Monday 30 May 2016

கேது கிரஹ தோஷ நிவாரணப் பரிகாரங்கள்
ஜனன ஜாதகத்தில் பாதகமான ஸ்தானங்களில் கேதுபகவான் அமையப்பெற்றவர்கள் கேதுபகவானின் தசை மற்றும் புத்தி நடைபெறும் காலங்களில் கீழ்க்கண்ட பரிகாரங்களில் ஏதாவது ஒன்றைச் செய்து வரப் பாதிப்புகள் பெருமளவில் குறையும்.
43 நாட்களுக்குத் தொடர்ந்து நாய்க்கு சப்பாத்தி அல்லது ரொட்டி கொடுக்கலாம்.
2.வெள்ளை அல்லது கருப்பு எள் தானமளிக்கலாம்.
3.ஒரு வெள்ளி நாணயத்தைப் பட்டு நூலில் கட்டி கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
4.பாய்,தரை விரிப்பு,போர்வை இவற்றை ஆன்மீக அல்லது புனித ஸ்தலங்களுக்கு தானமளிக்கலாம்.
5.வெள்ளி மோதிரம் அணியலாம்.
6. விநாயகர் அல்லது காலபைரவரைத் தொடர்ந்து வழிபட நல்ல பலன்களைத் தரும்.
7.காலபைரவருக்கு வாழை இலையில் பச்சரிசி பரப்பி அளிக்கலாம்.
8.திரயோதசி திதியில் விரதம் இருக்கலாம்.
9.மாலை வேளையில் விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றலாம்.
10.பிராமணர் அல்லது பூசாரிக்கு சர்க்கரை (சீனி) தானமளிக்கலாம்.
11.காலை மாலை பெற்றோரின் காலில் விழுந்து அவர்கள் ஆசியைப் பெறலாம்.
12.சுமங்கலிப் பெண்களுக்கு எள்ளுருண்டை தானம் செய்யலாம்.
13.பச்சை நிற கர்சீப் வைத்துக் கொள்வது நல்லது.
14.ஞாயிற்றுக்கிழமை அன்று கன்னிப்பெண்களுக்கு லசி வழங்கலாம்.
15.ஒரு ஐஸ் கட்டியை நாலு துண்டாக உடைத்து அதை ஓடும் நீரில் போட்டு விடவும்.
16.வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது.
17.வெண்பட்டு நூலை கையில் கட்டிக்கொள்ளவும்.
18.காதில் தங்கக் கம்மல்,கடுக்கன் அணியலாம்.
19.பஞ்சலோகத்தில் செய்யப்பட மோதிரம் அல்லது காப்பு அணியலாம்.
20.வாழைப்பழம்,கோதுமை இவற்றை ஒரு மஞ்சள் துணியில் வைத்து பிராமணர் அல்லது பூசாரிக்கு தானமளிக்கலாம்.
21.மஞ்சள் சந்தனம் நெற்றில் இட்டுக் கொள்ளவும்.
கேது கிரஹ தோஷ நிவாரண பரிகாரங்கள்
மேலே சொன்னவை பொதுவானது.மேலும்,அன்பர்கள் தங்கள் ஜாதகத்தில் கேது பகவான் 12 பாவங்களில் எங்கெங்கு இருந்தால் என்ன பரிகாரங்களைச் செய்து கொள்வது நன்மை தரும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
லக்னம் - சிறு இரும்பு உருண்டை வாங்கி அதற்க்கு சிகப்பு பெயிண்ட் அடித்து வீட்டில் வைத்துக்கொள்ளவும்.
2 ஆம் பாவம் - நெற்றியில் எப்போதும் குங்குமம் அணிந்து கொள்ளவும்.
3 ஆம் பாவம் - 3*3 அளவுள்ள செம்புத் தகடு வாங்கி வீட்டு முன்கதவின் மேல்பகுதியில் மாட்ட அல்லது பதிக்கவும்.
4 ஆம் பாவம் - தங்கம் போட்டுக் காய்ச்சிய பாலை அருந்தி வரவும்.
5 ஆம் பாவம் - பிராமணர் அல்லது பூசாரிக்கு மஞ்சள் பட்டுத்துணி தானம் தரலாம்.
6 ஆம் பாவம் - வீட்டிற்கு இரும்புப் பூட்டு பயன்படுத்தக்கூடாது .
7 ஆம் பாவம் - 4 எலுமிச்சம் பழம் எடுத்து தலையைச் சுற்றி ஓடும் நீர் அல்லது கடலில் போடவும்.
8 ஆம் பாவம் - நாய்க்கு உணவளித்து வரலாம்.
9 ஆம் பாவம் - வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளவும்.முடிந்த உதவிகளைச் செய்யவும்.
10 ஆம் பாவம் - வீட்டின் அஸ்திவாரத்தில் கொஞ்சம் பால் ஊற்றி பின்னர் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தேன் ஊற்றி சுட வைத்து அதையும் ஊற்றி விடவும்.
11 ஆம் பாவம் - பாலில் குங்குமப்பூ போட்டுக் காய்ச்சிக் குடித்து வரவும்.
12 ஆம் பாவம் - விநாயகரை வழிபட்டு வரவும்
Like
Comment

No comments:

Post a Comment