Thursday 5 May 2016

ருத்திராட்சம் அணிவதின் பலன்கள்
ருத்திராட்சம் என்பன தெய்வத்தன்மையும், மருத்துவக் குணங்களும் ஒருங்கே கொண்டவை.
ருத்திராட்ச மணிகளைத் தரிப்பதால் உடம்பிற்கும் உள்ளத்திற்கும் உயிருக்கும் பல நன்மைகள் விளைவிக்கின்றன.
ருத்திராட்ச மணிகள் உடலுக்கு சுகத்தையும் ஆரோக்கியத்தையும் தருகின்றன.
உடம்பில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் ஒன்றையொன்று முந்தாமல் ஒரே சீராக வைத்திருக்க ருத்திராட்ச மணிகள் துணை செய்கின்றன.
தீய சக்திகள் உடம்பைத் தீண்டாமல் கவசமாக நின்று ருத்திராட்ச மணிகள் காக்கின்றன. உடம்பில் நோய்கள் வராமல் தடுக்கின்றன.
இதை அணிவதால் உள்ளம் அமைதியடைவதோடு, பக்குவமடைகிறது. உள்ளத்தில் பக்தி உணர்வுகள் பெருகின்றன. தீய எண்ணங்கள் தோன்றுவதில்லை.
அனைத்துக்கும் மேலாக ருத்திராட்சம் தரித்தவர் சிவபக்தர் என்ற பெருமிதக் களிப்பை உள்ளம் அடைகிறது.
மந்திர ஒலிகளை ஈர்க்கும் சக்தியை ருத்திராட்ச மணிகள் இயல்பாகக் கொண்டிருக்கின்றன. எனவே மந்திரங்களை உச்சரிக்கும் போதும், பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்யும் போதும், அவற்றின் முழுப்பலன்களை உடலும், உள்ளமும் உயிரும் பெறுவதற்கு ருத்திராட்சத்தின் துணை அவசியம் தேவைப்படுகிறது.
சிவாலய வழிபாட்டின் போது ருத்திராட்ச மணிகளை அணிந்து வரும் அடியவர்கள், சிறப்பாகச் சிவதரிசனம் செய்ய நந்தியும் சண்டிகேஷ்வரரும் உதவி புரிகிறார்கள்.
ஆயிரம் ருத்திராட்ச மணிகளை அணிந்து வருபவரைப் பார்த்து இவர் சிவனே என்று தேவர்கள் பணிகிறார்கள் என்று இவற்றின் மேன்மையைப் பிரமோத்தர காண்டாம் என்றும் நூல் கூறுகிறது.
ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இதற்கு மதம் ஒரு தடையல்ல, ருத்ராட்சசம் எந்த மதத்திற்கும் சொந்தமான பொருளும் அல்ல. இது பித்தம், தாகம், விக்கல் போன்றவற்றிற்கு நல்லது மற்றும் கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் ருத்ராட்சம் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.
Like
Comment

No comments:

Post a Comment