Saturday 9 April 2016

இன்று புதன் ஸ்பெஷல்
புதன் மூல மந்திரம்
"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக புதாய நமஹ",
48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும்.
புதன் ஸ்தோத்திரம்
ப்ரிங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்!!
புதன் காயத்ரி மந்திரம்
கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி|
தந்நோ புத: ப்ரசோதயாத்||
புதன் 108 போற்றி
ஓம் அழகனே போற்றி
ஓம் அருளாகரனே போற்றி
ஓம் அறிவிற்கு உவமையே போற்றி
ஓம் அந்தணர்க் காவலே போற்றி
ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அழகுருவே போற்றி
ஓம் அம்பு பீடனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அலங்காரனே போற்றி
ஓம் ஆனந்தனே போற்றி
ஓம் ஆயில்ய நாதனே போற்றி
ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
ஓம் இரு வாகனனே போற்றி
ஓம் இளை நாதனே போற்றி
ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
ஓம் இசைஞானமருள்பவனே போற்றி
ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
ஓம் உயர்ந்தவனே போற்றி
ஓம் உகந்தவனே போற்றி
ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
ஓம் உடலிற் தோலானவனே போற்றி
ஓம் கலைவாணனே போற்றி
ஓம் கல்வியருள்பவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
ஓம் கவியரசே போற்றி
ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
ஓம் கிரஹபதியே போற்றி
ஓம் கிரகபீடாஹரனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
ஓம் குஜன் பகைவனே போற்றி
ஓம் குதிரை வாகனனே போற்றி
ஓம் கேடயதாரியே போற்றி
ஓம் கேட்டை நாதனே போற்றி
ஓம் சசி சுதனே போற்றி
ஓம் சந்திர குலனே போற்றி
ஓம் சத்வ குணனே போற்றி
ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுப கிரகமே போற்றி
ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞான நாயகனே போற்றி
ஓம் தவசீலனே போற்றி
ஓம் தவயோகியே போற்றி
ஓம் தயாகரனே போற்றி
ஓம் தனிக்கோயிலானே போற்றி
ஓம் தாரை மகனே போற்றி
ஓம் தரித்ர நாசகனே போற்றி
ஓம் திருவுருவனே போற்றி
ஓம் திருவெண்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் துதிக்கப்படுபவனே போற்றி
ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனே போற்றி
ஓம் தேவனே போற்றி
ஓம் தேரேறி வருபவனே போற்றி
ஓம் நக்ஷத்ரேசனே போற்றி
ஓம் நல்லுரு அருள்பவனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நாயுருவி சமித்தனே போற்றி
ஓம் நான்காமவனே போற்றி
ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் பயிர்க் காவலனே போற்றி
ஓம் பசும்பயறு விரும்பியே போற்றி
ஓம் பச்சை வண்ண கிரகமே போற்றி
ஓம் பதினேழாண்டாள்பவனே போற்றி
ஓம் பித்தளை உலோகனே போற்றி
ஓம் பின்னகர்வுடையோனே போற்றி
ஓம் பிரமனருள் பெற்றவனே போற்றி
ஓம் புராணத் தேவனே போற்றி
ஓம் புலவர் பிரானே போற்றி
ஓம் புலமையளிப்பவனே போற்றி
ஓம் பூங்கழலடியனே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் புரூரவன் தந்தையே போற்றி
ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
ஓம் பொன்னணியனே போற்றி
ஓம் பொற்கொடியோனே போற்றி
ஓம் பொன்மேனியனே போற்றி
ஓம் பொன்னாடையனே போற்றி
ஓம் போகமளிப்பவனே போற்றி
ஓம் மணிமுடியனே போற்றி
ஓம் மரகதப் பிரியனே போற்றி
ஓம் மனோகரனே போற்றி
ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனே போற்றி
ஓம் மதுரையில் பூசித்தவனே போற்றி
ஓம் ரவி மித்ரனே போற்றி
ஓம் ரவிக்கருகிருப்பவனே போற்றி
ஓம் ரேவதிக் கதிபதியே போற்றி
ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வல்லபிரானே போற்றி
ஓம் வாட்கரனே போற்றி
ஓம் வடகீழ் திசையனே போற்றி
ஓம் வாக்கானவனே போற்றி
ஓம் வாழ்வளிப்பவனே போற்றி
ஓம் வித்தகனே போற்றி
ஓம் விஷ்ணுரூபனே போற்றி
ஓம் விஷ்ணு அதிதேவதையனே போற்றி
ஓம் வைஸ்யனே போற்றி
ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனே போற்றி
ஓம் ஜம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் புத பகவானே போற்றி
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் ‘பொன்’ என்பது செல்வத்துக்கான அதிபதி குருவை குறிக்கும். ஜாதகத்தில் குருவின் பலம் இருப்பதைவிட புதன் பலமாக இருக்க வேண்டும் என்பதையே சூசகமாக குறிப்பிட்டுள்ளனர்.
கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால் பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். நம் வாழ்க்கைக்கு அடிப்படையான கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன். சொல்லாற்றல், மதிநுட்பம், சமயோஜித பேச்சு, வழக்குரைத்தல், கணக்கு, ஆடிட்டிங், பத்திரிகை, ஜோதிடம், வான சாஸ்திரம் ஆகிய துறைகளுக்கும் மூளை, நரம்பு மண்டலம் போன்ற மிக முக்கிய உறுப்புகளையும் கட்டுப்படுத்துபவர் புத பகவான்தான். அவர் அருள் இருந்தால் இத்துறைகளில் சிறந்து விளங்கலாம்.
புதனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: புதன்
தேதிகள்: 5, 14, 23.
நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி
ராசி: மிதுனத்தில் ஆட்சி & கன்னியில் உச்சம்
நிறம்: பச்சை
ரத்தினம்: பச்சை மரகதம்
தானியம்: பச்சைப்பயறு
ஆடை: பச்சை
வழிபாடு, பரிகாரம்:
மதுரையில் மீனாட்சி அம்மன் புதனாகவே அருள்பாலிக்கிறார்.
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் இருக்கும் திருவெண்காடு புதன் தலமாகும். பிரம்ம வித்யாம்பாள் சமேத ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தில் தனி சன்னதியில் புத பகவான் காட்சி தருகிறார்.
நவதிருப்பதிகளுள் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும்.
‘ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்தோ புத பிரசோதயாத்’
என்ற புத காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் மம் ஹ்ரி உம் சிவ புத தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
பச்சைப் பயறு வேகவைத்து பசுமாட்டுக்கு வழங்கலாம். புத பகவானின் திருவருள் கிடைத்தால் கல்வியில் மாணவர்களுக்கு நாட்டம் ஏற்பட்டு அதிக மதிப்பெண்களை குவிப்பார்கள்.
மெர்க்குரி எனப்படும் புதன் கோளை நோக்கி, மெஸஞ்சர் எனும் விண்கலத்தை, அமெரிக்கா அனுப்பியுள்ளது. சூரியனுக்கு வெகு அருகாமையில் உள்ள புதன் கோளை நோக்கி, கடந்த 30 ஆண்டுகளில், முதன்முறையாக விண்கலத்தை அமெரிக்காவின் நாஸா நிறுவனம் ஏவியுள்ளது. பயணத் தூரம் 800 கோடி கிலோமீட்டர் பயண நேரம் ஆறரை ஆண்டுகள். விண்கலம் செலுத்தப்படும் நிகழ்ச்சி, வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது. 1970 களின் நடுப்பகுதியில், மரினர்-10 எனும் விண்கலம், புதனை நோக்கி ஏவப்பட்டது. அது முதற்கொண்டு, புதன் கோள் பற்றிய ஆராய்வில், அறிவியலாளர் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எல்லாம் திட்டமிட்டபடி நிறைவேறினால் 2011 ஆம் ஆண்டில், புதன் கோளை வலம் வரும் முதல் விண்கலம் எனும் பெருமையை மெஸஞ்சர் பெறக்கூடும். இந்த விண்கலத்தில் இடம்பெற்றுள்ள 7 அறிவியல் கருவிகள், புதனை வலம் வரும் போது, ஓராண்டு முழுவதும், தரவுகளைச் சேகரிக்கும். புதன்கோளை மெஸஞ்சர் அணுகும் போது, 370 செல்சியஸ் வெப்ப நிலையினால் அது தள்ளப்படும். ஆனால், அதன் கருவிகள் அறை வெப்ப நிலையில் செயல்படும். மெஸஞ்சர் விண்கலப் பயணம் தொடர்பான அனைத்தையும் உருவாக்கித் தந்தது-ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம். மொத்தச் செலவு 42 கோடியே 70 இலட்சம் அமெரிக்க டாலராகும். புதன் கோளின் அனைத்துப் பக்கங்களிலும், மெஸஞ்சர் பார்வையை ஓட விடும் என்று அறிவியலாளர் தெரிவிக்கின்றனர். புதன் கோளானது, சூரிய மண்டலத்தில் இடம் பெற்றுள்ள மிகவும் வெப்பமான கோள்களில் ஒன்றாகும். நண்பகலில் அதன் வெப்ப அளவு, 900 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். புதன் கோளில் பனி அதாவது ICE உண்டா என்று மெஸஞ்சர் ஆராயவிருக்கின்றது. பூமியில் உள்ள வானொலி தொலைநோக்காடிகள் மூலமாகப் பார்த்த போது, புதன் கோளில் பனி இருப்பதற்கான வாய்ப்பு தெரியவந்தது. புதன் கோளின் கட்டமைப்பு, விசித்திரமானது. அதன் மூன்றில் இராண்டு பகுதி, இரும்பாலானது. பூமி போல அது உருப் பெற்ற, பின்னர் கற்களை இழந்து விட்டிருக்கலாம் என்கிறார் மெஸஞ்சரின் முதன்மை அறிவியலாளரான ஸீன் சாலமன்.
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment