Thursday 5 May 2016

லிங்கம் வானத்தைக் குறிக்கும். ஆவிடை பூமியைக் குறிக்கும் விண்ணுக்கும் மண்ணுக்கும் சிவபெருமான் எழுந்தருளியதை இது குறிக்கின்றது. மற்றோரு கருத்தின்படி ஆவிடை குண்டத்தைக் குறிக்கும் அதில் எரியும் நெருப்பு லிங்கமாகும்.
எனவே சிவன் செந்தழல் வண்ணன் என்றும் அழைக்கப்படுகின்றார். குண்டம் போன்ற ஆவிடை உருவத்தையும், தீந்தழல் போன்ற ருத்ர பாகம் அருவுருவத்தையும் குறிக்கின்றது.இதுவே அருவுருவமாகிய சிவனின் சொரூபம் என கூறுகின்றனர்.
மேலும் லிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. இலிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.
ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்த பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும்.
ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பெண் வடிவமாகும், இதற்கு சக்தி பாகம் என்று பெயர்.
எல்லாம் வல்ல இறைவா போற்றி !!
தென்னாடுடைய சிவனே போற்றி !!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
ஜகத்தை காக்கும் ஈசனே போற்றி
Like
Comment

No comments:

Post a Comment