Saturday 9 April 2016

பழங்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அற்புத சக்திகளோடு இருந்தார்கள் என்றும் இக்காலத்தில் நம்மிடம் அந்த சக்திகள் ஏன் இல்லை என்றும் அதை நாம் அதை மீண்டும் பெற முடியுமா என்ற ஆராய்ச்சியை நான் ஆரம்பித்திருப்பதாக ஏற்கனவே பதிவிட்டிருந்தேன் அது பற்றி முதல் பகுதியை நாம் பார்க்க போகிறோம்
சித்தத்தை பற்றி அறிந்தவர்கள் சித்தர்கள் தன்னை தானே உணரும் திறன் அவர்களுக்கு இருந்தது அதாவது கண்ணை மூடி தியான நிலையில் அமர்ந்து தன் உடலுக்குள் நடக்கும் விஷயங்களையும் உள்ளுறுப்புகள் இயங்கும் விதத்தையும்உணர்ந்திருந்தார்கள் ஆனால் இக்காலத்தில் அப்படி பட்ட sensitive வான விஷயங்களை உணரும் திறன்களை இழந்து விட்டோம் அதற்கு காரணம் என்ன என்று பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ஆனாலும் நவீன விஞ்ஞானத்தின் துணைக்கொண்டு நம் உடலுக்குள் நடக்கும் விஷயங்களை பகுத்தறியும் அளவிற்கு ஓரளவு வளர்ந்திருக்கிறோம் எனவே நவீன மருத்தவ பரிசோதனை உபகரனங்களை கொண்டு ஆன்மீக சக்திகளை ஆராயும் அளவிற்கு மனிதன் தலைப்பட்டுவிட்டான் அதன்படி நாம் நம் உடலுக்குள் கண்டுபிடித்த ஆச்சரியமான ஒரு பொருள் என்னவென்றால் அதன் பெயர்
D N A
DNA என்றால் மரபணு மரபணு என்றால் வழி வழியாக பல தலைமுறைகளை தாண்டி சென்றுகொண்டிருக்கும் ஒரு உயிரியல் தடயம் அதாவது உன் பிறப்புக்கு முன்பும் இறப்புக்கு பின்பும் சாட்சியாய் விளங்கும் ஒரு தடயம்
எனவே இதை பற்றி ஒரு Basic knowledge இருந்தால்தான் ஆன்மீக சக்தியின் மகத்துவத்தை அறிந்து கொள்ளமுடியும்
DNA என்பதன் முழு விளக்கம் Deoxyribo Nucleic Acid (டியாக்சிரைபோ நியூக்ளிக் ஆசிட்)
இந்த DNA என்பது மெல்லிய நீண்ட இழை போன்ற NUCLEOTIDES (நியூக்லியோடைட்ஸ்) என்ற மூலக்கூறால் ஆனது இந்த மூலக்கூறு நான்கு வகைகளாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது
அவை Adenine, Thymine, Cytosine, Guanine என்பவையாகும்
எனவே சுருக்கமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அவற்றின் முதல் எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன அதாவது
A, T , C , G என்று பெயரிடப்பட்டுள்ளது
மேலம் என்னுடய கட்டுரை அடுத்த பதிவில் தொடரும் அதற்கு தலைப்பு
விஞ்ஞானம் தேடும் மெய்ஞானம்
தலைப்பு நல்லாயிருக்கா அன்பர்களே
பிடிச்சிருந்தா Share it please
Interested peoples can follow me
Like
Comment

No comments:

Post a Comment