவ குருவே போற்றி
ஓம் தேவரமைச்சனே போற்றி
ஓம் தேவர்குலக் காவலனே போற்றி
ஓம் நற்குணனே போற்றி
ஓம் நல்லாசானே போற்றி
ஓம் நற்குரலோனே போற்றி
ஓம் நல்வாக்கருள்பவனே போற்றி
ஓம் நலமேயருள்பவனே போற்றி
ஓம் நாற்சக்கரத் தேரனே போற்றி
ஓம் நாற்கோணப் பீடனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நீதிகாரகனே போற்றி
ஓம் நீதிநூல் தந்தவனே போற்றி
ஓம் நேசனே போற்றி
ஓம் நெடியோனே போற்றி
ஓம் பரத்வாஜன் தந்தையே போற்றி
ஓம் பாடியில் அருள்பவனே போற்றி
ஓம் பிரஹஸ்பதியே போற்றி
ஓம் பிரமன் பெயரனே போற்றி
ஓம் பீதாம்பரனே போற்றி
ஓம் புத்ர காரகனே போற்றி
ஓம் புனர்வசு நாதனே போற்றி
ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி
ஓம் பூரட்டாதிபதியே போற்றி
ஓம் பொற்குடையனே போற்றி
ஓம் பொன்னாடையனே போற்றி
ஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றி
ஓம் பொன்னிற த்வஜனே போற்றி
ஓம் மணம் அருள்பவனே போற்றி
ஓம் மகவளிப்பவனே போற்றி
ஓம் மஞ்சள் வண்ணனே போற்றி
ஓம் மமதை மணாளனே போற்றி
ஓம் முல்லைப் பிரியனே போற்றி
ஓம் மீனராசி அதிபதியே போற்றி
ஓம் யானை வாகனனே போற்றி
ஓம் யோகசித்தி சோதரனே போற்றி
ஓம் ரவிக்கு உற்றவனே போற்றி
ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
ஓம் வடதிசையனே போற்றி
ஓம் வடநோக்கனே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வல்லவனே போற்றி
ஓம் வச்சிராயுதனே போற்றி
ஓம் வாகீசனே போற்றி
ஓம் விசாக நாதனே போற்றி
ஓம் வேதியனே போற்றி
ஓம் வேகச் சுழலோனே போற்றி
ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் வியாழனே போற்றி
‌மிக‌ப்பெ‌ரிய ‌‌வியாழ‌ன் ‌கிரக‌ம்
சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரக‌‌ம் எ‌ன்ற பெருமையை‌ப் பெ‌ற்றது வியாழனாகு‌ம். ‌மிக‌ப்பெ‌ரிய ‌கிரகமாக ‌விள‌ங்கு‌ம் ‌வியாழனை, ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் ரோமானிய ஆட்சிக் கடவுளான ஜூபிட‌ரின் பெயரா‌ல் அழை‌க்க‌ப்படு‌கிறது.
சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள ‌வியாழ‌ன் கிரகம், வி‌ண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடு‌த்தபடியாக பிரகாசமாகத் தெரியக் கூடிய ‌கிரகமாகும்.
இது 88,736 மை அதாவது 1,42,800 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் பர‌ப்பளவு கொ‌ண்டது. வியாழனின் சுற்றளவு பூ‌மியைப் போல 11 மடங்கு அதிகமாகும்.
வியாழ‌ன் ‌கிரக‌த்‌தி‌ற்கு உ‌ள்ள‌த் துணை‌க் ‌கிரக‌ங்க‌ளி‌ல் இதுவரை 28 ‌கிரக‌ங்க‌ள் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்‌டு‌ள்ளன. 1610ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் நா‌ன்கு துணை ‌கிரக‌ங்களை க‌லி‌லியோ க‌ண்டு‌பிடி‌த்தா‌ர்.
இ‌ந்த ‌கிரக‌ம் முழுவது‌ம் வா‌யு‌க்களா‌ல் ‌நிர‌ம்‌பி உ‌ள்ளது. இ‌ந்த வா‌யு‌க்க‌ளி‌ன் ‌பிர‌திப‌லி‌ப்பா‌ல்தா‌ன் இ‌ந்த ‌கிரக‌ம் ‌பிரகாசமாக‌க் கா‌ட்‌சி அ‌ளி‌க்‌கிறது. அ‌திக‌ப்படியான வா‌யு‌க்களா‌ல் இ‌ந்த ‌கிரக‌த்‌தி‌ல் கடுமையான ஒரு அழு‌த்த ‌நிலை காண‌ப்படு‌கிறது.
ஆனால் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற கனமற்ற வாயுக்க‌ள் ‌நிர‌ம்‌பி‌யிரு‌ப்பதா‌ல் பூமியை விட வியாழன் அட‌ர்த்தி குறைவானதாக உ‌ள்ளது.
‌வியாழன் கிரகத்துக்குள் அடிக்கடி புயல்க‌ள் அடி‌க்கு‌ம். மூன்று பூமிக்கு இணையான பரப்பள‌வி‌ல் வீசிய ஒரு புயல், பல நூறு ஆண்டுகளுக்கு நீடித்து‌ள்ளது. தொலைநோக்கியால் பார்த்தால் வியாழன் கிரகத்தின் நிலாக்களைக் காணலாம்.
கடந்த 1995-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அனுப்பிய கலீலியோ விண்கல‌த்‌தி‌ல் இரு‌ந்த செ‌‌ன்ற ஆய்வுக்கலம், வியாழன் கிரகத்தின் உள்பகுதி படங்களை எடுத்து அனுப்பியது.
கலீலியோ, பூ‌மி‌யி‌ல் இரு‌ந்து வியாழன் கிரகத்தை செ‌ன்று அடைவதற்கு 6 ஆண்டுகள் ஆயின. இ‌வ்வளவு ஆ‌ண்டுகால‌ம் பய‌ணி‌த்து அ‌ந்த கல‌‌ம் ஒரு ம‌ணி நேர‌த்‌தி‌ல் நசு‌ங்‌கி‌வி‌ட்டது எ‌ன்றா‌ல் ந‌ம்பு‌வீ‌ர்களா? ஆ‌ம் வியாழன் கிரகத்‌தி‌ல் ‌நிலவு‌ம் கடுமையான அழுத்தத்தால் நசுக்கப்பட்ட ஆய்வு கலத்தால் அங்கு ஒரு மணி நேரமே தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆனால் அதற்குள் அக்கலம் பல முக்கியமான தகவல்களை பூமிக்கு அனுப்பி விட்டது.
எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் வியாழ‌ன் ‌கிரக‌த்‌தி‌ற்கு‌ச்‌ செ‌ல்லு‌ம் ‌வி‌ண்கல‌ங்க‌ள், ‌‌கிரக‌த்‌தி‌ற்கு‌ள் ‌நிலவு‌ம் அ‌திக அழு‌த்த‌த்தை‌த் தா‌ங்கு‌ம் வச‌தியை‌ப் பெ‌ற்‌றிரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் வடிவமை‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம்.
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment