Friday 20 May 2016

சர்வ கார்ய சித்தி தரும் பிரதோஷ கால மந்திர ஜெபம்
இதை வளர்பிறை பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் ஜெபிக்கத் துவங்கி தொடங்கவும்.
தூய்மையான இடத்தில் அமர்ந்து தூய ஆடை அணிந்து விளக்கேற்றி ருத்ராக்ஷ மாலையால் மந்திரத்தை 1008 எண்ணிக்கை ஜெபம் செய்து பின்னர் ஹோமபாத்திரம் அல்லது ஹோம குண்டம் அமைத்து ஹோம அக்னியில் 108 எண்ணிக்கை ஒவ்வொரு தடவை மந்திரம் ஜெபிக்கும் பொழுது ஒரு அஸ்வகந்தா பூ (அமுக்கரா பூ) போடவும்.ஜெபம் முடிந்ததும் விளக்கிற்குச் சாம்பிராணி அல்லது ஊதுவத்தியினால் தூபம், கற்பூரதீபம் காண்பித்துப் பூஜையை நிறைவு செய்யவும்.இது போல் தொடர்ந்து 7 பிரதோஷங்கள் செய்ய வாழ்வில் சர்வ காரியங்களும் வெற்றியடைந்து வளமான வாழ்வு வாழலாம் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
மந்திரம் :
ஓம் நமோ பத்மாவதி பத்மநேத்ர |
வஜ்ர வஜ்ராங்குச ப்ரத்யக்ஷம் பவதி||
Like
Comment

No comments:

Post a Comment