Friday 20 May 2016

தொழில் விருத்தி தரும் ஸ்ரீ ஐஸ்வர்யலட்சுமி மந்திரம்
வளர்பிறை வியாழக்கிழமை அன்று மாலை குளித்து முடித்துச் சுத்தமான ஆடை அணிந்து மஞ்சள் துண்டு மேல்வஸ்திரமாக அணிந்து அகல் விளக்கு அல்லது வெள்ளி விளக்கில் நெய் ஊற்றித் தாமரைத்தண்டு அல்லது பன்னீரில் நனைத்துக் காய்ந்த பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றவும்.
ஒரு கும்பத்தில் நீர் நிரப்பி அதில் இரண்டு ஏலக்காய்,இரண்டு கற்கண்டு, சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு,ஒரு மஞ்சள் பூசிய தேங்காய் வைத்து அதில் 11 மாவிலைகளைச் சுற்றி வைத்து கும்பத்திற்குப் பூச்சூடவும்.வடக்கு நோக்கி அமர்ந்து ஒரு வாழை இலையில் மஞ்சள் பொடியால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் கொஞ்சம் பச்சரிசி பரப்பி அந்தச் செம்பை அதன் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 தடவை ஜெபிக்கவும்.
நைவேத்தியமாக வெல்லம்,தேங்காய்த் துருவல்,ஏலக்காய் போட்டுக் காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பழங்கள் வைக்கவும்.மல்லிகை,பிச்சி (முல்லை ) அல்லது வாசனை உள்ள ரோஜாப் பூக்கள் ஜெபத்திற்கு உகந்தவை.
ஜெபம் முடிந்ததும் ஜெபம் யாருக்காகச் செய்யப்பட்டதோ அவர் தன் மீது அந்த கும்பதீர்த்தத்தை மாவிலையால் தொட்டுத் தெளித்துக் கொள்ளவும்.பின் கும்பதீர்த்தத்தை தொழிற்சாலை,கடை முழுவதும் தெளித்து விடவும்.சர்வ பீடை,கண் திருஷ்டி,தரித்திரம் நீங்கி லாபம் கொழிக்கத் துவங்கும்.
இந்தப் பூஜையைத் தீபாவளி,நவராத்திரி,மாதப்பிறப்பு போன்ற ஏதாவது சுப தினங்களில் வருடத்திற்கு 2 அல்லது 3 தடவை செய்து வர நிறைவான பலன்களை எதிர்பார்க்கலாம்.
மந்திரம்:-
ஓம் ஹ்ரீம் லக்ஷ்மீ | துர்பாக்ய நாசினி சௌபாக்ய ப்ரதாயினி |
ஸ்ரீம் ஸ்வாஹா ||
Like
Comment

No comments:

Post a Comment