Friday 20 May 2016

மன விருப்பங்களை நிறைவேற்றும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்லூம் ஐம் |
மஹாலக்ஷ்மீம் மம வாஞ்சிதார்த்த சித்திம் |
க்குரு க்குரு ஸ்வாஹா ||
இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஜெபிக்கத் துவங்கி 23 ஆயிரம் தடவை ஜெபித்து முடிக்க மந்திரம் சித்தியாகி நமது விருப்பம் நிறவேற ஏற்ற சூழல் உருவாகும்.
ஜப ஆரம்பத்தில் உங்கள் நோக்கம் இன்னதென்று குறிப்பிட்டு அது நிறைவேறும் பொருட்டு இம்மந்திரம் ஜெபிக்கிறேன் என்று சங்கல்பம் செய்து பின் மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்..
ஜப ஆரம்பத்தில் விளக்கேற்றி ஸ்ரீ மகாவிஷ்ணு சமேத ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி இத்தீப ஜோதியில் வந்தருள வேண்டும் என்று ஊதுவத்தி காண்பித்து 3 தடவை வேண்டவும்.பின்னர் விளக்கின் பாதத்தில் சந்தனம் ,பன்னீர் அல்லது ரோஸ்வாட்டர் கலந்த நீரைக் கொஞ்சம் விட்டு விளக்கிற்குச் சந்தனம் குங்குமம் வைக்கவும்.
முதல் நாள் மற்றும் கடைசி நாள் சிறப்பாக நைவேத்யம் படைத்துப் பூஜிக்கவும். மற்ற நாட்களில் இயன்றதைப் படைத்து வழிபடலாம்.
வீட்டில் காலை மாலை சந்தி வேளையில் நறுமணம் வீசும்படி சாம்பிராணி அல்லது ஊதுவத்தி ஏற்றிவைக்கவும்.
ஆவாஹனாதி பூஜை விதிகள் அறிந்தவர்கள் முறைப்படி பூஜிக்கவும்.
23,000 ஜெபம் முடிந்து வேண்டிய காரியம் பலிக்கும் வரை இந்தக் காரியம் நடைபெற வேண்டி இம்மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று வெளியில் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகச் செய்யவும்.
ஜெப காலங்களில் சைவ உணவை மேற்கொள்ளவும்
Like
Comment

No comments:

Post a Comment