Thursday 5 May 2016

அருமருந்தாம் திருநீற்றை மேனியில் தரியுங்கள்
வரும் நோய்கள் வாராது சேய் நம்மைக் காப்பான்
2. ஆர்ப்பரித்து அலைபாயும் மனதினை அடக்கவே
ஆலவாய்க் கரசரை அகத்தினில் நினையுங்கள்
3. இடமனைத்தும் நிறைந்து நடம் புரியும் இடபனை
இசை பாடித் தொழுதால் இடர் தீர்த்து வைப்பான்
4. உமையவள் நேயனை உளமுருகி பணியுங்கள்
இமை போல் காத்திடுவான் இன்பங்கள் சேர்த்திடுவான்
5. உயிர்அனைத்துள் உறையும் முழுமுதல் ஈசனை
உருவமாய் அருவமாய் நிறைவுடன் துதியுங்கள்
6. சித்தத்தை தெளிய வைத்து சிந்தனையை சீர்படுத்தும்
சிவகாமி நேயனை நித்தமும் துதியுங்கள்
7. சிவசிவ' நாமத்தை சிந்தையில் இருத்துங்கள்
செய்கின்ற காரியங்கள் செவ்வனே முடிப்பான்
8. நமச்சிவாய நாமத்தை நாவாரப் பாடுங்கள்
நஞ்சுண்ட பரமனின் நெஞ்சு மிக மகிழ்வான்
9. நிமலனின் கமலத் திருவடியைப் பற்றுங்கள்
கவலைகள் தீர்ப்பான் கோலமிகு வாழ்வளிப்பான்
10. மலையத்துவன் மகளை மணம் புரிந்த ஈசனை
வலம் வந்து போற்றுவோம் பிழை யாவும் மறப்பான்
11. வில்வத்தின் இதழாலே மலர்மாலை சூட்டுங்கள்
ஆல்போல் தழைக்கின்ற சந்ததிகள் ஈவான்
Like
Comment

No comments:

Post a Comment